Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விமானத்தில்...
#1
அடடா...விமானத்தில் கூட போவது ரொம்ப சிக்கலாயிருக்குது..
நேற்று இரு நாடுகளில் நடந்த சிக்கலைப் பாருங்களேன்..
இங்கே.......
சிறிலங்கா ஏயார் லைன்சுக்குச் சொந்தமான லண்டன் விமானம் வெடிகுண்டுப் புரளியால் மீண்டும் கொழும்பிற்கே திரும்பியது.


இது குறித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய காவல்துறை அதிகாரி அசோக்க விஜயதிலக்க கூறுகையில்இ விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட திவீர சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றார்.

லண்டன் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அனாமதேய தொலைபேசித் தகவல் வந்ததையடுத்து விமானத்தை கொழும்பிலேயே மீண்டும் தரையிறக்க இதையடுத்து பாதுகாப்புப் பிரிவினர் முடிவு செய்தனர் என்று கொழும்பு விமான நிலையப் பேச்சாளர் ரூவினி ஜயசிங்க கூறினார்.

வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்ட யுஎல் 510 விமானத்தில் 257 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
-----------------------------

அங்கே...........

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் ‘கத்தார் ஏர்வேஸ்’ நிறுவன விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஒரு எலி விமானத்துக்குள் பாய்ந்து ஓடியது. உடனே பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டுஇ அந்த எலியை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 13 மணி நேரம் ‘சல்லடை’ போட்டு தேடியும் எலியை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனால் பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டுஇ விமானம் புறப்பட்டுச்சென்றது. எலி விமானத்தில்தான் இருக்கிறதா? அல்லது வெளியேறிவிட்டதா? என்ற குழப்பத்துடன்தான் பயணிகள் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள். இதுபோன்ற ஒரு சம்பவத்தை என் பணிக்காலத்தில் நான் பார்த்தது இல்லை என்று அந்த விமான நிலைய தலைமை அதிகாரி ஆக்டேவியோ லினோ தெரிவித்தார்.
Best_net Always with you!
Reply


Messages In This Thread
விமானத்தில்... - by best_net - 10-03-2005, 07:33 PM
[No subject] - by தூயா - 10-05-2005, 08:25 AM
[No subject] - by selvam - 10-05-2005, 12:11 PM
[No subject] - by தூயா - 10-05-2005, 12:16 PM
[No subject] - by MUGATHTHAR - 10-05-2005, 12:22 PM
[No subject] - by கரிகாலன் - 10-05-2005, 12:42 PM
[No subject] - by best_net - 10-05-2005, 12:51 PM
[No subject] - by Danklas - 10-05-2005, 12:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)