10-08-2005, 12:30 AM
நீங்கள் கூறுவது போல் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரரீதியில் நாம் பாரியளவு முன்னேற்றமடைய வேண்டும். தமிழீழத்தின் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள அவற்றை தொடர்ச்சியாக பேண வேண்டும். இதற்கு முக்கிய பங்களிப்பை புலம் பெயர்ந்தவர்களால் தான் செய்ய முடியும். புலத்திலுள்ள ஒவ்வெரு தமிழனின் ஆர்வமும் உணர்வும் வெல்லப்பட வேண்டும். முக்கியமாக புலத்தில் பிறந்து வளர்ந்து வருகிற (அல்லது சிறுவயதில் வந்த) இரண்டாம் தலைமுறை மனோபாவம் கொண்டவர்களிற்கும் முதலாம் தலைமுறைகளின் மனோபாவத்திற்கும் இடையிலான இடை வெளி குறைக்கப்படவேண்டும். இங்கு முதலாவது தலைமுறை என்று கூற முனைவது போரின் வடுக்களை எதிர் கொண்டவர்;களை இனவாதத்தை அனுபவித்தவர்களை. இரண்டாம் தலைமுறை என கூறவருவது போராட்டத்தின் தேவையை நியாயத்தன்மை செந்த வாழ்வின் அனுபவங்களின் மூலம் உணரக்கூடி சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்.
முதலாவது தலைமுறையினர் இரண்டாந்தலைமுறை மனோபாவம் உள்ளவர்களை துரோகிகளாக பார்க்கும் மிகுந்த வேதனைக்குரிய நிலையில் இன்று நாம் உள்ளோம். இரண்டாந்தலைமுறையின் நிலையிலிருந்து பார்க்கும் போது நியாயமாகப்படுகிற எண்ணங்கள் கேள்விகள் முதலாவது தலைமுறையால் போராட்டத்தை கொச்சைப்படுத்த கேலிப்படுத்த முனைவதாகப்பார்க்கப்படுகிறது. அதற்கும் மேலாக ஒருவித அர்ப்பணிப்பு அற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். முதலாவது தலைமுறை காட்டும் வெறித்தனமான அர்பணிப்புக்களை சொந்த அனுபவங்களிற்கு பழிவாங்கும் மனநிலையின் வெளிப்பாடு தானா என எண்ணவைக்கிறது. அந்த எண்ணங்களை உருவாக்கக்கூடிய விதத்தில் முதலாம் தலைமுறை புலத்து போராட்ட ஆதரவாளர் தொடர்ந்து நடந்து கொண்டால் இரண்டாந் தலைமுறையின் முக்கிய பங்களிப்புகளை தமிழீழம் பெறுவது கடினமே.