Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியம்
#24
ஊடுருவலை நிறுத்தி முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாததால் உரிமை கோரும் பிரதேசங்களிற்கான வரைபை (தற்காலிகமாயினும்) மாற்றுவது சரியா?

ஊடுருவல் தாக்குதல் என்று பார்க்கும் போது யாருமே அதிலிருந்து பாதுகாத்து முற்றாக தடுத்து நிறுத்துகிற அளவிற்கு தமது பிரதேசங்களை கட்டுப்பாட்டில்வைத்திருக்கிறார்களா என்ற ஒரு கேள்வியும் உண்டு. ஊடுருவல் தாக்குதல்களிலிருந்து உண்மையான பாதுகாப்பு அவ்வாறு நடைபெற்றால் அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த பதில் நடவடிக்கை எடுக்கக்கூடி ஆற்றலில் தான் உள்ளது.

அதாவது சிறீலங்கா படைகளோடு குறைந்தபட்சம் இராணுவச்சம நிலை தேவை ஆனால் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிகள் தொடர்ந்தாத்தான் அந்த குறைந்தபட்ச சமநிலை பேணப்படும். இந்த பதில் தாக்குதல் திறமை தனியே இராணுவ வலிமையில் அன்றி பொருளாதாரா இராஜதந்திரரீதியிலும் காலப்போக்கில் வழர்த்தெடுக்கப்பட வேண்டும். முக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட தமீழத்தின் மீதான சதிகளை வலிந்து தாக்குதல் முயற்சிகளை தெளிவாக ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துகிற பக்குவத்தை அடைய வேண்டும்.

ஈழப்போர் 3 முடிவிற்கு வந்ததற்கு ஒரு காரணம் தொன்பகுதி மக்கள் பெருமளவில் யுத்தத்தில் நம்பிக்கையிழந்ததால். கட்டுநாயக்கா போன்ற தாக்குதல் மற்றும் இறந்த அங்கவீனமுற்ற படைகள் சாதாரண தென்பகுதி மக்கள் மத்தியில் உருவாக்கிய உளவியல்த் தாக்கம். போரினால் சீரழிந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டிருந் தனியார்துறை. இவைதான் தமிழீழத்திலிருந்து ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட்டபின்னர் ஊடுருவல் தாக்குதல் மற்றும் வலிந்து தாக்குதல் முயற்சிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவ முடியும். அதாவது புலிகளின் பதில் தாக்குதலின் உக்கிரத்தால் ஏதிர்கொள்ள வேண்டிய எதிரொலிகள் பக்கவிளைவுகள் தான் ஊடுருவல் தொல்லைகளிற்கு பாதுகாப்பு. அத்தோடு புலநாய்வு மற்றும் முறையடிப்பு ஆற்றல்களும் மிகமுக்கியம்.

பெரும்பான்மையான சிங்கள மக்களை தமிழீழம் என்ற ஒன்றை ஏற்று தமிழ்மக்களை சுயமரியாதையுடன் வாழ அனுமதித்தால் தான் தாமக்கு ஒரு வாழ்வு உண்டு என்ற உண்மையை நிரந்தரமாக உறைக்கவைக்கிற போராக தமிழீழப் பிரகடனத்திற்கு முன்னரான இறுதிப்போர் இருக்க வேண்டும். ஆனால் சிறீலங்காவில் இராணுவ சர்வாதிகார ஆட்சிவந்தால் இந்த பாதுகாப்பு இருக்காது. அந்த சர்வாதிகாரத்திலிருந்து சிங்கள மக்களை மீட்கிற பொறுப்பும்.. :roll: :?

தமிழீழத்தின் பொருளாதார வழர்ச்சிக்கு அதன் அனைத்துப்பகுதிகளும் மிக முக்கியம். ஒவ்வொன்றிற்கும் பிரத்தியோக முக்கியத்துவமும் பயன்பாடும் உண்டு. முழுக்கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பிரதேசம் புலிகளின் இராணுவ பலத்தை கட்டியெழுப்பவும் விருத்தி செய்யவும் உதவுகிறது. மிக முக்கியமாக மரபுவழி போர்திறனை வழர்க்க தேவையான ஒன்று. ஆனால் இதே பாணியில் தான் தமிழீழத்தையும், அதன் பொருளாதார நிர்வாகக் கட்டமைப்புகளையும் அங்கீகார நிலைக்கு கட்டியெழுப்ப ஒரு சிறிய பகுதியை உயர்பாதுகாப்பு வலையமாக வைத்து பூர்த்தி செய்ய முனைவது சரியா?
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 09-25-2005, 12:50 PM
[No subject] - by narathar - 09-25-2005, 01:27 PM
[No subject] - by vasanthan - 09-25-2005, 02:58 PM
[No subject] - by kurukaalapoovan - 09-25-2005, 04:57 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 08:09 AM
[No subject] - by narathar - 10-02-2005, 10:32 AM
[No subject] - by Thala - 10-02-2005, 10:37 AM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 03:34 PM
[No subject] - by narathar - 10-02-2005, 07:05 PM
[No subject] - by Jude - 10-02-2005, 07:15 PM
[No subject] - by narathar - 10-02-2005, 07:28 PM
[No subject] - by Thala - 10-02-2005, 10:31 PM
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 10:37 PM
[No subject] - by Jude - 10-03-2005, 01:55 AM
[No subject] - by Thala - 10-03-2005, 11:59 PM
[No subject] - by Jude - 10-04-2005, 05:00 AM
[No subject] - by kurukaalapoovan - 10-04-2005, 05:20 AM
[No subject] - by Thala - 10-04-2005, 09:47 AM
[No subject] - by Thala - 10-04-2005, 10:20 AM
[No subject] - by Thala - 10-04-2005, 10:22 AM
[No subject] - by narathar - 10-04-2005, 11:59 AM
[No subject] - by kurukaalapoovan - 10-07-2005, 11:16 PM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 12:30 AM
[No subject] - by RaMa - 10-08-2005, 12:39 AM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)