10-08-2005, 06:02 PM
கோமதி Wrote:என்கருத்து என்னவெனில் தமிழர் தரப்பில் ஒருவரைப் பொதுவேட்பாளராக அறிவித்துப் போட்டியிடுவது. வெல்லப்போவதில்லையென்பது உறுதி. ஆனால் இப்படி மதில்மேல் பூனையாக இருப்பதிலும் பார்க்க மக்களுக்குத் தெளிவான ஒரு முடிவு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டமென. அத்தோடு தமிழ்மக்கள் சிங்களத் தலைமையை நிராகரிக்கிறார்கள் என்பதும்புலனாகும்.
ஆனால் யாரைப் போட்டியாளராக நியமிப்பது என்பதில் எங்கட ஆக்களுக்க வெட்டுக்குத்து நடக்கலாம்.
தமிழர் ஒரு வேட்பாளரை அறிவித்து அவர் வெல்வது நடைமுறை சாத்தியம் இல்லாத நிலையில் அப்படி ஒரு முயற்சி அவசியமற்றது, தவிர அப்படி வெற்றிபெற சாத்தியமில்லாத நிலையில் போட்டியிடுவது வாக்குகளை பிரித்து நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழர்களுக்கு பிடிக்காத ஒருவர் ஜனாதிபதிகாக உதவி செய்யும், நீங்கள் குறிப்பிட்டது போல பொது தமிழ் வேட்பாளருக்க்காக வெட்டுகுத்து கூட நடக்கலாம். வெல்லமுடியாவிட்டால் என்ன தேர்தலில் நின்று பிரபலமாகலாம் சரித்திரத்தில் இடம்பிடிக்கலாம் என்று நினைப்பார்கள்.
கோமதி Wrote:எனக்கு என்ன ஆச்சரியமும் வேதனையுமென்றால், இன்னும் புலிகளோ, தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ இத்தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. அதைச் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்குண்டு. சும்மா நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லிவிட முடியாது. குறைந்தபட்சம் வாக்களி;ப்பிலிருந்து ஒதுங்கியிருங்கள் என்றாவது சொல்லப்பட வேண்டும்.
புலிகள் வெளிப்படையாக இந்த தேர்தலில் யாரையும் ஆதரிக்கும்படி சொல்ல மாட்டார்கள் என்றே நான் நினைக்கின்றேன். அப்படி ஒரு நியாயமான நம்பிக்கையான தலைவர் தெற்கில் போட்டியிடவில்லை என்று நினைக்கின்றேன், அதுதவிர அப்படி வெளிப்படையாக ஒருவரை ஆதரிக்கும் போது இரண்டு சிக்கல்கள் எழலாம். ஒன்று புலிகள் ரணிலை ஆதரிக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி மகிந்தவும் ஜேவிபியும் பிரச்சாரம் செய்து சிங்கள மக்களின் இன உணர்வை தூண்டி இலகுவாக மகிந்தவை வெற்றி பெற செய்ய முயலலாம், இது எதிர்மறையான விளைவை ஏற்ப்படுத்துவது, இரண்டாவது புலிகள் ஆதரித்து வெற்றி பெறும் ஜனாட்திபதியுடன் நாளை பிரைச்சனை தீர்வில் கருத்து முரண்பாடு ஏற்படும் போது அல்லது தமிழர்களுக்கு எதிராக அந்த ஜனாதிபதி நடக்கும் போது அது புலிகளுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை உருவாக்கலாம்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

