Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'எழுகதமிழ்" எழுச்சிப் பேரணி
#4
'வாழ்வுக்கும் உரிமைக்குமான பெல்ஜியம் "எழுக தமிழ்" எழுச்சிப் பேரணியில் (ஒக்.24) ஐரோப்பா வாழ் தமிழர்களே ஒன்று கூடுவோம்'


தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய பயணத் தடையைக் கண்டித்து எதிர்வரும் 24 ஆம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக "எழுக தமிழ்" எனும் எழுச்சிப் பேரணி நடைபெற உள்ளது.


இது தொடர்பாக எழுக தமிழ் ஏற்பாட்டாளர் குழுவினர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானக் குழுவினர் மீதான ஐரோப்பிய பயணத் தடையைக் கண்டித்து தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் இணைத்து "எழுக தமிழ்" எழுச்சிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (24.10.05) பிற்பகல் 12.00 மணிக்கு பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

- இலங்கைத்தீவின் இணக்க முயற்சிகளில் ஐரோப்பிய சமூகம் நீதியானதும், பாரபட்சமற்றதுமான பங்கை வகித்தல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் சமாதானப் பேச்சுக்களிலும், போர்நிறுத்த உடன்பாட்டிலும் சம தரப்பாகப் பங்கேற்கும் தமிழர்களின் தேசியத் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரித்து கௌரவமாக நடாத்துதல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்கினை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றைக் தளமாகக் கொண்ட அரசியல் நிலைப்பாட்டை ஐரோப்பிய சமூகம் ஆதரித்து - மதித்து சமாதான முயற்சிக்கு ஆதரவு தரல் வேண்டும்.

- விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும் எதிராக சிறிலங்கா இராணுவ உளவுத்துறையினால் நடாத்தப்படும் நிழல் போரைப் பயங்கரவாதம் என ஐரோப்பிய சமூகம் பகிரங்கமாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.

- ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் ஒடுக்கப்பட்டு, துன்புறும் தமிழ் மக்களிற்கு ஆதரவு தருவதற்கும், அவர்கள் மீதான சிறீலங்கா பேரினவாத பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கும் உரிமை கொண்டவர்கள் என்பதை ஐரோப்பிய சமூகம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி "எழுக தமிழ்" எழுச்சிப்பேரணி நடைபெறவுள்ளது.

நிகழ்வில் "எழுக தமிழ்" எழுச்சிப் பிரகடனம் வெளியிடப்படுவதுடன் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் சார்பான மனுக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த எழுச்சி பிரகடன நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும கலந்து கொள்கின்றனர்.

எமது வாழ்வுக்கானதும் உரிமைக்கானதுமான இந்த எழுச்சிப் பேரணியில் பெருமளவு மக்ளை அழைத்துவர அந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பயண ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

மேலதிக விபரங்களை அறிய அந்தந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணியகங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

http://www.eelampage.com/?cn=20699
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 10-09-2005, 09:09 PM
[No subject] - by cannon - 10-10-2005, 06:15 AM
[No subject] - by sri - 10-10-2005, 07:53 AM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 12:39 PM
[No subject] - by sri - 10-14-2005, 08:07 AM
[No subject] - by sri - 10-14-2005, 08:37 AM
[No subject] - by Shan - 10-14-2005, 11:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)