Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேத்தாவின் கவிதைகள்
#43
<b>மனமே கோயில் ! மனிதனே தேவன் !

இந்தியனே ! இந்தியனே !
முதலில்
நீ இருக்க ஒரு
இடம் தேடு
ஆண்டவனுக்கு
வேண்டிய இடத்தை
அவன் தேடிக் கொள்வான் !

பாவம்!
கடவுளைப் பற்றி அதிகம் தான்
கவலைப் படுகிறீர்கள்....
கடவுளோ
மனிதர்களை எண்ணியன்றோ
மனம் வருந்துகிறான்....

பக்தியை காட்டினால்
பரமன் மகிழ்வான் !
நீங்களோ உங்கள்
சக்தியை காட்டுகிறீர்கள்....
ஆண்டவன்
சங்கடப் படுகிறான்...

உடலில் ரத்தம்
ஓட வேண்டும் என்பதுதான்
இறைவன் நமக்கு
இட்ட கட்டளை !
தெருவில் அதனை
ஓட விடுவது
தெய்வ நிந்தனை !

எந்த மதக் கொடியையும்
ஏற்றிக் கொள்ளுங்கள் !
ஆனால் அதை
ரத்தத்தில் கழுவி
அழுக்காக்காதீர்கள் !

அவரவர் மதக் கொடிகள்
அசையட்டும் அழகாய்...
வெறியுன்னும் நெருப்புக்கு
விசிறியாய் அல்ல...
களைத்தவர் வாழ்விற்குக்
கலங்கரை விளக்காய் !

ஒவ்வொரு மதமும்
உபதேசிப்ப தென்ன ?
அன்பை அல்லவா ?
அந்த
அன்பை அடகு வைத்த
ஆயுதம் வாங்குவது ?

இன்னொரு நவகாளியை
இந்தியா தாங்குமா ?

அவரவர் விருப்பபடி
அனைவருக்கும் உரிமையுண்டு..
கோவில்களில் கும்பிடலாம்
தேவாலயங்களில் தியானிக்கலாம்
மசூதிகளில் தொழலாம்
ஆனால்
எவனது விருப்பப்படியும்
எவனுக்கும் உரிமையில்லை
மதவெறி வாளால்
மற்றவரைக் கொல்வதற்கு !

கங்கையும் காவிரியும்
கை கலந்து கொள்வதில்லை
கடலில் தான் கலக்கின்றன !

மதங்கொண்ட யானைகள்
மோதிக் கொண்டன...
நடுவில் அகப்பட்டு
நசுங்கிப் போனது
எளிய மக்களின்
வாழ்க்கை யல்லவா ?

இந்துவே திரண்டு வா !
என்றோ
கிறிஷ்தவனே கிளம்பி வா !
என்றோ
இஷ்லாமியனே எழுந்து வா !
என்றோ
எழுப்பாதீர்கள் முழக்கம்....
மனிதனே இணைந்து வா !
என்று முழங்கி
மானுடத்தை இனியெனும்
மகத்துவப் படுத்துங்கள்

தீபங்களே !
நீங்கள்...
தெரிந்து கொள்ளுங்கள்
திரிகள் மட்டுமே
கருகிக் கொண்டிருக்கின்றன.....
தூண்டு கோல்கள்
சுகமாய் தூங்குகின்றன !

இந்தியனே ! இந்தியனே !
முதலில்
நீ
இருக்க ஒரு
இடம் தேடு !</b>
....
Reply


Messages In This Thread
[No subject] - by sakthy - 09-24-2005, 05:40 PM
[No subject] - by Thala - 09-24-2005, 05:41 PM
[No subject] - by sakthy - 09-24-2005, 05:46 PM
[No subject] - by Rasikai - 09-24-2005, 10:30 PM
[No subject] - by RaMa - 09-26-2005, 04:06 AM
[No subject] - by KULAKADDAN - 09-26-2005, 02:10 PM
[No subject] - by ப்ரியசகி - 09-26-2005, 02:31 PM
[No subject] - by RaMa - 09-26-2005, 03:49 PM
[No subject] - by RaMa - 09-26-2005, 04:40 PM
[No subject] - by sakthy - 09-26-2005, 06:06 PM
[No subject] - by Mathan - 09-27-2005, 01:37 PM
[No subject] - by RaMa - 09-27-2005, 09:35 PM
[No subject] - by Jenany - 09-28-2005, 10:30 AM
[No subject] - by sayon - 09-28-2005, 10:51 AM
[No subject] - by Muthukumaran - 09-28-2005, 12:07 PM
[No subject] - by sakthy - 09-29-2005, 06:30 PM
[No subject] - by Mathan - 09-29-2005, 09:30 PM
[No subject] - by Thala - 09-29-2005, 09:47 PM
[No subject] - by samsan - 09-29-2005, 11:13 PM
[No subject] - by Mathan - 10-03-2005, 08:18 PM
[No subject] - by RaMa - 10-06-2005, 05:50 AM
[No subject] - by RaMa - 10-06-2005, 05:56 AM
[No subject] - by RaMa - 10-06-2005, 05:59 AM
[No subject] - by Thala - 10-06-2005, 10:23 AM
[No subject] - by sakthy - 10-06-2005, 05:50 PM
[No subject] - by அனிதா - 10-06-2005, 07:41 PM
[No subject] - by RaMa - 10-08-2005, 04:58 AM
[No subject] - by வெண்ணிலா - 10-08-2005, 05:02 AM
[No subject] - by RaMa - 10-08-2005, 05:10 AM
[No subject] - by ப்ரியசகி - 10-08-2005, 01:20 PM
[No subject] - by sankeeth - 10-08-2005, 03:20 PM
[No subject] - by அனிதா - 10-08-2005, 03:39 PM
[No subject] - by sakthy - 10-08-2005, 04:44 PM
[No subject] - by sakthy - 10-08-2005, 04:52 PM
[No subject] - by Muthukumaran - 10-08-2005, 05:23 PM
[No subject] - by சுபா - 10-08-2005, 05:37 PM
[No subject] - by sakthy - 10-09-2005, 05:01 PM
[No subject] - by Nanban - 10-09-2005, 05:10 PM
[No subject] - by Birundan - 10-09-2005, 05:17 PM
[No subject] - by sakthy - 10-09-2005, 05:50 PM
[No subject] - by sakthy - 10-09-2005, 06:11 PM
[No subject] - by RaMa - 10-13-2005, 04:45 AM
[No subject] - by Nanban - 10-13-2005, 12:57 PM
[No subject] - by lollu Thamilichee - 10-13-2005, 05:12 PM
[No subject] - by kpriyan - 10-13-2005, 05:24 PM
[No subject] - by sakthy - 10-14-2005, 06:15 PM
[No subject] - by RaMa - 10-26-2005, 02:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)