10-11-2005, 04:06 AM
சுவராசியமா கொண்டு போக முயற்சித்திருக்கீங்க... நல்ல முயற்சி பிருந்தன் தொடருங்கோ..!
எங்களுக்கும் நாய் ரெம்ப பிடிக்கும்... என்ன எங்க வீட்டு நாய்க்கும் எங்களுக்கும் ஒரே சட்டம் தான்... வீட்டைவிட்டு வெளிய போகக் கூடாது...! நாங்களா கூட்டிப் போனாத் தவிர அது பாவம் எங்களையே சுத்திட்டுதான் நிக்கும்...!
அப்படி இருந்தும்...ஒரு நாள் காலைல கேற்றடியில் பார்த்தா பெரிய குழி கிண்டி இருக்கு....பொறுத்துப் பொறுத்து பார்த்த நாய்க்கு..பொறுமை எல்லை மீறிட...அது கேற்றைத் தாண்டிட்டு... விடிய எழும்பி ஆளைத் தேடினா... கூப்பிட முதல் காலடி நிக்கிறவரைக் காணேல்ல... என்னடா என்று பார்த்தா பக்கத்து வளவுக்க கடி வாங்கிட்டு முணகிக்கிட்டு இருக்கார்... தேவையா உனக்கு இது என்றிட்டு.. கூட்டி வரப் போனம்.. அப்ப பாத்தம்... உண்மையா அதின்ர கண்ணில கண்ணீர் ஓடி இருக்கு... எங்களைக் கண்டதும் சந்தோசத்தில வேதனையையும் கடந்து நடந்து வர முயலுது.. பின் கால் தொடையில பலமான கடி வாங்கி இருக்கார்..நடக்க முடியல்ல.... போய் அதின்ர காலில இருந்த காயத்துக்கு ஊதி விட்டம்...அதுக்கு ரெம்ப மகிழ்ச்சி... அப்புறம் நொண்டிட்டு நடந்து வந்திச்சு...அதுக்கு அப்புறம் நாங்க இல்லாம வெளிய போகவே மாட்டுது...கேற் திறந்திருந்தாலும் போய் எட்டிப் பாத்திட்டு வந்திடும்...!
இன்னொரு நாய் அது எங்களது இல்ல... ஒரு ஆச்சிட நாய்... அது சாவகச்சேரிப் பக்கம்... அங்க நாயை கட்டி வளர்த்ததைக் காண்பதே அரிது... ஆக்களைப் போல அதுக்கும் சுதந்திரம்...அது ஊரெல்லாம் திரிஞ்சிட்டு... வேளைக்கு வரும் சாப்பிட...! அதுக்கு உண்மைப் பெயர் ரைகர்... நாங்க வச்ச பெயர் நக்குத்தண்ணி... ஏன்னா அது எல்லா வீட்டிலும் சாப்பாட்டுக்கு முதலில நிக்கும்...! அது குளிச்சதே கிடையாது... மழைல நனைஞ்சா ஒரே கப்பு....! பாவம் மழை குளிருக்க அதை எவரும் அண்டாயினம்...எங்க வீட்ட வரும்... சரி என்று அவருக்கு ஒரு மூலைல கொஞ்ச பழைய உடுப்புகளைப் போடுறது...அவர் அதுகளை மெத்தையாக்கி அழகாத் தூங்கிட்டு இருப்பார்..விடிய போய் தட்டினா...ஒரு உறுமல்... என்ன செய்யுறது... வாளி நிறைய தண்ணி எடுத்து ஊத்த... ஓடிடும்...! அவருக்கு இன்னொரு படுக்கையும் இருக்கு... சாவகச்சேரில நெல்லு அதிகம்... சனம் அதை வெளில வைச்சுத்தான் அவிக்கும்...அந்த இடம் கீற்றா இருக்குமா... சோ பல இரவுகள் அவருக்கு அடுப்புக்கத்தான் தூக்கம்...செலவே இல்லாம கீற்றர் போட்ட முதல் ஆளு அவரேதான்..!
இன்னொரு நாய் அது எங்களதுவானது... அது ஒரு அழகான நாய்...அது அதிஷ்டமா கிடைச்சது... அதுவா குட்டியா இருக்கேக்க வீட்ட வந்துது...நல்ல அழகு.. குண்டு..யாரோ வளர்த்தது என்று தெரியுது...யாரென்று நமக்குத் தெரியும்..??! நாங்க விடுவமா...பிடிச்சு கட்டி வைச்சு வளர்த்தம்....அது வளர்ந்து வர.. இரண்டு கிழமைகள் கழித்து ஒரு பெண் வீட்ட வந்தார்... என் நாய் இங்க நிக்காம் என்றார்.. இதுவா என்று கேட்டம்...ஆமா என்றார்...சரி இது உங்க நாய் என்றீங்க தானே... கூப்பிடுங்க வந்தா கூட்டிப் போங்க என்றம்...நாங்க வைச்ச பெயர் லக்கி...அது மனிசி என்னவோ சொல்ல நாய் எங்க மடில.. குஜால படுத்திட்டு பார்த்திட்டு இருக்கு...மனிசி திரும்ப திரும்ப கூப்பிட நாய் எங்க போச்சு...என் நாயை மயக்கிப் போட்டேள் என்று புறுபுறுத்திட்டு நிக்க... பிறகு பெரியாக்கள் ஏதோ சொல்லி சமாளிச்சு விட்டுச்சினம்...! நாங்க விடுவமா எங்க லக்கியை...!
இப்படி நிறைய நாய் அனுபவங்கள்...கடைசியா...எங்க தம்பி என்றே சொல்லலாம்...அவர்தான் எங்க செல்லம்...ஒரு பொம்மேரியன் நாய்...அதுக்கு எனிமி...லேடிஸ்... வீட்ட லேடிஸ் வந்தா...செய்யுற ஒரே வேலை... போய் வாலை ஆட்டிட்டு அழகா சமத்தா பக்கத்தில படுத்திருக்கும்...அப்படியே மனசுக்க கறுவிட்டு இருக்கும் போல...ஏன்னா... சேலை சட்டை இதுகளை நைஸா வாய்க்கில்ல வைச்சி கடிச்சு துப்பி வைச்சிடும்... எழும்பத்தான் தெரியும்...பெரிய பழுதுகள் இருக்கும்...! இப்படித்தான் ஒரு அன்ரி வெடிங் போக வெளிக்கிட்டு எங்க வீட்ட இக்ஸோரா (Ixora) பூக்கு வந்தாங்க...சரி வாங்க இருங்க எண்டு பூ பிடுங்கி வாறத்துக்கு இடைல.... நாய் தன்ர வேலையைக் காட்டிட்டு... பட்டுச் சேலைல பெரிய பொத்தல் போட்டிட்டு... ஆனா எங்க நாய் ஆண்களுக்கு எந்தத் துன்பமும் செய்யாது... இது கதையில்ல...நிஜம்..! இப்ப பிருந்தன் நாய்கள் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் எங்களுக்கும் ஒரு உந்துதல் வந்திச்சு...பிருந்தன் போல சுவாரசியமா தர முடியல்ல என்றாலும்...நிகழ்ந்த உண்மைகளைச் சொல்லி இருக்கம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>