Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதித் தேர்தல்.. தமிழர் கடமை என்ன?
#15
தமிழர்கள் இத்தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டுமென்று சொல்ல வேண்டிய தேவை புலிகளுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் உண்டா இல்லையா?
நிச்சயமாக அவர்களின் கடமை அது. அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். குறைந்தபட்சம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாவது ஒரு முடிவு சொல்ல வேண்டும்.

ஏன் முன்பு புலிகள் ஏதும் சொன்னதில்லையா? எத்தனை தேர்தல் புறக்கணிப்புக்களைச் செய்தார்கள்?
இன்று முழுக்க முழுக்க புலிகளின் தலைமையை நம்பியுள்ள தமிழர்க்கு ஒரு முடிவுமில்லாமல் இப்படி விடுவது சரியன்று.

இங்கே கருத்தெழுதுபவர்கள் யாருக்கும்கூட சரியாகத் தெரியவில்லை யாருக்கு வாக்குப்போட வேண்டுமென. இப்படித்தான் எல்லாத் தமிழர்களும் குழம்பப் போகின்றனர். சிலர் தேர்தலைப் புறக்கணிப்பர். சிலர் ரணிலுக்கு சிலர் மகிந்தவுக்கு மற்றவர்கள் வேறு யாருக்காவது என்று தான் போடப்போகிறார்கள். எந்தத் தெளிவுமற்ற ஒரு நிலையில் மக்கள் நிற்கிறார்கள். இது எமது போராட்டத்துக்குச் சரியா? அதைவிட ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணிப்பது சிறந்ததே.
------------------------------------------------------
ரணில் வந்தால் பழையபடி முதலிலிருந்து பேச்சுக்கள். கடந்த 4 வருடங்களாக என்ன நடந்ததோ அவையே திருப்பவும் நடக்கும். உலக மட்டத்தில் ரணிலுக்கிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் வெல்வது கடினம். (ஏன் இங்கே கருத்தெழுதும் சிலர்கூட ரணில் மகிந்தவைவிடப் பரவாயில்லையென்றே சொல்கின்றனர்) உண்மையில் ரணில்தான் மிக ஆபத்தான எதிரி. ரணில் வந்தால் நாம் திரும்பவும் பேச்சுவார்த்தைச் சேற்றுக்குள் கால் வைக்க வேண்டியதுதான்.

மாறாக மகிந்தவுடன் கூட்டுச்சேர்ந்த பேரினவாதிகளின் உதவிமூலம் உலகிற்கு சிங்களப்பேரினவாதத்தின் முகமூடி கிழிக்கப்படக்கூடும். எமதுதரப்புச் சிக்கல்கள் இன்னும் தெளிவாக வெளித்தெரியக்கூடும். சிலவேளை யுத்தம் தொடங்கப்பட்டால்கூட அது எமக்குச் சாதகமாக முடியலாம். ஆனால் ரணில் வந்தால் யுத்தமும் தொடங்க முடியாது. பேசிப்பேசியே ஓய்ந்துபோக வேண்டியதுதான். இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் இப்படியே பேசி இழுபட்டுக்கொண்டால் பிறகு போராட ஆக்களும் இருக்காது. போராட்டத்துக்கு ஆக்களும் எடுக்கேலாது. அதைத்தான் எல்லாரும் விரும்புகிறார்கள்.
----------------------------------------------------------------
ரணிலோ மகிந்தவோ தான் வரப்போகிறார்கள். யார் வந்தால் நல்லதென்று தீர்மானிக்கவேண்டிது தலைமை. அதைச் சரிவரக் கணிக்கக்கூடியவர்களும் அவர்கள்தான். ஆகவே யார்வருவது தமக்கு நல்லதென்று புலிகள் கருதுகிறார்களோ அதைத் தமிழர்கள் மூலம் நிறைவேற்ற முயல வேண்டும். நேரடியாக தாம் சம்பந்தப்பட விரும்பாவிட்டால் வேறு ஏதாவது ஒரு முறைமூலம் அதைச் செய்யலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மூலம் செய்யலாம்.

ஏனைய கட்சிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு ஒரு முடிவைச் சொன்னதுபோல தமிழர்க்கான முடிவைச் சொல்ல வேண்டியது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கடமை.
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 10-08-2005, 11:44 AM
[No subject] - by கோமதி - 10-08-2005, 01:17 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:28 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:44 PM
[No subject] - by Thala - 10-08-2005, 02:29 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 05:50 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 06:02 PM
[No subject] - by Thala - 10-08-2005, 06:05 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:07 PM
[No subject] - by Mathan - 10-08-2005, 07:32 PM
[No subject] - by cannon - 10-08-2005, 10:09 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 10:34 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 10:36 PM
[No subject] - by இவோன் - 10-08-2005, 10:46 PM
[No subject] - by Netfriend - 10-08-2005, 10:54 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 10:59 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:15 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 11:17 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:28 PM
[No subject] - by Mind-Reader - 10-08-2005, 11:50 PM
[No subject] - by Thala - 10-08-2005, 11:59 PM
[No subject] - by இவோன் - 10-09-2005, 12:13 AM
[No subject] - by Thala - 10-09-2005, 12:17 AM
[No subject] - by Mind-Reader - 10-09-2005, 08:25 AM
[No subject] - by Thala - 10-09-2005, 08:47 AM
[No subject] - by yarlpaadi - 10-09-2005, 08:53 AM
[No subject] - by kurukaalapoovan - 10-09-2005, 10:00 AM
[No subject] - by Vaanampaadi - 10-09-2005, 07:21 PM
[No subject] - by Thala - 10-09-2005, 07:51 PM
[No subject] - by sinnakuddy - 10-09-2005, 09:07 PM
[No subject] - by Thala - 10-10-2005, 10:18 AM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 01:53 PM
[No subject] - by Thala - 10-10-2005, 10:23 PM
[No subject] - by kurukaalapoovan - 10-14-2005, 11:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)