Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீடுழி வாழ்க
#1
நட்பிலே உரிமை உண்டு என் முடிவை மாற்றிய
நண்பியும் நீ தான் மனநலம் கொடுத்து உந்துணைவன்
நட்புபாராட்டி என்னையும் நண்பனாக்கி நம் பாசம்
நகமும் சதையும் போல் ஏதோ ஒரு நட்பால்
நட்டாற்றில் விட்டபோது நான் இருப்பேன் என்று
நலம் நாடிய அருமையான் என் தோழனுக்கும்

நான் கொடுப்பது என் மனசு மட்டும் போதுமா?
நாம் சந்தித்த அந்த வேளைகள் கண்டம் விட்டு
நாம் கண்ட அந்த தருணங்கள் நினைத்தாலும்
நாம் களித்த அந்த ஆனந்தமான தாயக நினைவுகள்
நான் தனியே உன்குடும்பம் என்னை ஒருவனாக
நாடிய அந்த வேளைகள் அதில் நான் அடைந்த இன்பம்

ஆண்டுகள் ஜம்பது சென்றாலும் அழியாது என் அன்பு
ஆள்பவன் யாராக இருந்தாலும் அவன் அன்பான
ஆட்சிபோல் உன்குடும்பதலைவன் அன்பில் அனைத்தும்
ஆழியின் அமைதி போல் புரிந்த வாழ்க்கை வேண்டும்
ஆனமட்டும் அன்பால் வாழ்த்துகிறேன் வார்த்தைகள்
ஆராதனை செய்கிறது வேறு வார்த்தைகள் இன்றி
inthirajith
Reply


Messages In This Thread
நீடுழி வாழ்க - by inthirajith - 10-11-2005, 02:57 AM
[No subject] - by Nitharsan - 10-11-2005, 03:14 AM
[No subject] - by inthirajith - 10-11-2005, 03:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)