Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈபிள் கோபுரத்தில் குண்டு புரளி
#1
சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம் 324 மீட்டர் உயர ஈபிள் கோபுரத்தில் குண்டு வைத்ததாக புரளி: சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்
பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் உள்ளது. இரும்பு பாலங்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் உயரம் 324 மீட்டர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த கோபுரத்தை பார்க்கவும் அதில் ஏறவும் வருகிறார்கள். இரவு நேரத்தில் இதில் லட்சக்கணக்கான வண்ண விளக்குகளும் எரிய விடப்படும்.

இந்த கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று டெலிபோனில் அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது. அங் குள்ள கார்டிலியான் மான்ட், பார்னாசி ரெயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக டெலிபோனில் மிரட்டல் வந்தது.

இதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் சுரங்க ரெயில்களில் குண்டு வெடித்ததுபோல் பாரீஸ் நகரிலும் குண்டு வெடிக்கப்போவதாக பீதி கிளம்பியது.

கோபுரத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அவசரம் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். அந்த கோபுரம் முழுவதும் துருவி துருவி சோதனை போடப்பட்டது. ஆனால் இதுவரை வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இது புரளி என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் பயணிகள் கோபுரத்தில் ஏற இன்னும் அனுமதி கொடுக்கவில்லை.
[size=7]lankasrinews
Reply


Messages In This Thread
ஈபிள் கோபுரத்தில் குண்டு புரளி - by mayooran - 10-10-2005, 12:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)