11-14-2003, 07:56 AM
செய்தி தினமலர்
1. இலங்கை அமைதி பேச்சு வார்த்தை முயற்சியில் நார்வே குழு பின்வாங்கல்
கொழும்பு: இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நிலவி வந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நார்வே அரசு அமைதி பேச்சு வார்த்தையை துவக்கியது. இந்நிலையில் இலங்கையில் அதிபர் சந்திரிகாவுக்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. நார்வே குழுவினர் விடுதலை புலி இயக்க தலைவர் பிரபாகரனையும், அதிபர் சந்திரிகாவையும், ரணிலையும் தனித்தனியாக சந்தித்து பேசினர். நார்வே குழுவினர் அமைதி பேச்சு வார்த்தை நடவடிக்கையில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகார மோதல் முடிவுக்கு வரும் வரை காத்திருப்பதாகவும் இக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால் அமைதிபேச்சு வார்த்தை திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.