Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்
#11
1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?
ஏன் அங்கு வேலை செய்யும் பெண்கள் திருமணத்தின் பின் ஆண்களை (தாயகத்தில் திருமணம் செய்திருந்தால்?) தங்கள் இடத்துக்கு அழைப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அப்படி செய்வதால் அவர்களிட்தே என்ன தவறைக் கண்டுள்ளீர்கள், எதிர் காலம் சிறப்புற அமைய குடும்பத்தில் விட்டுக் கொடுப்பு வேண்டும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)
அப்படி சத்தியமாய் யாரும் சொல்ல மாட்டார்கள் என நம்புகின்றேன்( சீ முளைச்சு 3 இளை விடல்ல அதுக்குள்ள நான் எங்க மனைவிக்கு பொறது....)

3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?
வழக்கத்தை விடுங்கள் பண்பாடு,கலாச்சாரம் என்பவற்றில் நம்பிக்கை கொள்ளக் கூடாது அதை நேர்தியாக கடைப்பிடிக்க வேண்டும். அதில் இருக்கும் தீய விடையங்களை விட வேண்டுமே தவிர நல்ல விடையங்களையும் சோர்த்து நம்பிக்கை இல்லை என்ற தொனியில் கைவிட முடியுமா? நீங்கள் தாலி கட்டிய திருமணங்களை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள் போல.. தேவாலயத்தில் நான் தாலியைக் கண்டதில்லை...ஏன்..சில கோவில்களில் கூட கண்டதில்லை... அதே கேள்வியை நான் திருப்பி கேட்டால்....திருமணம் செய்யும் மனைவிக்கு குறைந்த பவுணின் தாலி கட்டுவதே கேவலாமாக ஏன் பெண்கள் பார்க்கிறார்கள்? சமூதாய சாக்கடையாய் தாலியை நினைத்தால் கிளர்ந்தெழுந்து எனக்கு தாலி கட்ட வேண்டாம் என் மனதை புரிந்த கணவனாக வாழுங்கள் என்று ஏன் நேருக்கு நெர் சொல்லக்கூடாது?
4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?
இது உங்கள் ஆசை, அவரவர் கணவன் எப்படி இருக்க வெண்டும் என்பதை அந்ததந்த மனைவி மாரே முடிவு செய்ய வேண்டும். உங்கள் கணவர் உங்கள் படம் போட்ட லாக்கெட் போட வேண்டும் என்றால் தாராளமாக அந்த ஆசையை கணவனிடம் சொல்லுங்கள்...(உங்கள் என்றது எழுதியவரை மட்டுமல்ல..பெண்களை)
5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?
அட அட என்ன கேள்வி
வைபகத்தின் லாக்கரிலே கண்டேன் அவளது தாலியை....
வருடம் ஒருமுறை தட்டி பார்த்தால் தூசியை
வாங்கிய தங்கம் குறையவில்லையா என்று நெறுத்தும் பார்த்தால்..
இதற்க்குள் நான் எப்படி இந்த கேள்விக்கு சொல்வேன் பதிலை....
6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?
புலத்தை பற்றி கதைப்பதால், எத்தனை பெண்கள் தினமும் சமைக்கிறீர்கள்? எத்தனை பெண்கள் ரேக்அவட்டில் சாப்பாடு வேண்டுகின்றீர்? இதற்க்கு உங்கள் வீட்டு குளிர் சாதனப்பெட்டி பதில் சொல்லும்...

7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?
உடுப்பு தோய்பது முதல்... சமையல் வரை...அது தானே நடக்கிறது....

8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?
விட்டு விட வேண்டும் என்றால் விடத்தானே வேண்டும்..இதில் என்ன கேள்வி இருக்கிறது. பசித்தால் சாப்பிடத்தான் வேண்டும் அதை விடுத்து கொஞ்சம் பொறு நாளைக்கு அரிசி வரும் நாளை மறுதினம் கறி வரும் என்று சொல்லி பசியை ஆற்ற முடியுமா? வேலையை விட வேண்டும் என்ற நிலை வந்தால் அதை விடத்தானே வேண்டும்,..
9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?
ஆகா..குழந்தை வளர்ப்பில்.... உதவி.....
டேக்கோயர் சென்ரரில்...
நீ வளர்ந்தாய்...
டேச்சும் பிரஞ்சும் நீபடித்தாய்
தமிழ் மட்டும் உனக்கு தெரியாது..
ஆராரே பாட அன்னைக்கு நேரமில்லை
ஆர் ஆரோ உணவூட்ட
உன்பாட்டில் நீ வளர..
இதற்க்குள் குழலி இந்த கேள்வி கேட்க
நானதற்க்கு இப்படி பதிலளிக்க...
நீயிடையில் புகுந்து..
டேக்கேயார் சென்ரருக்கு
டாடி தான் விடுவரர் என்று சொல்ல...
இதில் யாருக்கு யார் உதவி....
குழலிக்கு தான்' புரியும்...

10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)
அப்படியாயின் ஒரு கணவன் தனது இளமைக்காலத்தை பற்றி மனைவியிடம் சொல்லாமல் விட்டால் மனைவி மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தாமா?
11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?
திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....
12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?
திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....[/color

13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?
[color=blue]திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....[/color
14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?
[color=blue]திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....[/color
15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?
[color=blue]அடப்பாவிங்களா...வீட்டீல சேலைக்கே தட்டுப்பாடு நீங்க வேற.....

16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?
சொந்த பெயரில கூப்பிட்டாலும் பிரச்சினையில்லை....சூரி பட ஸ்ரையிலிலா தன்ரை பெயரையும் கணவன்ர பெயரையும் சேர்த்து வைதெல்லே கூப்பிடினம்....

17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?
ஊருக்கு போய் நிக்கும் போது மனைவி எங்க வேலை செய்யிறது. பாவம் பெற்றதுகள் வாம்மா இரும்மா என்று மாகாராணி மாதிரி கவனிச்சு அனுப்புதுகள்...பிறகு அதுக்குள்ள என்ன உதவி....

18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?
அனுமதிபெறமால் அனுப்புவது பற்றி கணவனிடம் கேட்பது நியாயமா?சொல்லியிருந்தால் தெரிந்திருக்கும்...சொல்லாமல் அனுப்பினால் யாருக்கு தெரியும்.... அதை பற்றி
19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?
வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யலாம் என்று இருக்கிறன்....

20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?
தந்தால் சொல்லுகின்றேன்....

21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?
மப்பிளை வீட்டுக்கராரை மாப்பிளை வீட்டுக்கரார் என்று தானே சொல்லனும்..இதுக்கு புதிதாய் ஏதாவது சொல்லிருக்கா என்ன?
22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
வீட்டு பொறுப்பு பெரும்பாலாக மனைவி மாரிடமே உள்ளது...அதனால் பொருளாதார சுகந்திரம் யார் கையில் இருக்கும்?

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்

23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.

இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு

'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்

'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது

'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.

24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?
அது முன்னர் வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்ப்பட்ட விதத்தை பொறுத்தது
25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?
திருமணம் செய்வது உறுதியானால்.......நிச்சமாக....
26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
அப்படி உங்களில் சிலர் புலம்புவதால் எல்லோரும் அப்படி என்று நினைப்பது தவறல்லவா?
27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
உண்மையை சொல்லத்தானே வேண்டும்....

28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?
அவருக்காக நான் வேலை செய்கிறேனே என்று சந்தோசப்பட்டிருக்கிறேன்...
29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?
எங்கள் விருப்பத்தை யhர் கேட்டார்கள்.....

30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?
இல்லை...தந்தையிடம் பகிர்ந்து கொள்ளும் அனைத்து விடையங்களையும் தாயிடம் பகிர்ந்து கொள்ளலாமா? என்பதை நீங்கள் ஒரு தாயாக இருந்து பாருங்கள்.....

31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?
பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்களைனா வேட்டி கட்டனும் என்று தானே சொன்னார்கள் அது தானே தமிழர் பண்பாடு...பொம்பிளைனா ஜுன்ஸ் போடனும் ஆப்பிளைன்னாலும் ஜுன்ஸ் போடனும் என்று சொன்னால் அருவெறுப்பாக பார்க்கலாம்....
32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா
கண்டிக்க வேண்டிய தேவை என்ன உள்ளது?

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by inthirajith - 09-29-2005, 08:41 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 10:29 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 10:38 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 10:48 PM
[No subject] - by Maruthankerny - 10-01-2005, 11:37 PM
[No subject] - by Maruthankerny - 10-02-2005, 03:38 PM
[No subject] - by Rasikai - 10-02-2005, 05:29 PM
[No subject] - by Maruthankerny - 10-03-2005, 04:37 AM
[No subject] - by Nitharsan - 10-03-2005, 05:46 AM
[No subject] - by Vasampu - 10-03-2005, 06:08 PM
[No subject] - by Vasampu - 10-03-2005, 09:18 PM
[No subject] - by Rasikai - 10-03-2005, 10:40 PM
[No subject] - by Rasikai - 10-03-2005, 10:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)