Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை!
#1
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இரண்டு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ். கொக்குவில் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈ.பி.டி.பி. உறுப்பினரான கிருஸ்ணன் பரமேஸ்வரன் (வயது 42) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இன்று காலை 7.30 அளவில் யாழ். சிங்கள மகாவித்தியாலயத்தில் பணிபுரியும் தனது மனைவியை பாடசாலைக்கு வழியனுப்பிவிட்டு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டிற்கு அவர் இலக்காகியுள்ளார். சங்கீத ஆசிரியராகவும் கிருஸ்ணன் பரமேஸ்வரன் பணியாற்றி வந்துள்ளார்.

கிருஸ்ணன் பரமேஸ்வரனின் தலையிலும் மார்பிலும் நான்கு சூட்டுக்காயங்கள் உள்ளன. துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இடத்திலேயே அவர் பலியானார்.

இதனிடையே பருத்தித்துறை குடத்தனை வல்லிப்புரம் கோவிலுக்கருகில் ஒருவரின் சடலத்தை சிறிலங்கா காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலை கண்டுபிடித்துள்ளனர்.

எரிந்த நிலையிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு செய்துவிட்டு பின்னர் அவரை எரித்திருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர் மணல் ஏற்றும் தொழிலாளி என்று கூறப்படுகிறது. இருப்பினும் கொல்லப்பட்டவர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reply


Messages In This Thread
யாழில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை! - by mayooran - 10-03-2005, 12:16 PM
[No subject] - by MUGATHTHAR - 10-03-2005, 12:25 PM
[No subject] - by கோமதி - 10-03-2005, 12:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)