10-11-2005, 05:48 PM
முலைகள், யோனி போன்ற சொற்களை(பெண்ணுறுப்புக்களை) ஆபாசமாகவும், கேவலமாகவும், வக்கிரமாகவும் பார்த்துப் பழக்கப்பட்ட சமூகத்தால் அச்சொற்கள் இயல்பாகக் கவிதைகளில் வரும்போது ஏற்றுக்கொள்ளவோ உள்வாங்கிக்கொள்ளவோ முடியாதுதான். பெண்ணின் உறுப்புக்களை பிறரை (கீழ்த்தரமாகப்)பேசுவதற்காகப் பயன்படுத்திப் பழக்கப்பட்டுப்போயின இவர்கள் நாக்கு - ஆனால் பண்பான வார்த்தைகளால் சமூக நடைமுறையை இயல்பாக சொல்வதை கேட்கக் கூச்சப்படுகின்றன செவிகள்.
காசி ஆனந்தனின் நறுக்குகள் கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.
முரண்
-----
இறைவனின்
வாகனம்
என்றான்
நாயை.
அவதாரரம்
என்றான்
பன்றியை.
இறைவனே
என்றான்
குரங்கை.
இவனே
திட்டினான்
என்னை-
"நாயே!"
"பன்றியே!"
"குரங்கே!"
காசி ஆனந்தனின் நறுக்குகள் கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.
முரண்
-----
இறைவனின்
வாகனம்
என்றான்
நாயை.
அவதாரரம்
என்றான்
பன்றியை.
இறைவனே
என்றான்
குரங்கை.
இவனே
திட்டினான்
என்னை-
"நாயே!"
"பன்றியே!"
"குரங்கே!"

