10-02-2005, 06:30 PM
Quote:1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?
2. மண் உறுண்டையால் கூனிக்கு இராமன், அடித்ததை பழி தீர்ப்பதற்காகவே, இராமனை காட்டுக்கனுப்ப கூனி சதி செய்ததாக கொள்ளப்படுகின்றது. அந்த மண் உறுண்டை மட்டும் இவ்வளவு து}ரம் நடக்க காரணமா?
3. இராமன் காட்டுக்கு போவதை தசரத மன்னன் தடுக்கவில்லை. என வான்மீகியில் கூறப்படுகின்றது. அவ்வாறு தடுக்காததற்கு காரணம் என்ன?
4. விசுவாமித்திர் இராமனையும், இலட்சுமனையும் அழைத்து சென்றதற்கான காரணம் என்ன?
5. இராவணன் சீதையை கொணடு செல்லும்போது,மண்ணோடு அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அது சாத்தியமானதா? பத்தினி பெண் அவ்வாறு செல்வாளா?
6. மரவுரி தரித்துச் சென்ற சீதை வழியில் செல்லும்போது நகைகளை அடையாளமாகப் போட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. அந்த நகைகள் எங்கிருந்து கிடைத்தன.
7. வானரக் கூட்டம் என கேலி செய்யப்படும் இனம் எது?
8. தன் மனைவியை சந்தேகப்பட்டுத்தானே தீக்குளிக்கச் செய்தான். உலகத்துக்கு காட்டத்தான் என சமாதானம் சொன்னானாம். அப்படி செய்யவேண்டிய தேவை ஏன் அவனுக்கு ஏற்பட்டது.
9. அப்படியாயின் மீண்டும் மனைவியை காட்டுக்கு அனுப்பியதேன்? அங்கே தான் இலவன்,குஷன் பிறந்தார்கள்.
10. இறுதியாக இராமனும், இலட்சுமணும் ஆற்றில் இறங்கித் தற்கொலை செய்யக்காரணம் என்ன?
Quote:1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?
சீதையின் கதை
ஜனகர் சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் இவரை பூமாதேவியின் புதல்வியாக கூறுவதுண்டு. சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நான் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் ராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை ராமன் நானேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை ராமரின் மனைவியானார்.
ராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் லட்சுமணனும் சென்றனர். அப்போது இலங்கை அரசனான ராவணன் சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் தங்க வைத்தான். பின்னர் ராமன் வானரங்களின் துணையுடன் ராவணனை வென்று சீதையை மீட்டார்.
வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன் ராமன் மன்னனானான், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை ராமன் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த ராமன் சீதையை வால்மீகியின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். வால்மீகியில் ஆசிரமத்தில் சீதைக்கு லவன், குசன் என இரட்டை மகன்கள் பிறந்தனர். இரு மகன்களையும தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை ராமனிடம் ஒப்படைத்தாள். பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள். பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.
2. இது ஒரு பொய்க்கதை
3. ராமர் காட்டுக்கு போவதை அவரால் தடுக்கமுடியாது.....காரணம் அவர் ஏற்கனவே கைகேயிக்கு செய்து கொடுத்த வாக்குறுதி மீறமுடியவில்லை ....
4. விசுவாமித்திரர் இவர்களை guide பண்ணினார் என்பதற்கு இதுவரை எது வித ஆதாரங்களும் இல்லை....என்றே தெரிகிறது ..
5. மண்ணோடு அள்ளிச்சென்றதாக நான் இதுவரை அறியவில்லை ...... இருக்கலாம் ...இல்லாமல் இருக்கலாம் .....
6. அந்த காலங்களில் அரச குடும்பங்களில் நகைகளுக்கா பஞ்சம்.....??????????
7. குரங்குகூட்டம்
8. ராமர் எந்த கட்டத்திலும் தன் மனைவியை சந்தேகபட்டதே கிடையாது ....*அப்டி ஏதும் சாட்சிகள் உண்டா* ..... மற்றது ஊர் வாயை அடக்குவதற்கு....
9. ராமர் மனைவியை காட்டுக்கு அனுப்பியதாக சரித்திரம் இல்லை .....
10. ராமரும் லட்சுமணரும் இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை .............
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

