Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோழிமுட்டை சைவமா?அசைவமா?
#1
"கோழி முட்டை அசைவம்.' எனவே, அவற்றை பொது இடங்களில் பகிரங்கமாக விற்கக் கூடாது. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி விற்பதை போல் முட்டை விற்பனைக்கும் தனியாக சட்ட விதிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் உருவாக்க வேண்டும்' என்றும் சட்டீஸ்கார் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் மனோகர் ஜெத்தானி. இவர் சட்டீஸ்கார் ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

ராய்ப்பூர் நகரில் பல இடங்களிலும் சாலையோரங்களில் இறைச்சி கடைகளில் கோழி முட்டைகள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. முட்டை சைவம் என்று சொல்வதற்கு சட்ட ரீதியாக எந்த முகாந்திரமும் இல்லை. உயிருள்ள கோழி முட்டை இடுகிறது. மண்ணில் விதை விதைத்து முட்டை உண்டாவதில்லை.

நகரில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பகிரங்கமாக முட்டை மற்றும் மாமிசம் விற்பனை செய்வது இதை சாப்பிடாத இதர சமூகத்தினரை பாதிக்கிறது. இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அனங்குமார் பட்நாயக் மற்றும் நீதிபதி திலீப் ராவ் சாகிப் தேஷ்முக் அடங்கிய சட்டீஸ்கார் ஐகோர்ட் பெஞ்ச் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

முட்டை அசைவ உணவு. அவற்றை தெருக்களில் விற்கக் கூடாது. கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பது போன்று முட்டைகள் விற்பதற்கும் தனியாக "லைசென்ஸ்' இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும். 1956ம் ஆண்டு நகராட்சி சட்டத்தின்படி முட்டை விற்பனை செய்வதற்கான இடங்களை மாநகராட்சியும், அரசும் அறிவிக்க வேண்டும். இதை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
"முட்டை' அசைவம்: high கோர்ட் தீர்ப்பு - by SUNDHAL - 10-08-2005, 03:08 PM
[No subject] - by RaMa - 10-16-2005, 05:34 PM
[No subject] - by vasisutha - 10-16-2005, 05:48 PM
[No subject] - by vasisutha - 10-16-2005, 05:52 PM
[No subject] - by sabi - 10-16-2005, 10:15 PM
[No subject] - by RaMa - 10-17-2005, 03:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)