Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளிநொச்சி மீட்பு எவ்வாறு... பாகம் 3
#4
கிளிநொச்சி மீட்பு பாகம் 3

கிளிநொச்சி இராணுவ முகாமை ஆக்கிரமித்திருந்த படைகளுக்கு அன்று பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க தலைமை வகித்திருந்த போதும் சத்ஜெய சமரின் மூன்று கட்டங்களுக்கும் வழிகாட்டிய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சிறீலால் வீரசூரியா, பிரிகேடியர் வசந்த பெரேரா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழருக்குரிய நிலங்களை ஆக்கிரமிப்பதிலேயே இவர்கள் தீவிரமாகச் செயற்பட்டார்களேயானால் சொந்த மண்ணை இழந்த நிலையில் ஏதிலிகளாகிய தமது மக்களின் வாழ்விடங்களை மீட்கும் செயற்பாட்டுக்கு தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும் எந்தளவு தீவிரமாகச் செயற்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். அதாவது புலிகள் அமைப்பின் ஒவ்வொரு தளபதிகளும் கிளிநொச்சி முகாமைத் தாக்குவதற்கான திட்டங்களை வகுத்தவண்ணமே இருந்துள்ளனர். அதற்காக விடுதலைப் புலிகளின் விசேட வேவுப்பிரிவுப் போராளிகள் மட்டுமல்லாது தேவைக்கேற்ப ஒவ்வொரு தளபதிகளும் தமது அணியின் வேவுப்போராளிகளை இம்முகாம் மீதான வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியும் வந்துள்ளனர்.

அந்த வகையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியிலிருந்து அன்று வேவு செயற்பாட்டை மேற்கொண்டவரும் பின்னர் விசேட வேவுப்பிரிவோடிணைந்து வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டவருமான போராளி வீரமணி தாம் எந்த நோக்கோடு முகாமுக்குள் நுழைந்தார்கள்; என்பதையும் எதிரியின் நிலைகளை எவ்வாறு அவதானித்தார்கள் என்பதையும் தாம் இராணுவ முகாமுக்குள் வேவுச்செயற்பாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட திகிலு}ட்டும் அனுபவங்களையும் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

கிளிநொச்சி இராணுவ முகாமினுடைய வேவு நடவடிக்கையைச் செய்யுமாறு தளபதி பால்ராஜ் அண்ணாவால் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. எதிரியின் முகாமிற்கு வெளிப்பகுதியில் எங்களுடைய வேவு நடவடிக்கைகளைச் செய்த அந்தக் காலப்பகுதி எமது நடமாட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. ஏனெனில் எதிரியின் அரண்களுக்கு முன்பாக அவனது படைகள் பதுங்கியிருந்து தாக்கி எமக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வந்தார்கள். இதனால் முன்னணி வேவுத்தரவுகளைக் கூடத் திரட்ட முடியாதிருந்த காலப்பகுதியில்தான் உள் வேவு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தக் காலப்பகுதியில் நாங்கள் சகல இடங்களிலும் எதிரியின் காவல் அரண்களை நெருங்கி நெருங்கி அவதானித்து வந்தோம். எந்தப் பகுதியில் எதிரியின் அவதானிப்பு குறைவாக இருக்கிறதோ அதனு}டாக நாங்கள் உட்புகுவதற்கான வழியினை தேடிக்கொண்டிருந்தோம். அந்தக் காலப்பகுதியில் தான் எதிரியின் கம்பி வேலியிலிருந்து 100 மீற்றர் சில வேளைகளில் 200 மீற்றர் முன்பாக தனது அணியை காவலரண்களுக்கு முன்பாக நிலைப்படுத்தியிருந்தான். ஏனெனில் எமது அணிகளின் நடவடிக்கை எப்படியிருக்கின்றது என்பதை அறிந்து தமது முகாமை உசார்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. இதனால் நாங்கள் கடினமான முயற்சியெடுத்துதான் இந்த வேவு நடவடிக்கையை மேற்கொண்டோம்.

நாங்கள் உருத்திரபுரம் டி-7 பகுதியால் வந்து ஒரு வேவு நடவடிக்கை செய்தோம் இந்த நேரத்தில் வெளிவேவுகளை தீவிரப்படுத்தியிருந்தார் தளபதி பால்ராஜ் அண்ணா. இதேநேரம் இன்னுமொரு அணியும் உள்வேவுக்காக ஒரு பாதையை பார்த்து உட்செல்ல முயற்சி செய்து கொண்டிருந்த வேளைதான் எதிரி அவதானிப்பு நிலையிலிருந்து அவதானித்து அந்த அணிக்கு பின்புறமாக தமது அணியை நகர்த்தி வந்து தாக்குதல் செய்து போராளி ஒருவரின் தலையை வெட்டிக் கொண்டு போய்விட்டான். அதற்குப் பின்பு நாங்கள் அங்கு சென்று தாக்குதலை நடத்தி அப்போராளியின் உடலை மீட்டுக்கொண்டு வந்தோம். இதனையடுத்து தளபதி பால்ராஜ் உள்நடவடிக்கைக்காக என்னோடு மூன்று பேர் கொண்ட ஒரு வேவு அணியையும் இன்னுமொரு அணியையும் தயார்படுத்தினார். என்னோடு இணைக்கப்பட்டவர்கள் மேஜர் சசிக்குமார், கரும்புலி மேஜர் நிதர்சன் ஆகியோர் அதே நேரத்தில் போராளி லு}யினின் தலைமையிலான மற்றைய அணியில் மேஜர் பரணி, கப்டன் தமிழவன் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இந்த இரண்டு அணிகளையும் உள்ளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைத்தான் அவர் செய்திருந்தார். டி-7 பக்கமாக காவலரணை அடித்து எதிரிக்குச் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அதேநேரத்தில், கொண்டு வரவேண்டும். அதேநேரத்தில் எங்களையும் உள்ளுக்கு அனுப்பவேண்டும் என்று முன்னணி வேவு அணிகளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலுக்குப் போராளி ரஞ்சன் லாலா பொறுப்பாக இருந்தார்.

நாங்கள் இந்நடவடிக்கைக்காக ஒருநாள் பயிற்சி எடுத்தோம். காவலரண் மீது தாக்குதல் நடத்தியவுடன் எங்களை உள்ளே அனுப்புவதுதான் திட்டம். இதிலே அந்தச் சண்டையிலும் ஒரு
திட்டம் தரப்பட்டிருந்தது. ஒரு இடத்தில் இராணுவத்தினர் பதுங்கியிருந்து சென்றி பார்ப்பான் அந்த இடத்திற்கு குண்டு அடித்து சண்டையை ஆரம்பிப்பதுவே அத்திட்டம். இதற்காகத் தடைவெட்டும் போராளிகளுடன் நாங்கள் ஐந்து பேர் அமைதியாக நகர்ந்தோம். இரவு 12.45இற்கு சண்டையெனச் சொல்லப்பட்டிருந்தது.

நாங்கள் தடைகளையெல்லாம் வெட்டி நகர்ந்துகொண்டு போகும் சந்தர்ப்பத்தில் எதிரி வெளிச்சம் பாய்ச்சி நோட்டமிட்டு விட்டு பன்றி என்று நினைத்து கலைக்கத் தொடங்கினான். பின்பு எங்களை இனங் கண்டு விட்டான். உடனே அந்த இடத்திலே சண்டை ஆரம்பமானது. உடனே நாங்கள் இரண்டு குண்டுகளை அடித்துவிட்;டு மறைப்பு வேலிகளைப் பிரித்துக்கொண்டு பாதையை அகட்டி உள்நுழைந்தோம்.

நிறைய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. பரந்தன் பகுதியின் கிளிநொச்சி எல்லையிலிருந்து டிப்போ வரை எனது அணியின் வேவு நடவடிக்கைக்குரிய பகுதியாக இருந்தது. எனக்குத் தரப்பட்டிருந்த வேலைத்திட்டம் எதிரியின் முகாம்கள் எந்தெந்த இடங்களில் இருக்கிறதென்பதை அவதானிக்கும் திட்டமாக இருந்தது. கிளிநொச்சி எங்களுக்கு ஒரு பாPட்சமான இடமாக இருந்தபோதும் முகாமுக்குள் எல்லாமே மாற்றப்பட்டிருந்தது. எதிரி எல்லாவற்றையும் முழுமையாக மாற்றி வைத்திருந்தான்.

அன்று இரவு நாங்கள் முகாமுக்குள் சென்று விடிந்துகொண்டு வரும் நேரத்தில் கனகபுரப் பகுதியில் ஒரு ஆலமரத்தின் கீழுள்ள பழைய பங்கர் ஒன்றுக்குள் மூன்று பேரும் ஒழித்திருந்தோம். காலை 7.30 மணிக்கு அப்பகுதியால் இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். எமக்கு அருகாலும் சிலர் சென்றனர். ஆனால் எங்களைக் காணவில்லை. இராணுவத்தினர் இரவு சண்டை நடந்த இடத்திற்கு போய்க்கொண்டிருந்தனர். அதற்குப்பிறகு பகல் முழுவதும் அங்கேயே இருந்தோம்.

எதிரியின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் அதை பால்ராஜ் அண்ணை தமக்குத் தெரியப்படுத்தச் சொல்லியிருந்தார். அன்றிரவு 7.00 மணிக்கு ஆலமரத்தில் ஏறி பால்ராஜ் அண்ணையோடு தொலைத் தொடர்பு கருவி மூலம் கதைத்துவிட்டு இறங்கி கனகபுரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தோம். கனகபுரத்தில் இப்போது சங்கம் இருக்கின்ற இடத்திற்குப் பக்கத்தில் அன்று மினிமுகாம் ஒன்று இருந்தது. அங்கிருந்த மைதானம் ஆமி விளையாடும் மைதானமாக இருந்தது. அதற்குப் பக்கத்தில் இருந்து மூன்றுபேரும் அந்த இடத்தை அவதானித்தோம். அப்போது மின்பிறப்பாக்கி இயங்கிக்கொண்டிருந்தது. பின்பு அங்கிருந்து திருநகர் வீதியால் நகர்ந்து முன்பிருந்த சந்தைப்பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்குள் அன்று தங்கினோம்.

விடிந்தவுடன் பார்த்தபோது இராணுவத்தினது தடயங்கள் காணப்பட்டதோடு ஒரு வெளிப்பான பற்றையாகவும் இருந்தது. நாங்கள் அன்று பகல் முழுவதும் அதற்குள்ளேயே இருந்தோம். இருளானதும் அங்கிருந்து பால் சாலை வீதியால் வந்து பார்த்தோம். அப்பகுதியில் எதிரி இருக்கவில்லை. ஆனால் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. அதனால் இங்குதான் பிரதான முகாம் இருக்கவேண்டும் என்ற ஊகத்தில் இரவு பார்வை சாதனத்தால் பார்த்துக்கொண்டு போய் பிரதான வீதியில் ஏறிவிட்டோம். அங்கிருந்து நகர்ந்து சென்றால் முன்னர் சுவையுூற்று இருந்த இடத்திற்குப்போய் பின் பிரதான வீதியாலே நகர்ந்து வைத்தியசாலையை நோக்கிச் சென்றோம். அங்கு தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் எதிரியின் முட்கம்பி வேலிபோடப்பட்டிருந்தது. அந்த முட்கம்பி வேலியினைப் பிடித்துக்கொண்டுபோனோம். அங்கு புகையிரத வீதியோடுதான் பிரதான முகாமாக இருந்தது. அங்கு அவற்றை அவதானித்துக்கொண்டு புகையிரத வீதியால் நகர்ந்துசென்றோம்.

நாங்கள் எதிரியின் கம்பி வேலியை விட்டு விலகிச்சென்றால் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகளை சந்திக்க வேண்டிவரும் என்பதற்காக கம்பி வேலியைப் பிடித்துக்கொண்டே சென்றோம். அன்று பணக்காரத்தெரு என்று சொல்லப்பட்ட அந்தப்பகுதியில் முழுக்கட்டடங்களையும் எதிரி உடைத்திருந்தான் கம்பி வேலிகளின் முன்னால் நாய்களையும் கட்டி வைத்திருந்தான். நாய்கள் எங்களைப் பார்த்துக் குரைக்கத் தொடங்க எதிரி வெளிச்சம் பாய்ச்சிப்பார்த்துக்கொண்டிருந்தான். அதனால் நாங்கள் அமைதியாக குரோல் இழுத்துத் தவண்டு கால்களை மெதுவாக எடுத்துவைத்துதான் எங்களது நகர்வுகளை மேற்கொண்டோம்.

ஒவ்வொரு காவலரண்களும் எத்தனை மீற்றருக்கு ஒன்று இருக்கின்றதென்பதையும் குறித்துக்கொண்டு சென்றோம். இவ்வாறு ஒருபகுதியைப் பார்த்து முடித்துக் கொண்டு மீண்டும் சந்தைப்பகுதி பற்றைக்குள்ளேயே வந்து தங்கினோம். அன்று பகல் பால்ராஜ் அண்ணாவுடன் தொடர்பு கொண்டு எடுத்த தகவல்களை கொடுத்தோம். அடுத்த நாள் அதேபோன்று மற்றப்பகுதியைப் பார்க்கத் தொடங்கினோம். அப்போது கரடிப்போக்கு வாய்க்கால் பகுதியெல்லாம் மறிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பகுதியால் எல்லாம் உட்சென்று பார்த்துக்கொண்டு அதேபகுதியால் வந்து அரைவாசிப் பகுதியைப் பார்த்து விட்டு மூன்றாம் நாள் சந்தைப் பகுதிக்குள் தங்கினோம். நாங்கள் முதல் நாள் பால்ராஜ் அண்ணாவோடு தொடர்பு கொண்டதை எதிரி தனது தொலைத் தொடர்பு சாதனம் மூலம் கேட்டு நாங்கள் இருக்கும் பகுதியை அறிந்திருந்தான். அதனால் அன்று நாங்கள் இருந்த பற்றைப்பகுதியை சுற்றிவளைத்து இரண்டு டாங்கிகளையும் அப்பகுதிக்குத் தாக்குதல் நடத்தத்தயாராக வைத்துக் கொண்டு தேடுதல் செய்யத் தொடங்கினான்.

ஒரு பகுதியைத் தேடிமுடிக்க நாங்கள் அடுத்த பகுதிக்கு மாறினோம். இவ்வாறு நான்கு தடவைகள் நான்கு விதமாகத் தேடுதலை நடத்த நாங்களும் மாறிக்கொண்டிருந்தோம். இப்படியாக அவனது தேடுதல்கள் முடிந்து டாங்கிகள் எல்லாம் புறப்படும் நேரத்தில் நாங்கள் ஒரு புற்றுக்குப்பின்னால் மறைந்திருந்தோம். அப்போது ஒரு ஆமி என்னுடைய முகத்திற்கு நேராக வந்து என்னைக் கண்டுவிட்டான். நாங்கள் குண்டுகளை அடிக்கத்தயாராக வைத்திருந்தோம். சைனைட்டையும் வாய்க்குள் வைத்தபடியே இருந்தோம்.

என்னுடைய முகத்தைப் பார்த்தவன் உடனே பயந்து கண்ணை மூடிவிட்டு திரும்பிச்சென்றுவிட்டான். நாங்கள் இருளும்வரை அங்குதான் இருந்தோம். ஆனால் எங்களைத்தேடி எதிரி வரவில்லை. இதே நேரத்தில் எங்களிடம் இருந்த உணவுகள் குடிநீர் எல்லாம் முடிந்துவிட்டது. அங்குள்ள கிணறுகளிலும் தண்ணீர் எடுக்க முடியாது. கிணற்றுப்படிகள் எல்லாம் உடைந்துபோயிருந்தன. அதனால் எம்மிடம் இருந்த சிறிதளவு நீரை கான் மூடியில் எடுத்து தொண்டையை நனைத்துக்கொண்டுதான் இருந்தோம்.

மூன்றாம் நாள் எங்களது வேவு நடவடிக்கை முடிந்தது. இதனால எங்களை திரும்பி வருமாறு கட்டளை கிடைத்தது. ஆனால் உள்ளே இருந்து திரும்பிவர பாதையில்லை. எங்களை காவல் அரண் அடித்து உள்ளே அனுப்பியதால் பாதை எடுத்துத்தான் வெளியேவர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்காக நாங்கள் நகர்ந்து டிப்போ பகுதி மத்திய கல்லு}ரிப்பகுதி எல்லாம் பார்த்தோம் எதிரி மண்ணரன்களின் உட்பகுதியில் முட்கம்பிகளை வலைபோன்று மண்ணோடு சேர்த்து அடித்திருந்தான். அவற்றுக்குள் கண்ணிவெடிகளையும் புதைத்திருந்தான் இந்தப்பகுதியால் வெளியால் செல்லமுடியாது. அன்றிரவு மரத்தில் ஏறி பால்ராஜ் அண்ணாவுடன் தொடர்பு கொண்டேன்.

எங்களை கொம்படியால் வருமாறு கட்டளையிட்டார். அன்று அங்கேயே தங்க வேண்டியேற்பட்டது. அங்கு வற்றிய குளத்தின் ஒரு பகுதியில் நின்ற சேற்று நீரை துணிவைத்து எடுத்துகுடித்து விட்டு வந்து வான்கரையின் ஒருபகுதியில் ஒளித்துக்கொண்டோம். இதேவேளை ரொட்றிக்கோ மைதானத்pல் இராணுவத்தினருக்கு பயிற்சி நடந்து கொண்டீருந்தது. அங்கு நடந்த சூட்டுப்பயிற்சியில் வந்த சன்னங்கள் எங்களைச்சுற்றி வீழ்ந்து கொண்டிருந்தன. பின்பு நாங்கள் இரவு நகர்ந்த தடயங்களை கண்டவுடன் தேடுதலை எதிரி மேற்கொள்ளத் தொடங்கினான். அப்போது நான் இருந்த இடத்தில் எறும்புகள் என்னைமொய்த்துக்கடித்துக் கொண்டிருந்தன. நான் அப்போது அசைய முடியாது இருந்தேன். ஒரு ஆமி வந்து எனது பாதத்திற்கு மேல் தனது கால்களை வைத்துக்கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு தொடர்ந்து தேடுதலை முடித்துக்கொண்டு போய்வி;ட்டான்.

அடுத்தநாள் நாங்கள் உப்பளப்பகுதிக்குப் போய் அன்று பகல் அங்கேயே மறைந்திருந்தோம். அன்றிரவு தட்டுவன் கொட்டிப்பகுதியால் கடந்து சென்றோம். அன்று நேரம் போதாமையினால் ஆனையிறவின் பெருங்காட்டுப்பக்கமாய் போய் தங்கினோம். அப்போது எங்களுக்கு உணவோ நீரோ இருக்கவில்லை. பசிக்களையில் விழுந்த பனம்பழத்தை எடுத்துச்சாப்பிட்டு விட்டு இருந்தோம். ஆனால் வெளியில் வரப்பாதை இருக்கவில்லை. அப்போது பால்ராஜ் அண்ணை எங்களோடு தொடர்பு கொண்டு நீங்கள் எந்த இடத்திலாவது ஆமியின் காவலரன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு வெளியே வாருங்கள் நாங்கள் அந்தப்பகுதியால் வந்து உங்களை மீட்போம் எனக்கூறினார். அன்படி நாங்கள் நகர்ந்து சென்றபோது எதிரி எங்களைக்கண்டு தாக்கத் தொடங்கினான். நாங்களும் தாக்கத் தொடங்கினோம். பிறகு நாங்கள் ஓடி காட்டுக்குள் மறைந்துகொண்டோம். எங்களோடு வந்த போராளி சசிக்குமாரைக் காணவில்லை. நாங்கள் இருவரும் அன்று காலை காட்டுக்குள் இருந்தபோது தேடுதல் நடத்திய ஆமி எங்களைக் கண்டுவிட்டான். அதனால் நாங்கள் அவன் மீது தாக்கியவாறு அவனது அரண்களைத் தாண்டி கட்டைக்காட்டுப்பகுதியால் சென்று ஒரு நாவல் மரத்திற்கு மேலே ஏறி இருந்தோம்.

ஆமி கீழால் சென்றான். ஆனால் எங்களைக் காணவில்லை. எங்களுக்கு நீர் கூட இல்லாததினால் சோர்வடைந்து விட்டோம். நடக்க முடியவில்லை. ஒருவாறாக அன்றிரவு ஆமியின் வேலியைக்கடந்து பூனைத்தொடுவாய் பகுதியால் வந்து வெளியேறியதோடு மயங்கிவிட்டோம். அப்பகுதி மக்கள்தான் எங்களைக் காப்பாற்றினார்கள். அடுத்தநாள் சுட்டதீவுப்பகுதியால் காணாமல் போன சசிக்குமாhரும் வந்து சேர்ந்தார்.



சுட்டது தமிழ்நாதத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 10-06-2005, 12:31 PM
[No subject] - by RaMa - 10-06-2005, 04:08 PM
[No subject] - by வியாசன் - 10-07-2005, 07:16 AM
[No subject] - by Thala - 10-07-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 10-07-2005, 02:49 PM
[No subject] - by வியாசன் - 10-07-2005, 03:23 PM
[No subject] - by வெண்ணிலா - 10-07-2005, 03:56 PM
[No subject] - by Thala - 10-07-2005, 06:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)