Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள ஊடகங்களுக்கு ஐரோப்பியஒன்றியம் கண்டனம்
#1
பயணத் தடை முடிவை திசை திருப்பும் சிங்கள ஊடகங்கள்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
[செவ்வாய்க்கிழமை, 4 ஒக்ரொபர் 2005, 19:36 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான பயணத் தடை விதித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு தொடர்பாக சிறிலங்கா ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


இலங்கை இனப்பிரச்சனைக்கான அமைதி முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பிரதிநிதியின் அறிக்கையை கொழும்பில் உள்ள இங்கிலாந்துக்கான தூதரகம் இன்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயணத் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை பல ஊடகங்கள் சரியாக வெளியிட்டு இருக்கின்றன. இருப்பினும் சில ஊடகங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது நோர்வே அரசாங்கத்துக்கு தோல்வி என்று கூறியுள்ளன. இது உண்மைக்குப் புறம்பானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகும்.

செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட டோக்கியோ இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையில் அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் அனுசரணைப் பணியை தொடர்ந்து ஆதரிப்போம் என்று சொல்லப்பட்டிருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை குறிப்பிட்டுச் சுடிக்காட்டி இருக்கிறது.

அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக ஆதரவு அளிக்கும். சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இருதரப்புப் பேச்சுகளை நடாத்த வேண்டும் என்பதுதான் முதன்மையானது. இப்பேச்சுகளை அனுசரணையாளர்கள் இன்றி நடாத்த முடியாது. இருதரப்பினரிடனும் நோர்வே நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இருதரப்பினரும் மீண்டும் அமைதிப் பேச்சுகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம், நோர்வேக்கு தொடர்ந்து சாத்தியமான வழிகளில் ஒத்துழைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
சிங்கள ஊடகங்களுக்கு ஐரோப்பியஒன்றியம் கண்டனம் - by வினித் - 10-04-2005, 02:31 PM
[No subject] - by Birundan - 10-04-2005, 02:43 PM
[No subject] - by sWEEtmICHe - 10-10-2005, 05:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)