Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்டப் புளுகு... ஆகாச புளுகு ஏன்?...
#1
சிலருக்கு பொய் பேசுவது தண்ணி பட்ட பாடு. எப்போது பார்த்தாலும் புரூடா விட்டுக் கொண்டிருப்பார்கள். அடுத்தவரை ஏமாற்றுவதில் இவர்களுக்கு அலாதி பிhpயம் உண்டு. பொய் சொல்வதும், ஏமாற்றுவதும் மோசமான பழக்கம், அதனால் சமுதாயத்தில் மதிப்பு கெடும் என்பதை பற்றி துளி கூட கவலையில்லாமல், பீலா விடுவார்கள்.

இந்நிலையில் சிலர் பொய்யர்களாக இருக்க காரணம் என்ன? இதற்காக மூளையில் குறிப்பிட்ட மாற்றங்கள் எதுவும் உள்ளதா? என்ற கேள்விக்கு அமொpக்க உளவியல் நிபுணர் அட்hpயான் ரெய்னே பதில் அளித்துள்ளார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர், பொய் பேசுவதையும், ஏமாற்று வதையும் குலத் தொழிலாக வைத்திருப்பவர்களையும், நேர்மையான பழக்க வழக்கம் உடையவர்களையும் எடுத்துக் கொண்டு, அவர்களின் மூளையை ஆராய்ந்தார். அப்போது 2 பிhpவினருக்கும் இடையே குறிப்பிட்ட சில வித்தியாசங்கள் இருப்பது தொpய வந்தது.

இயல்பான மனிதர்களுடன் ஒப்பிடும் போது, பொய்யர்களின் மூளையில் வெள்ளைப் பகுதி 22 சதவீதம் அதிகமாக காணப்பட்டது. அதே சமயம் சமூக விரோதிகளைக் காட்டிலும் 25.7 சதவீதம் அதிகமாக இருந்தது. கட்டுப்பாடான வர்களைக் காட்டிலும், பொய்யர்களின் மூளையில் பழுப்பு நிறப் பகுதி 14.2 சதவீதம் குறைந்து இருந்தது. இதன்மூலம் விடை கிடைக்காத சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

அதாவது, பழுப்பு நிறப் பகுதியில் காணப்படும் குறைவு, பொய் பேசும் பழக்கம் உள்ளது என்பதற்கான முதல் அறிகுறியாக ஆகும். வெள்ளை நிறப் பகுதி கூடுதலாக காணப்படும் பட்சத்தில், பொய் பேசுவது அவர்களுக்கு எளிதாகி விடுகிறது. பழுப்பு நிறப்பகுதி 14 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால், அவர்கள் சமுதாயத்தைப் பற்றியோ, சமூக ஒழுக்கங்கள் பற்றியோ கவலைப்படுவது இல்லையாம்.

Thanks:dinakaran..............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
அண்டப் புளுகு... ஆகாச புளுகு ஏன்?... - by SUNDHAL - 10-04-2005, 03:17 PM
[No subject] - by RaMa - 10-06-2005, 07:25 AM
[No subject] - by SUNDHAL - 10-06-2005, 11:31 PM
[No subject] - by RaMa - 10-07-2005, 03:42 AM
[No subject] - by SUNDHAL - 10-07-2005, 04:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)