11-17-2003, 10:34 PM
அதீபன் உங்கள் ஆதங்கம் போல் எமக்கும் இருந்தது இதைப் பற்றி பழைய களத்தில் ஒரு முறை காரசாரமான விவாதம் கூட நிகழ்ந்தது....
பண்பாடு என்பது சொல்லிக் கொடுத்து வரும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் சிரமம்.....பெற்றோருடன் பிள்ளை வாழும் சூழல் மற்றும் பிள்ளை பழகும் மற்றைய சூழல்களின் தாக்கம் எப்படியும் பிள்ளையிடம் இருக்கும் காரணம் குழந்தைகள் அவதானிப்பின் மூலமே முதலில் பல விடயங்களைத் தெரிந்து கொள்ள முனைகின்றனர்....அதுதான் சொல்வார்கள் குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்காதே என்று.......அது மட்டுமன்றி அவர்களுக்கு பகுத்தாயும் திறனும் எதைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அறிவும் கிடையாது...அதை நாமும் எதிர்பார்க்க முடியாது.....ஆனால் அதைக் கொடுக்க வேண்டியவர்கள் பெற்றோர்...அதுவும் புலத்தில் இது விடயத்தில் நாம் பாடசாலைகளை அணுக முடியாது.....கேள்வி என்ன என்றால் இன்றைய நவீன தலைமுறைப் பெற்றோரில் எத்தனை பேர் தமது சமூகப் பண்பாடு பழக்கவழக்கத்தை அப்படியே தெரிந்து வைத்திருக்கின்றனர்...எத்தனை பேர் நாகரீகம் என்றும் எதிர்காலம் என்றும் இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்கின்றனர்...பெற்றோரே தெளிவில்லாத ஒரு நிலையில் வாழும் போது... பிள்ளைகளிடம் எமது பண்பாட்டைப் புகுத்தென்றால் யார் அதைச் செய்வது....?????????!
பெற்றோரிடம் தெளிவான சமூகப் பார்வையும் சரியான திட்டமிடலும் அவசியம்...அந்தளவில் எத்தனை ஆண் பெண் சோடிகள் பெற்றோர் ஆகத் தகைமை உடையவர்கள்...சும்மா காதல் அது இது என்று எவரும் திருமணம் செய்யலாம்...ஆனால் சமூகப் பொறுப்புள்ள பெற்றோராக அவர்கள் வரமுடியுமா என்பதை யார் தீர்மானிப்பது.....????இன்று எம்மைப் பார்த்தால் நாம் எமது பெறோரின் சீரிய வழிகாட்டலில் வளர்ந்தோம்...விடுதலைப் புலிகளை இன்று உலகமே போற்றுகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள கட்டுப்பாடும் ஒழுக்கமுமே...அதை பல சர்வதேசப் படைகளிடமே காண முடிவதில்லை என ஒரு சர்வதேச நிறுவனம் கூட வியந்து கூறியிருந்தது.....!...காரணம் சீரிய தலைமையும் வழிநடத்தலுமே.....குடும்பமும் ஒரு இயக்கம் போன்றதுதான்...அதற்கு தலைமைதாங்கும் பெற்றோர் சீரில்லையென்றால் போராளிகள் ஆகிய பிள்ளைகள் எப்படி சீராக இருப்பர்...ஈழத்தில் மற்றைய போராளிக் குழுக்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்களால், அவர்களின் செயல்களால் மக்கள் மத்தியில் நற் பெயரை வளர்க்கக் கூடிய தலைமையும் வழிகாட்டலும் இன்மையுமே அன்றி வேறில்லை......!
இன்று அதே நிலையில் தான் பல குடும்பங்கள் இருக்கின்றன...காரணம் தனிமைப்பட்ட, வழிநடத்தல் அற்ற வாழ்வியல் அமைப்பு முறை....வெள்ளையர்களுக்கு அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்ப கவுண்சிலிங் செய்கிறார்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வழிகாட்டுகிறார்கள்....ஆனால் எமது சமூகத்தில்........??????! எனவே எமது பிள்ளைகள் தமிழ் பண்பாடோடு வளர வேண்டுமென்றால் பெற்றோர் கவுண்சிலர்களாக இருக்கும் தகைமை கொண்டிருக்க வேண்டும் அன்றில் வெள்ளையரின் கவுண்சிலிங் தாம் எமது குழந்தைகளையும் வாழ வைக்கும்...அங்கு எமது பண்பாட்டை எதிர்பார்க்க முடியாது...இது தாயகத்திற்கும் பொருந்தும்......!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>