Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடை உரிமையாளரை சுட்டது
#1
<b>'உடுவில் வீடியோ கடை உரிமையாளரை சுட்டது சிறிலங்கா புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரி ரமேஸ் பண்டார'</b>
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:04 ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். குடாநாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் படுகொலைகளுக்கு சிறிலங்கா புலனாய்வுத்துறையினரே காரணம் என்று யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி குற்றம்சாட்டியுள்ளார்.


பளையில் கடந்த திங்கட்கிழமை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இளம்பரிதி கூறியதாவது:

யாழ். குடாநாட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர் கொலைகள், கொள்கைகள், சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. குழு மோதல்கள், கொலை அச்சுறுத்தல், பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. சிறிலங்கா காவல் நிலையங்களில் மக்கள் முறைப்பாடுகள் செய்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறிலங்கா காவல்துறையினரும் படையினரும் துணை போவதால்தான் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

அண்மையில் நடந்த கொலைகளில் படைத்தரப்பு நேரடியாக ஈடுபட்டது அம்பலமாகிவிட்டது. இணுவிலுள்ள சிறிலங்கா புலனாய்வு பொறுப்பதிகாரியான ரமேஸ் பண்டார என்பவர், உடுவில் வீடியோக்கடை உரிமையாளரை சுட்டு இருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் பொதுமக்களால் எமக்கு தரப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் நாம் அரசியல் பணியை செய்யமுடியாது வெளியேறி நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு போர்நிறுத்த உடன்பாடு நெருக்கடி நிலைக்கு உள்ளாகி வருகிறது.

யாழ். மாவட்டத்தின் இன்றைய நிலைமைகளை பாரதூரமாக நாம் கருதுகிறோம். போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இது தொடர்பாக ஆராய்ந்து மக்கள் மத்திலுள்ள நம்பிக்கையீனங்களை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
கடை உரிமையாளரை சுட்டது - by வினித் - 10-12-2005, 10:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)