10-10-2005, 09:51 AM
<span style='font-size:20pt;line-height:100%'>யாழ் களத்தில் கருத்துக்களை எழுதும் ஒவ்வொருவரும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை எழுத வேண்டும் என்பதே எமது விருப்பம். பல சந்தர்ப்பங்களில் கருத்துக்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது அவற்றை தணிக்கை செய்யாமல் கருத்தை எழுதியவர்களின் உதவியுடன் அவற்றை நீக்க முயன்றுள்ளோம். இப்படியாக முடிந்தவரையில் தணிக்கயை தவிர்ந்து சுதந்திரமான கருத்தாலை அனுமதிக்க முயற்சிக்கிற போதிலும் பல சமயங்களில் எமது விருப்பத்தை மீறி தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
குறிப்பாக ஐஸ்வர்யா ராய் படத்தையும் டிசே தமிழன் கவிதையையும் தொடர்ந்து எழுதப்பட்ட கருத்துக்களும் அவற்றின் போக்கும் மனவருத்தத்தை அளிப்பவையாக இருக்கின்றன, இவற்றின் தற்போதைய போக்கு எது சரி எது தப்பு என்பதை விவாதிப்பதை கடந்து கள உறுப்பினர்களிடையே நட்புணர்வை கெடுத்து மனவேறுபாட்டை உருவாக்கும் நிலைக்கு சென்றுள்ளதால் இந்த இரு தலைப்புகளும் தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தப்படுகின்றது. இது தொடர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனற்று போன நிலையில் இதை தவிர வேறு வழியில்லை. இந்த இரு தலைப்புகள் தொடர்பாக கள உறுப்பினர்கள் தொடர்ந்து வெவ்வேறு தலைப்புகளில் விவாதிப்பது உறுப்பினர்களிடையேயான புரிந்துணர்வை கெடுக்கும் என்பதால் அவை குறித்து விவாதிப்பதை தவிர்க்குமாறு தயவுடன் கேட்கின்றோம். புரிந்துணர்விற்கு நன்றி.
நட்புடன்
மதன்</span>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>