11-15-2003, 12:40 PM
பொங்கு தமிழின் போது வேண்டம் இன்றும் தான் சொல்கின்றோம். தலைவர் அவர்கள் சொன்னது போல திணிக்கப்பட்டால் நிச்சயமாக அதற்கும் பின் வாங்க மாட்டோம். உலக நாடுகளைக் காட்டி எத்தனை நாளைக்கு இவர்கள் இப்படி தமிழரை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றார்கள். நாம் காலிக்கு மாத்தரைக்குப் போராட வில்லை எமது மண்ணிற்கு அந்த மண்ணின் மக்களுக்காக. ஏன் பத்திரிகைகள் படிக்கவில்லையா? எததனையோ வெகு சன அமைப்புக்கள் தலைவர் அவர்களுக்கு அனுப்பிய அறிக்கைகளில் என்ன வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் என்று. நாம் என்றும் போரை விரும்பவில்ல ஐயா அது எமது வீட்டுக் கதைவைத தட்டிய படியினால் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டி வந்தது. அவர்கள் மட்டும் போரேன்றால் போர் என்று கொக்கரிக்க நாம் என்ன தலைகுனிந்து வாழ செல்வாவின் காலத்திலா இருக்கின்றோம்.
ஏன் கண்கூடாகத் தான் காண்கின்றோமே யார் போர் வெறியர் என்பதை.
ஐயா குருவியாரே பேரினத்தின் திருகு தாளங்கள் இன்று நேற்றா ஐம்பது வருடங்களாகத் தானே. இனியும் நாம் ஏமாந்தால் அது அவர்கள் பிழையல்ல எமது பிழை. இனியாவது கண்விழிப்போம்.
அன்புடன்
சீலன்.

seelan