Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புல தமிழர்கள் தொடங்க வேண்டிய யுத்தம்
#5
<img src='http://www.uthayan.com/images/editorialhead.gif' border='0' alt='user posted image'>

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இது இழுக்கன்றி வேறில்லை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் விடுத்த அறிக்கை அறிவிப்பு தமிழர் தரப் பில் எரிச்சலையும் விசனத்தையும் இவற்றுக்கு மேலாக சீற்றத் தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதி முயற்சிகளுக்கான வாய்ப்பு இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய தலையீட்டுக்கு வழி செய் யும் அறிவிப்புகள் அவசியம்தானா என்ற கேள்வி எழுகின்றது.

இதற்குப் பதிலளிப்பதற்குப் பொருத்தமானவர் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம்தான். அமைதி முயற்சி களில் சமாதானப் பேச்சுகளில் தமிழர் தரப்பில் முக்கிய பிரதிநிதி யாகப் பங்குபற்றியவர் அவர். இந்த அமைதி முயற்சிகளுக்கு நடுவே அனுசரணைத் தரப்பு ஊடாக சர்வதேச சமூகம் எமது பிரச் சினையில் எவ்வாறு முறையற்றுத் தலையீடு செய்கின்றது என் பதை நீண்டகாலத்துக்கு முன்னரே அவர் வெளிப்படுத்தியிருக் கின்றார். தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றை "போரும் சமாதானமும்' என்ற நூலில் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். அதன் தமிழ் வடிவமும் தற்போது வெளிவந்துள்ளது. அந்த வரலாற்று ஆவணத்தின் இறுதிப் பக்கங்கள் இந்தச் சர்வதேசத் தலையீட்டை நாசூக்காக வெளிப்படுத்துகின்றன. அது தான் அவரது ஆவணத் தில் முத்தாய்ப்பாக அமையும் அம்சமும்கூட.

"சமாதானப் பேச்சுகளின்போது நோர்வே அரச பிரதிநிதிகள் தமது மத்தியஸ்தப் பணியைத் திறம்படச் செய்தனர்; நடுநிலைப் பண்பை நேர்மையுடன் பேணினர்; பகையுணர்வும் விரோதப் போக்கும் தலைதூக்கா வண்ணம் இரு தரப்பினர் மத்தியிலும் பரஸ் பரம் நல்லெண்ணத்தையும் நல்லுறவையும் பேணி வளர்க்க உத வினர்; தர்க்கீகமான வாதங்களையும் கருத்தாடல்களையும் ஊக்கு வித்து, பரஸ்பர புரிந்துணர்வை ஆழமாக்க உதவினர்; இவ்விதம் மிகவும் நுட்பமாகப் பேச்சுகளை வழிநடத்திச் சென்ற நோர்வே இராஜதந்திரம் படிப்படியாகச் சர்வதேச நாடுகளின் மேலதிக தலை யீட்டுக்கு இடைவெளியை அனுமதித்துத் தவறிழைத்தது. பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல் கேந்திர அபி லாசைகளும் அதிகார வீச்சுகளும் பேச்சில் பங்கு கொண்ட இருதரப் பினரது அதிகாரம் சமவலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தின. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேச சமூகம், ஸ்ரீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நின்றது. இதனால், சம உறவு நிலை எமக் குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக அரசியல் தீர்வுக்கு வரம்பு களைத் திணிக்கத் துணிந்தன. இத்தலையீடானது. எமது அரசி யல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ணயித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. சர்வதேச சமூ கத்தின் தலையீடு மற்றும் நெருக்குவாரம் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி அமுக்கும் (இணிணtச்டிணட்ஞுணt) தனது அந்தரங்கத் திட்டத்தையே "சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். சமாதானத்தின் பெயரால் சர்வ தேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விக்கிரமசிங்க அரசு விரித்து வைத்த சர்வதேச சதிவலைப் பொறிக்குள் சிக்கிவிடாது இருப்ப தில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சமாதானப் பேச்சுகளை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ ரின் தேசிய இனப்பிரச்சினையைச் சர்வதேச மயப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால், அதேவேளை எமது மக்களின் விடுதலைப் போராட்ட இலட்சியத்தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு, தலையீடு செய்வதை நாம் வன்மையாக எதிர்த்தோம். மூன்றாம் தரப்பு அனுசரணையாளரின் மத்தியஸ்தத்துடன் எமது மக்களின் பிரச்சினையை நேர்மையுடன் பேசித் தீர்க்கும் பக்குவ மும் அதிகாரமும் அற்ற விக்கிரமசிங்கவின் நிர்வாகம் அமெரிக்கா வின் தலைமையிலான உலக நாடுகளை அணி சேர்த்துப் புலிக ளைப் பொறியிட முனைந்ததும் பேச்சுகள் முடங்கிப் போனதற்கு இன்னொரு காரணமாகும்.
இவ்வாறு தனது நூலின் இறுதிப் பக்கங்களில் மதியுரைஞர் பாலசிங்கம் குறிப்பிட்ட விடயங்களின் ஒரு தெறிப்புத்தான் ஐரோப் பிய ஒன்றியத்தின் தற்போதைய அறிக்கை.

யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செம்மையாகப் பேணுவது குறித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ள ஸ்ரீலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அந்தப் பேச்சை எங்கு நடத்துவது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் முரண்பட்டு நிற்கின்றனர். இந்த விடயத்தில் விடுதலைப்புலிகள் இணங்காத ஓரிடத்தை கட்டுநாயக்கா விமான நிலையச் சுற்றாடலை பொருத்தமான இட மாகத் தான் சிபாரிசு செய்வதாகத் தெரிவித்து, ஒரு தலைப்பட்ச மாக நோர்வே அனுசரணையாளர்கள் பகிரங்கமாக அறிவித்தமை கூட ஒரு பக்கம் கோடிடும் இந்த வகைச் செயற்பாட்டில்தான் அடங்குகின்றது.

சுமார் இருபது ஆண்டுகள், பதினெண்ணாயிரம் போராளிகளை யும் சுமார் ஐம்பதினாயிரம் பொதுமக்களையும் பலிகொடுத்து, பல்லாயிரம் கோடி ரூபா சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்து, கல்வி முதல் அபிவிருத்திவரை பலதுறைகளிலும் நலன் களைப் பறிகொடுத்து, தாம் நடத்திய விடுதலைப் போராட் டத்தை ஈழத்தமிழர்கள் இன்று இடைநிறுத்தி வைத்துவிட்டு, அமைதித் தீர்வுக்கு இணக்க முடிவுக்கு வாய்ப்பளிப்பதற்கு இட மளித்திருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் தங்களுக்கு நீதியான, நியாயமான தீர்வு ஒன்றைத் தென்னிலங்கை சிங்களத் தலைமைகள் தந்துவிடும் என்ற நம்பிக்கையால் அல்ல. இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் நீதி, நியாயமாக நடந்து கொள் ளும், பக்கம் கோடாமல் செயற்பட்டு, தமிழர்களின் நியாயமான அபிலாசைகளையும் உரிமைகளையும் பெற்றுத்தரும் போக்கில் அது செயலாற்றும் என்ற நம்பிக்கையால்தான்.

ஆனால், விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியமை போல அந்த நடுநிலைப் போக்கிலிருந்து சர்வதேச சமூகம் விலகும்போது தமிழர் தரப்பும் வேறு வழியின்றி விபரீத முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக் குத் தள்ளப்படும் என்பதை, தமது தனிப்பட்ட புவியியல் கேந் திர அபிலாஷைகளுக்கும் அதிகார வீச்சுகளுக்குமாகச் சர்வதேச சமூகத்தைப் பக்கம் சாய்வதற்கு வழி நடத்துகின்ற பலம் பொருந் திய நாடுகளும், அந்த நாடுகளைத் தமது பொய்ப்பிரசார நடவ டிக்கைகள் மூலம் தவறாகத் திசை திருப்புகின்ற ஸ்ரீலங்காத் தரப் பும் சிந்திக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்து அல்லது இலங்கை அரசுத் தரப்பு சமர்ப்பித்திருக்கக் கூடிய உண் மைக்குப் புறம்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் பணிகளுக்குத் தடை விதித்ததன் மூலம், பேச்சு மேசையில் ஸ்ரீலங்கா அரசும் புலிகளும் சமம் என்ற பேச்சுக்கு அடிப்படையான நிலையைச் சீர்குலைத்து, தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி, சிங்களம் விரும்பும் அரைகுறைத் தீர் வைத் தமிழர் மீது திணிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து முயற்சி எடுக்கின்றது. இப்படி பொங்குதமிழை ஒட்டிய பிரகட னம் மூலம் தமிழர்கள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு தன்னை நடுநிலைப் போக்குடைய அமைப்பாகப் பாசாங்கு பண்ணி, அதிகம் பேசும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நல்லதோர் சாட்டை.
பலம் பொருந்திய வல்லாதிக்க நாடுகளின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அபிலாஷைகளைத் தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவற்றின் ஏவல் நாயாக வேலைக்காரனாக கைப் பொம்மையாக ஐரோப்பிய ஒன்றியம் மாறிவருவது அதில் அங் கம் வகிக்கும் இருபத்தைந்துக்கும் அதிகமான நாடுகளின் தனிப் பட்ட பெருமைக்கும், சிறப்புக்கும், தனித்துவத்துக்கும் இழுக்கே யன்றி வேறில்லை.

உதயன் ஆசிரியர் தலையங்கம்
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-02-2005, 03:49 PM
[No subject] - by adithadi - 10-02-2005, 05:07 PM
[No subject] - by வினித் - 10-02-2005, 07:29 PM
[No subject] - by வதனா - 10-02-2005, 07:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)