Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதித் தேர்தல்.. தமிழர் கடமை என்ன?
#29
<b>அரசியல் பேரப் பேச்சுக்கு போகாமல் தமிழர் தரப்பு ஒதுங்கியிருப்பதேன்.</b>
இலங்கையில் அடுத்த அரசுத் தலைவரைத் தீர்மானிக்கும் சக்தி யாக ("கிங் மேக்கர்'களாக) விடுதலைப் புலிகளே இருக்கின்றார்கள். முக்கிய அரசியல் நோக்கர்கள் மற்றும் பிரபல விமர்சகர்களை மேற் கோள்காட்டிச் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று இவ்வாறு சுட்டிக்காட்டி யிருக்கின்றது. இராணுவ ரீதியாகவும் போரியல் சக்தி என்ற வகையிலும் வலுப் பெற்றுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு, தென்னிலங்கையின் அடுத்த தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அரசியல் சக்தியாகவும் வலிமை கொண்டு விளங்குகின்றது என்பதே இதன் அர்த்தம். ஜனாதிபதித் தேர்தலை ஒட்டித் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளுக்கும் பின்னால் ஏனைய கட்சிகள் எல்லாம் திரண்டு விட்டன. ஈழத் தமிழர்கள் தாம் அவர்களின் ஏக, அதிகாரபுூர்வ பிரதிநிதிகளாக விளங்குகின்ற புலிகள்தான் இந்தத் தேர்தலில் தாங்கள் யாரை ஆதரிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் தமிழர் தரப்பின் தீர்மானம்தான் இலங்கைத்தீவின் அடுத்த அரசுத்தலைவரை முடிவுசெய்யப்போகின்றது என்பது தென்னிலங்கை அரசியல் அவதானிகளின் கருத்து. ""நடக்கும் விடயங்களைப் பார்த்தால் யார் அரசுத் தலைவராவது என்பதைக் கடைசியில் தமிழர்களே நிர்ணயிப்பார்கள் என்பதை அவை எடுத்துக் காட்டுகின்றன. தமது மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துக் கூறுவார்கள்'' என்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முன்னாள் ஆலோசகரும் அரசியல் நோக்கருமான ஹரி குணதிலக கூறுகின்றார். ஆனால், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் கருத்தோ வேறுவிதமாக இருக்கின்றது."" மஹிந்த ராஜபக்ஷ சிங்கள இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு தமிழர்களின் நியாயமான நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்துக் கொண்டுவருகின்றார். ""ரணில் கூட இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள இனவாதக் கட்சிகளின் இணக்கப்பாடு இல்லாமல் அமைதி முயற்சிகளைத் தொடங்குவது சாத்தியமில்லை; அவற்றின் இணக்கப்பாட்டைப் பெற்றுத்தான் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று கூறுகின்றார். ""எனவே, இரு தரப்பிலிருந்தும் வருகின்ற கருத்துகள் தமிழர்களுக்கு நியாயம் செய்கின்ற அல்லது திருப்தி தருகின்ற அணுகு முறையுடையனவாகத் தெரியவில்லை'' என்கின்றார் தமிழ்ச்செல்வன். இந்தக் காரணங்களினால் இவரைத்தான் ஆதரியுங்கள் என்றோ அல்லது இவரை எதிருங்கள் என்றோ கூறாமல் தங்களின் கருத்தை தமது மக்கள் மீது திணிக்காமல் அவர்களைச் சுதந்திரமாக, சுயாதீனமாக முடிவெடுக்க விடுவது என்ற தீர்மானத்துக்குப் புலிகள் வந்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களிலும் நமது மக்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளை மிகத் தெளிவாக ஆணித்தரமாக சர்வதேசத்துக்கும் தெற்குக்கும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலிலும் எமது மக்கள் தெளிவான வெளிப்பாட்டைக் காட்டுவார்கள் என நினைக்கிறேன்'' என்று உறுதியாகக் கூறியிருக்கிறார் அரசியல் பொறுப்பாளர். இதற்கு முந்திய பொதுத் தேர்தல் 2001 டிசெம்பர் 5ஆம் திகதி நடைபெற்றபோது அதற்குச் சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இடம் பெற்ற வருடாந்த மாவீரர்தின உரையின்போது, அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் வாக்களிப்புக் குறித்துத் தலைவர் பிரபாகரன் சில விடயங்களைக் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை. ""தமக்கு வேண்டியது போரா, சமாதானமா என்பதைத் தென்னிலங்கை மக்கள் தீர்மானித்து வாக்களிக்க வேண்டும்'' என்ற சாரப்பட அப்போது கருத்துக் கூறியதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தென்னிலங்கை மக்களுக்கும் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வழிப்படுத்திக் காட்டியிருந்தார் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்.

அதே புலிகள்தான், போரையும் சமாதானத்தையும் தென்னிலங்கையில் தீர்மானிக்கப் போகின்ற அதிகாரப் பதவிக்கு வருபவர் யார் என்பதை முடிவுசெய்யும் தேர்தலில் தமது மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதற்குத் திட்டவட்டமான வழிப்படுத்தலைக் காட்டாமல், தமிழ் மக்களின் சுதந்திரமான முடிவுக்கு அனுமதிக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன? ஜனாதிபதித் தேர்தல் இப்போது நடக்கும் என்பது உறுதியானதுமே இரண்டு பெரும்பான்மைக் கட்சி வேட்பாளர்களின் சார்பிலும் புலிகளுக்குத் து}துகள் பறக்கத் தொடங்கிவிட்டன.

ரணிலிடமிருந்து மட்டுமல்ல, தேர்தல் வெற்றிக்காகப் பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அரவணைத்துக் கொண்டுள்ள மஹிந்த விடமிருந்தும் கூட கிளிநொச்சிக்கு உத்தியோகப்பற்றற்ற து}துவர்கள் பறந்தார்கள். ஆனால், பேரப்பேச்சு எதற்கும் புலிகளின் தலைமை இடமே கொடுக்கவில்லை, அது ஏன்? நாட்டின் அதியுயர் பதவிக்கான தேர்தலை ஒட்டி இரு பிரதான கட்சிகளுடனும் விலாசமில்லாத உதிரிக்கட்சிகள் கூட பேரம்பேசி, ஒப்பந்தம் செய்து சுயலாபம் அரசியல் ஆதாயம் தேடும் போது, தமிழர் தரப்பு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் கோட்டைவிட்டு நிற்பது ஏன்? தேர்தலை ஒட்டிய அரசியல் பேரப்பேச்சுக்குப் போகாமல் புலிகள் தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் ஒதுங்கியிருப்பதற்கு காரணங்கள் இரண்டு.

ஒன்று கொள்கை ரீதியானது.

மற்றது பட்டறிவின் பாற்பட்டது.

சிங்கள தேசம் தனக்குரிய தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அதற் கான தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான கட்சிகளினதும் வேட் பாளர்களுமே சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நியாயமானதைச் செய்வது குறித்துத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஒருவருக்கொருவர் போட்டியாக ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாக பேரினவாதப் பிடியில் சிக்கியிருக்கும் போது ஒருவரை விட மற்றவர் மேல் என்ற முடிவுக்கு வந்து, அதில் ஒருவரை ஆதரிப்பதற்குத் தீர்மானிப்பதில் அர்த்தமில்லை. அப்படி முடிவெடுப்பது அபத்தமானதும் கூட. அடுத்தது கடந்த ஐந்து தசாப்த காலமாகத் தேர்தல்களுக்கு முன்னும் பின்னும் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக மிதவாதத் தமிழ்த் தலைமைகள் நடத்திய அரசியல் பேரப்பேச்சுகள் என்னவாயின, அந்தந்த வேளைகளில் தென்னிலங்கைத் தலைமைகள் அளித்த வாக்குறுதிகள் எவ்வாறு காற்றில் பறக்கவிடப்பட்டன அல்லது காகித ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன என்பவையெல்லாம் புலிகளின் தலைமைக்கு நன்குதெரிந்த விடயங்கள்.

ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் பெரும்பான்மை இனத்தவர் என்ற முறையில் தமக்கிருக்கும் அதிக வலுவோடு பலத்தோடு அரசியல் பேரம் பேசுவதற்கு வரும் தென்னிலங்கைத் தலைமையுடன், சிறுபான்மை இனத்தவர்கள் என்ற வலுக்குறைந்த நிலையில் இருந்து தமிழர்கள் பேசுவதை விட போரியல் சக்தியிலும் இராணுவ வலிமையிலும் விஞ்சி நின்று, சமதரப்பு என்ற சமநிலை அந்தஸ்தோடு பேசுவதில்தான் பயனும் பலனும் உண்டு என்பதை அனுபவப்பாடமாக நன்கு அறிந்தவர்கள் இப் போதைய தமிழ்த் தலைவர்கள். அதனால்தான் தேர்தலை ஒட்டிய அரசியல் பேரப்பேச்சுகளைப் பயனற்றவை என்று ஒதுக்கி, போரியல் வலுவோடு சமதரப்பு என்ற அந்தஸ்துடன் பேரம் பேசும் அமைதிப் பேச்சுக்கு இடமளித்துக் காத் திருக்கிறார்கள் தமிழர்கள்.

நன்றி: உதயன் (09-10-2005)
http://www.uthayan.com/editor.html
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 10-08-2005, 11:44 AM
[No subject] - by கோமதி - 10-08-2005, 01:17 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:28 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:44 PM
[No subject] - by Thala - 10-08-2005, 02:29 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 05:50 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 06:02 PM
[No subject] - by Thala - 10-08-2005, 06:05 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:07 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:32 PM
[No subject] - by cannon - 10-08-2005, 10:09 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 10:34 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 10:36 PM
[No subject] - by இவோன் - 10-08-2005, 10:46 PM
[No subject] - by Netfriend - 10-08-2005, 10:54 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 10:59 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:15 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 11:17 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:28 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 11:50 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:59 PM
[No subject] - by இவோன் - 10-09-2005, 12:13 AM
[No subject] - by Thala - 10-09-2005, 12:17 AM
[No subject] - by Mind-Reader - 10-09-2005, 08:25 AM
[No subject] - by Thala - 10-09-2005, 08:47 AM
[No subject] - by yarlpaadi - 10-09-2005, 08:53 AM
[No subject] - by kurukaalapoovan - 10-09-2005, 10:00 AM
அரசியல் பேரப் பேச்சுக்கு போகாமல் தமிழர் ஒதுங்கியிருப்பதேன் - by kurukaalapoovan - 10-09-2005, 03:50 PM
[No subject] - by Vaanampaadi - 10-09-2005, 07:21 PM
[No subject] - by Thala - 10-09-2005, 07:51 PM
[No subject] - by sinnakuddy - 10-09-2005, 09:07 PM
[No subject] - by Thala - 10-10-2005, 10:18 AM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 01:53 PM
[No subject] - by Thala - 10-10-2005, 10:23 PM
[No subject] - by kurukaalapoovan - 10-14-2005, 11:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)