Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜே.வி.பிக்கு ஆப்பா..?
#3
இன்னெருதருக்கும் போல கிடக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>இலண்டனில் ஒரு மேடைப் பேச்சு</b> <i>நன்றி சங்கதி - பேராசிரியர் சிவசண்முகம்</i>

ஜுலை 7ம் நாள் இலண்டனில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் ஆனந்தசங்கரியின் மருமகள் சனுஜா பார்த்தசங்கரி கொல்லப்பட்டது, எமக்குத் தெரிந்த விடயம். இறுதிச் சடங்கில் பங்குபற்றுவதற்காக ஆனந்தசங்கரி இலண்டன் சென்றிருந்;தார். அவர் நேரம் கிடைத்தபோது சில பொது நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினார். இலண்டன் சிங்கள மக்கள் சங்கமம் விடுத்த அழைப்பை ஏற்று சங்கரி மிகவும் வியப்பூட்டும் ஒரு பேருரையை வழங்கினார். தனது பேச்சை அவர் சிங்கள மொழியில் 'சகோதர சகோதரிகளே" என்று ஆரம்பித்து அரைமணி நேரத்திற்கு மேலாக அதே மொழியில் பேசினார். பேச்சு முடிவில் அவர் ஆங்கில மொழியில் சில நிமிடங்கள் பேசினார். அவருக்கு நன்றியுரை சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. தேனீர் உபசரிப்புக்குப் பதிலாக அவருக்கு வேறு வகையான உற்சாக பானம் வழங்கப்பட்டது.

சங்கரி இப்போதெல்லாம் சிறிலங்காவில் வாழ்வதைத் தவிர்த்து வருகிறார். நன்மை தீமைக்கு வந்து இறங்கிய வேகத்திலேயே மீண்டும் ஓடி மறைவதுண்டு. எனது மக்கள் என்று தமிழர்கள் பற்றி வாய் ஓயாமல் கூறுமவர் ஏன் அதே மக்களை விட்டு விலகி வாழ விரும்புகிறாரோ தெரியவில்லை. சுனாமி வருமுன்னே சில விலங்கினங்கள் ஓடித் தப்பித்து விட்டதாகச் சொல்கிறார்கள். அது உண்மையும்தான். அவருக்கு சுனாமிப் பயம் இருப்பதாக சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். மிகக் கூடுதலாக சங்கரி இந்தியாவில்தான் அதிக நேரம் செலவிடுகிறார். சென்னை, புதுடில்லி போன்ற பெருநகரங்களின் காலநிலை அவருக்கு இதமாக இருக்கிறதாம். அவருடைய உற்ற நண்பர்களான றோப்படையினர் அவரை சிறிலங்கா போகும்படி வற்புறுத்துகிறார்களாம். என்றாலும் அவருக்குச் சில அச்சங்கள் இருப்பதால் நாடு நாடாகத் திரியத்தான் அவருக்கு விருப்பம்.

அவருக்குப் பயிற்சி வழங்கிய குருநாதர் கதிர்காமர் இறந்தபடியால் சங்கரி மீது ஒரு வினோதமான குற்றம் சுமத்தப்படுகிறது. அவருக்கும் உயிர் பறித்தவர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச் சாட்டல்ல. தாய் வயிற்றில் பிள்ளை இருக்கும்போது தகப்பன் இறந்தால் 'தகப்பனைத் தின்னி" என்று குற்றம் சாட்டுவார்கள். இப்போது குருவைத் தின்னி என்ற பட்டம் சங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது என்றோ ஒருநாள் என்னைப்போல் வரக்கூடிய மனிதன் என்று சங்கரிக்கு முழுப் பயிற்சியும் வழங்க முன்பே கதிர்காமர் மண்டைடையப் போட்டு விட்டாரே. சங்கரியின் பேராசை அல்லது தீய எண்ணம்தான் கதிர்காமரின் சாவுக்குக் காரணம் என்று பேரினவாதிகள் சிந்திக்கிறார்கள். அதனால் வெளிவிவகார அமைச்சர் பதவி சங்கரிக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

சங்கரி சிங்களத்தில் ஆற்றிய உரையை இங்கு தமிழில் தருகிறோம். முதலாவதாகத் தனது அரசியல் வரலாறை அவர் விளக்கிக் கூறினார். 1960ம் ஆண்டு தொடக்கம் நான் அரசியலில் இருக்கிறேன். அதாவது 45 ஆண்டு காலம். நான் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, பீற்றர் கெனமன், எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா, சிறிமாவோ ஜெயவர்த்தனா, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகிய சிங்களத் தலைவர்களின் நண்பன். எனக்குத் தமிழ் நண்பர்கள், அதாவது உண்மையான நண்பர்கள் கிடையவே கிடையாது. பாம்பின் காலைப் பாம்பு அறியும் என்பார்கள். என்னைத் தமிழர்கள் நம்புவதில்லை. நான் சில வித்தைகள் செய்து தமிழ் மக்களை ஏமாற்றிப் பாராளுமன்றம் சென்றது உண்மை. என்னுடைய திரு விளையாடல்கள் நீடிக்கவில்லை. மக்கள், அதாவது தமிழ் மக்கள் என்னைத் து}க்கி எறிந்ததோடு என்னைத் துரத்தியும் விட்டார்கள். அதனால் தான் ஏதேனும் பதவியைத் தருவார்கள் என்ற ஆசையில் சிங்கள இனத்தின் உதவியை நாடுகிறேன். என்னை எம்.பி ஆக்குகிறோம் என்று பிக்குகளின் கட்சி சொல்லிற்று. ஆனால் மறந்துபோய் விட்டார்கள். என்னைக் கொண்டு அவர்கள் சில துரோக வேலை செய்யப் பார்க்கிறார்கள். கூலி சரியென்றால் நான் அதற்கும் தயார்.

போர்நிறுத்த உடன்படிக்கையில் பல தவறுகள் இருக்கின்றன. என்னைக் கேட்டு அதைச் செய்திருந்தால் ஒரு தவறும் வந்திருக்காது. புலிகளுடைய ஆயுதங்களை சிங்கள இராணுவத்திடம் உடன்படிக்கையின் கீழ் ஒப்படைத்திருந்தால் உண்மையான சமாதானம் ஏற்பட்டிருக்கும். இப்படி அவர் புலம்பிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒரு சிங்கள அன்பன் 'மோடையா, நீ சரியான பைத்தியம். புலி ஆயுதம் கைவிடுமா? நிப்பாட்டு இடத்தைக் காலிசெய்" என்று கூச்சலிட்டார். அவரைத் தொடர்ந்து இதைப்போன்ற வேறு குரல்களும் கேட்டன. சங்கரி அவ்வளவோடு நிறுத்திக் கொண்டு சிறிலங்கா து}தரகத்தில் போய் ஓய்வெடுத்தார்.
http://www.sankathi.net/index.php?option=c...=2829&Itemid=41
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 10-05-2005, 03:03 PM
[No subject] - by kurukaalapoovan - 10-05-2005, 09:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)