10-02-2005, 07:29 PM
ஐரோப்பிய ஒன்றியம் தவறிழைத்து விட்டதென்பதை நாம்
ஒற்றுமையுடன் செயற்பட்டு உலகறியச் செய்ய வேண்டும்
திருமலையில் சம்பந்தன் எம்.பி.திருகோணமலை,
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தவறிழைத்து விட்டது என்பதனை நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டு உலகறியச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விதித்து விட்டு தவறு செய்தவர்களுக்கு நியாயம் வழங்குவதாகக் கூறுவது வேடிக்கையானது. இதனை சர்வதேச சமூகம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய அரசியல் நிலை தொடர்பாகவும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டினை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்ட நிகழ்வு திருகோணமலை விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இளைப்பாறிய உதவிக் கல்விப் பணி ப்பாளர்
. தங்கராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் கூறுகையில்,
இலங்கை அரசு நமக்குத் தரவேண்டியதைத் தராவிட்டால், அதனால் தமிழ் பேசும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்களை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஐ.நா. செயலாளர் நாயகம் தமிழர் பிரதேசங்களுக்கு செல்ல முயன்ற போதும் கூட இந்த அரசு அவர்களை தமிழர் தாயகத்திற்கு வரவிடாது தடை செய்துள்ளது. நிரந்தர சமாதானம் உருவாகத் தடையாக உள்ளவர்கள் சிங்களப் பேரினவாதிகளும் இந்த அரசுமேயொழிய விடுதலைப் புலிகளோ அல்லது தமிழர்களோ அல்ல என்பதனையும் சர்வதேச சமூகம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு வலுவூட்டும் வகையிலேயே திருகோணமலை மாவட்டத்திலும் தமிழீழ எழுச்சி மாநாட்டினை நடத்தவுள்ளோம். சகல தமிழ் பேசும் மக்களும் குறிப்பாக முஸ்லிம் மக்களும், முஸ்லிம் மதப் பெரியார்களும் இங்கு கலந்து கொண்டு இந்த நடவடிக்கைக்கு வலுவூட்ட வேண்டும்.
இதேவேளை, நமக்குத் தரவேண்டியதைத் தராவிட்டால் நாமே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாமாகவே அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பதுதான் இன்று எழுப்பப்பட்டுள்ள கேள்வியாகும்.
தந்தை செல்வா என்னுடன் ஒரு கட்டத்தில் பேசும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைக்காண அனைத்து முயற்சிகளும் செய்து விட்டேன். இதனை பக்குவமான முறையில் செய்ய சரியான சிங்களத் தலைவன் எவனும் இல்லை என்று கூறினார். அதேநிலைதான் இன்றும் நிலவுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கடந்த இருபது வருட காலமாக மேற்கொண்ட யுத்தத்தின் விளைவாக 18 ஆயிரம் போராளிகள் பலியாகினர். 70 ஆயிரம் மக்களின் உயிர்களும் காவு கொள்ளப்பட்டன. இவ்வாறான தியாகங்களின் மத்தியிலும் இன்றும் தமிழினம் அகதி முகாம்களில் தவிக்கும் வேதனையான நிலையே உள்ளது. இந்த நிலையிலேயே நமது ஒற்றுமையினையும் கோரிக்கையினையும் உலகறியச் செய்ய வடக்கு கிழக்கின் பாமான திருகோணமலையிலும் தமிழீழ எழுச்சி மகாநாட்டினை வெகு சிறப்பாக நடத்தி நமது வெளிப்பாட்டினையும் பிரகடனப்படுத்த வேண்டும்.
சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இடைக்கால நிர்வாகம், பொதுக் கட்டமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்ட போதும் ஜே.வி.பி. யும் பேரினவாதிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பொதுக்கட்டமைப்பு தளர்வடைந்து விட்டது. தொடர்ந்தும் நமது மக்கள் தற்காலிக கூடாரங்களிலும் அகதி முகாம்களிலுமே வாழும் வேதனையான நிலைதான் நிலவுகின்றது.
இந்த நிலை மாற வேண்டும். இதற்கான பிரச்சினையினையும் பிரகடனத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
விஜயன் வருவதற்கு முன்னரே இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள் என சிங்களப் பேராசிரியர் ஒருவரே கூறியுள்ளார். அந்நியர் ஆட்சியின் போதே இத்தகைய நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனை பேரினவாதிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கதிர்காமரின் மரணம் தொடர்பாக இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இன்றோ திருகோணமலை நகரில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மண் நமது மண். இங்கு மேற்கொள்ளப்படும் தமிழ் தேசிய எழுச்சிப் பிரகடனம் சர்வதேசமெங்கும் ஒலிக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளும் உணர்வலைகளும் உலகறியச் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வி. விக்னேஸ்வரன், சட்டத்தரணி கே. சிவபாலன், திருகோணமலை மாவட்ட மகளிர் பேரவை தலைவி திருமதி கண்மணி, இரத்தினவடிவேல், திருகோணமலை மாவட்ட தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் சதா சண்முகநாதன் உள்ளிட்ட பிரமுகர்களும் இங்கு கலந்து கொண்டு உரையாற்றினர்
http://www.virakesari.lk/VIRA/20051003/hea...dline_news2.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>