10-11-2005, 01:37 PM
தமிழ் நாட்டில் பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டிய நிலைக்கு பெண் கவிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பிரபல பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இவற்றில் இலக்கியம் பற்றிய பேச்சு வந்தால் கேட்கப்படும், காணப்படும் ஒரு செய்தி "பெண் கவிகள் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுகிறார்களே" இவர்களை என்ன செய்யலாம்.
உடலை முன் வைக்கிற கவிதைகளை பெண்கள் எழுதி வருவது குறித்து தனது கவலைகளை பிரம்மராஜன் பகிர்ந்து கொண்ட தகவல்( கவிஞர்கள் சந்திப்பு, காலச்சுவடு 51 பக்கம் 51-52) அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதே கருத்தைதான் வெகுசன ஊடகங்களில் சினிமா பாட்டெழுதுபவர்களும் சில வெகுசன கவியரங்கப் பிரபலங்களும் முன் வைக்கிறார்கள். இவர்களுக்கும் கவிதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. என்பது சிறு பத்திரிகை வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் உலகக் கவிதை தெரிந்த பிரம்மராஜன் ஒரு சாதாரண பேராசிரியரைப் போல இப்படிச் சொல்வது உண்மையிலேயே பேரதிர்ச்சிதான்.
ஐயா கவிதையில் இடம்பெறும் கடல் கடலாக இல்லாதது போலவே, தேவாரத்தில் நடனமிடும் சிவன் சிவனில்லாதது போலவே, கவிதையில் இடம் பெறும் பாலியலும் பாலியல் அல்ல. அது உருவகமே. புலன்களும் உடலும் புனைவினுடாக இயங்கும் பொழுது கவிதைநிலை தோன்ற முடியாது. என்ற கட்டாயம் இல்லை. முரண்பாடுகளின் விளையாட்டு கவிதைகளில் அதிகம் தான். உள்ளுறையும் இறைச்சியும் பழகிய தமிழ்க் கவிதைக்கு உருவகம் பழகாமல் போகும் என்ற கட்டாயம் ஏதும் உண்டா? "யோனி" என்ற சொல் கவிதைக்குள் வரும்போது அது பெண்ணுடைய ஒரு உறுப்பா அல்லது கவிதைக்குள் கட்டமையும் உருவகமா? கவிதைக்குள் ஒரு சொல் அது உணர்த்தும் வெற்றுப் பொருளாகவோ, ஒரு வாக்கியம் வெற்று வாக்கியமாகவோ அமையுமா? Meta languugage, meta poetry பற்றி மீடியா பிரபலங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரம்மராஜனுக்கு? குற்றாலப் பதிவுகள் அமர்வுகளில் நாள் முழவதும் பேசி மாளவில்லையா?
அப்படி என்னதான் பெண்கள் எழுதி விட்டார்கள்.? சுகிர்தாரணியின் இரண்டொரு கவிதைகள் உடல் வேட்கையைப் பேசுகின்றன. குட்டிரேவதி தனது இரண்டாவது தொகுப்புக்கு "முலைகள்" எனத் தலைப்பிட்டார். இது தவிர வேறு எந்த உயிர்கொல்லி ரசாயன ஆயதங்களும் இவர்களிடம் இல்லை. எனது கவிதைகளில் காணக்கிடப்பவை எல்லாம் இயற்கையும் தாய்மையும் இணைந்த அழகியல் தத்துவம், அறம், அதிகாரம், இவைகளின் விதவிதமான உருவக நாடகங்கள் மற்றும் சில வெளிப்படையான அரசியல் கவிதைகள். உமாமகேஸ்வரி "வெறும்பொழுது" என்ற தலைப்பில் மிகப்பெரிய தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒரு கவிஞர் 50 ஆண்டுகள் எழுதித் தொகுக்கும் போது கூட இவ்வளவு பெரிய தொகுப்பு வருவதில்லை.
பத்தாண்டு காலவெளியில் இவ்வளவு கவிதைகளை எழுதியுள்ளார். சல்மாவின் இரண்டு தொகுதி கவிதைகளில் ஒரே ஒரு இடத்தில் தான் "யோனி" என்ற வார்த்தை வருகிறது. அக்கவிதையில் இரண்டு உடல்களுக்கிடையிலான அரசியல் பேசப்படுகிறது. இவரும் ஆபாசக் கவியாக சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் எழுதியிருக்கும் மீதி 99 சதவீத கவிதைகள் எதை முன்னிறுத்திப் பேசுகின்றன. என்பது குறித்து இப்பிரபலங்களுக்கு அக்கறையில்லை இப்பெண்களிடம் பதிவாகியுள்ள பெண் இருப்புச் சார்ந்த கேள்விகளும் சமூகம் சார்ந்த கேள்விகளும் உறவுச் சிக்கல்களும் முரண்பாடுகளும் வலிகளும் இழப்புகளும் அவர்களுக்கு சமூக அக்கறையற்ற செயல்கள்.
குட்டிரேவதி தன் தொகுப்புக்கு "முலைகள்" என தலைப்பிட்டுவிட்டார் அல்லவா அதனால் தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மழை பொய்த்து விட்டது போலும். உலக சமூகங்களிலேயே இந்திய சினிமாவில் பெண்களை படு கேவலமாக சித்தரிக்கும் சமூகம் வேறில்லை. நம் கோடம்பாக்கத்தில் ஒரு நான்கு நிமிட பாடல் காட்சியில் சுமார் 50 ஜோடி முலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருக்க முடியாது. இக்காட்சிகளுக்கான பாடல்களை எழுதித்தரும் பல பாடலாசிரியர்களில் ஒருவரால் தமிழ்பெண் கவிகைளப் பார்த்து ஒழுக்கம் கெட்டவர்கள் என கூசாமல் சொல்ல முடிகிறது. இவருடைய சினிமாப் பாடல்களைப் பாடி ஈவ்டீசிங் கேஸில் கைதான இளைஞர்கள் பலர். அந்த கைதுப் பட்டியலை நான் காவல்துறையினரிடம் கோரி பெறயிருக்கிறேன். இந்த ஈவ்டீசிங் கவிஞர் பரப்பிவரும் அவதூற்றை சில மதவாத கவிஞர்களும் வழிமொழிகிறார்கள்.
பெண் எழுதினாலே அது ஒரு சமூக மீறலாக அதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. ஆக அவர்களுடைய சொல் ஒவ்வொன்றுமே ஒரு அரசியல் செயற்பாட்டுக்கான அசைவுகளாக அர்த்தம் பெறுகிறது. ஆக அடிப்படையிலேயே ஒரு சமூக ஜீவியாகவும் சமூகநலம் விழையும் போராளியாகவும் வெளிப்படுவது பெண்களுக்கு இயற்கையான ஒரு நிகழ்வாகிறது. இங்கு இவர்களுடைய எழுத்துக்களை ஆபாசம் என்று சொல்வதும் சமூகக்கேடானது என்று சொல்வதும் எந்த ஒரு அறிதல் முறைக்குள்ளும் அடங்காத ஆணாதிக்க பாசிசக் குரலாகும்.
உண்மையில் பெண்கள் யாரும் ஆபாசமாக எழுதுவதில்லை. பெண் எழுத்தென்பது அதன் இயல்பிலேயே அரசியல் வயப்பட்டது. அவ்வரசியல் அறம், ஆண்களை நிலைகுலையச் செய்கிறது. எனவே தான் இவர்கள் இல்லாத ஒன்றை பெண் கவிதைகளின் மேல் ஏற்றி ஆபாச வக்கிரமென அவதூறைப் பரப்புகிறார்கள். உதாரணத்துக்கு என்னுடைய எழுத்துகளுக்கு இங்கே விளக்கம் தருகிறேன்.
எனது "சங்கரபாணி" ,"நீரின்றி அமையாது உலகு", இரண்டு தொகுப்புகளையும் எடுத்துக்கொண்டால் கூப்பிடும் தூரத்தில் உனது தீவு மறைமுக அரங்கம் அகதி வெள்ளைப் பாய்மரங்களும் சங்கிலிகளும் புலி இரும்புத் தொப்பி ஞாயிற்றுக்கிழமைச் சந்தை வீடுகளால் ஆன இனம், படுகளம், மரணங்கள் உருவாக்கப்படுகின்றன." குருவி" "கடவுளைச் செய்பவள்" போன்ற கவிதைகளுக்கு இணையான அரசியல் பார்வை கொண்ட கவிதைகள் தமிழில் இதுவரை இல்லை என்று சொல்லலாம். பிறவற்றில் வெறும் அரசியல் இருக்கும். ஆனால் கவிதையிருக்காது எனது கவிதைகள் ஆத்மநாமிற்குப் பிறகு மிகச்சிறந்த உதாரணங்களாகவும் ஆத்மநாமின் மிடிஸ்கிளாஸ் பார்வை படியாமலும் எழுதப்பட்டுள்ள அரசியல் கவிதைகள். எனது கவிதைகளில் இடம் பெறும் ~யோனி| என்ற உருவகம் சாக்தேய மரபில் தெய்வமாக வழிபடப்படும் மகாசக்தியின் பிரபஞ்சத் தோற்றத்தின் மூல ஊற்று . நெருப்பாலான பிரபஞ்சத் சக்தியின் ஆதிமூலம் சங்க இலக்கியம் காட்டும் பெண் உடல்களில் இன்றும் தேங்கி இயங்கும் அணங்கு எனும் நெருப்பு உருமாறி அருட்பெரும் சோதியாகி நின்ற உருவகமே எனது கவிதைகளில் இடம்பெறும் யோனி. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெறும் சோதியை எனத்தொடங்கும் திருவெம்பாவையின் முதலடியில் சிவனைக்குறிக்கும் சோதியானது சிவனொடு சேர்ந்த சக்தியே தவிர வேறல்ல. இது மாணிக்க வாசகர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியது.
நான் சாக்தேய மரபில் வரும் ஒரு கவி. இந்த அடிப்படையில் நான் கூறுவது இது தான். பெண்களின் அறிவார்ந்த வளர்ச்சி சமூகக் குற்றம் செய்துவரும் கவி கொக்ரக்கோ கோக்களுக்கு அச்சத்தைத் தருகிறது. எதையுமே வாசிக்காமல் தமிழ் இலக்கிய மரபோ பிற இந்திய இலக்கிய மற்றும் உலக இலக்கிய மரபோ அறியாத தமிழை விற்றுப்பிழைக்கும் வியாபரிகள் "பெண்கவிகள் தரம்கெட்டுவிட்டதாகச் சொல்லி கூச்சலிடுகிறார்கள்" ஜனநாயக மறுப்போடும் பாசிச ஆணாதிக்க திமிரோடும் மத அடிப்படைவாத கவிஞர்கள் பொத்தாம் பொதுவாக பெண் கவிகைள சினிமா நடிகைகளைப் போல சித்தரிக்கிறர்கள். இவற்றை வெகுசன ஊடகங்களும் வரவேற்கின்றன. இவை கடுமையான கண்டனத்திற்கு உரியன.
(மூட்டுவென் கால் ,தாக்குவென் கால் ஓரென் யானுமோர் பெற்றி மேலிட ஆஆ ஒல்லென கூவு வென் கொல் அலமறல் அசைவளி அலைப்பவென் உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே எனக்கூறும் ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்களின் கௌன்ட்டவுனில் முதல் இடம் பிடித்திருக்கிறார்.)
குமுதம் தீராநதி இதழுக்கு "பெண்பால் அகதிகள்" என்ற தொடரை எழுதி வரும் மாலதி மைத்ரியின் தொடர் கட்டுரைகள் தொடர்ச்சியாக ஊடறுவில் வெளிவரும்.
http://udaru.blogdrive.com/archive/75.html
oct 2005
Leave a Comment:
Name