Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'எழுகதமிழ்" எழுச்சிப் பேரணி
#1
ஐரோப்பிய ஒன்றியத் தடையை எதிர்த்து ஒக். 24-ல் பெல்ஜியத்தில் கண்டனப் போராட்டம்!


<b>தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையை நீக்க வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் திகதி பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறைக்கான ஆணையர் அலுவலகம் முன்பாக கண்டனப் போர் முழக்கம் நடைபெற உள்ளது.</b>

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான பயணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து இந்தப் போராட்டம் நடாத்தப்பட உள்ளது.
<b>தடையை நீக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான கையெழுத்தியக்கமும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கையெழுத்துக்களும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிகார ஆணையரிடம் கையளிக்கப்பட உள்ளது</b>.

<b>புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழர்களும் இந்த மாபெரும் கண்டனப் போர் முழக்கக் கூட்டத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</b>

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாழ். பொங்கு தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரும் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது.

மேலதிக விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.



www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
'வாழ்வுக்கும் உரிமைக்குமான போராட்டம்! - by வினித் - 10-04-2005, 01:56 PM
[No subject] - by sri - 10-09-2005, 09:09 PM
[No subject] - by cannon - 10-10-2005, 06:15 AM
[No subject] - by sri - 10-10-2005, 07:53 AM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 12:39 PM
[No subject] - by sri - 10-14-2005, 08:07 AM
[No subject] - by sri - 10-14-2005, 08:37 AM
[No subject] - by Shan - 10-14-2005, 11:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)