Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிவாஜி ஓப்பனிங் ஸீன்!
#1
தீப்பிடிக்க தீப்பிடிக்க ஒரு ஸீன் டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. இடம் -கேளம்பாக்கம் பண்ணை வீடு! படம்?!..."சிவாஜி'. பரபர டிஸ்கஷனில் படபடவென பேசும் சூப்பர் ஸ்டார், மடமடவென ஷூட்டிங் நடத்தும்(?!) டைரக்டர் ஷங்கர், கடகடவென கவிதை கட்டும் வைரமுத்து, வளவளவென வாயளக்கும் வடிவேலு, "தளபதி'யின் தளபதி சத்ய நாராயணா! ஓ.கே. மீட்டர் போட்டாச்சு! மேட்டருக்குப் போகலாம்!

ரஜினி : ஷங்கர்ஜி நீங்க சொல்லப்போற ஸீன்ஸ் அந்நியனையே அசரடிக்கணும், சந்திரமுகியையே "சலாம்' போட வைக்கணும். ....ம் சொல்லுங்க!

வடிவேலு : ஆமா..ஆமா.. நீங்க சூப்பர் ஸ்டாரு நடிகரு! அவரு சூப்பர் ஸ்டாரு டைரக்டரு! ரெண்டு பேரும் ஜாயிண்டு ஆகிறீங்க! ச்சும்மா பின்னிப் பேன் பாத்துரணும்!

நாராயணா : ஆமா, அண்ணன் படத்துல ஓப்பனிங் சாங்தான் ரொம்ப முக்கியம். அது "பாபா' மாதிரி பிளாக் ஷீப் ஆகிடக்கூடாது. சந்திரமுகி மாதிரி கண்ணுக்குள்ளயும் காதுக்குள்ளயும் நெறைஞ்சு ஓவர்ஃப்லோ ஆகி வழியணும்!

ஷங்கர் : அவ்வளவுதான! ஓப்பனிங்லயே க்ராபிக்ஸ்ல டன் டன்னா பிரம்மாண்டத்தைக் கொட்டி கும்மியடிச்சுடலாம்! எனக்குள்ள இருக்குற டைரக்டர் ஷங்கர் ஓப்பனிங் ஸீனையே ஒம்பது விதமா சிந்திச்சு வைச்சுருக்கான். அதை எனக்குள்ள இருக்குற கிரியேட்டிவ் ஷங்கர் நிறைய கலர் ஊத்தி ஊற வைச்சு ப்யூட்டிஃபுல்லா செதுக்கியிருக்கான்.

வடிவேலு : அய்யோ ரொம்ப ஆசையா இருக்குண்ணே! ஸீனைச் சொல்லுங்கண்ணே! சிலாகிச்சுக் கேப்போம்!

ஷங்கர்: ஓப்பனிங்ல காலை நேரத்துல ஒரு சிவன் கோவிலோட கோபுரத்தை லோ-ஆங்கிள்ல காட்டுறோம். டாப் ஆங்கிள்ல வானத்தைக் காட்டுறோம். ஆனா வானத்துல அங்கங்க க்லவுட்ஸ்! மழை மேகங்கள் இல்ல, இது வெண் மேகங்கள்! சூரியன் ஒருபக்கம் முழு மூச்சோட சுட்டெரிச்சுக்கிட்டிருக்கு! சூரியனோட ஹீட் தாங்காம பக்கத்துல இருக்கற பிரம்மாண்டமான சேரில இருக்குற ஒரு குடிசையில தீப்பிடிச்சிருது. தீ தீயாப் பரவுது! இதை க்ராபிக்ஸ்ல நாம காட்டுற காட்டுல, தியேட்டர்லேயே அவனவனுக்கு சீட் ஹீட் ஆகணும்!

வடிவேலு : சூட்டைக் கிளப்பிட்டிங்கண்ணே! மேல மேல மேலப் போங்க!

ஷங்கர் : இப்ப சிவன் கோவில் தெருவில் தன் வீட்டு மொட்டை மாடியில காய்ஞ்சுக்கிட்டு இருக்குற வத்தல், வடாமை அண்டங்காக்கா திங்க விடாம பாதுகாத்துக்கிட்டிருக்கிற சாதாரண ரஜினி சாரோட கையை மட்டும் காட்டுறோம்!

ரஜினி : வத்தல், வடாம்! இந்த சிச்சுவேஷன் நல்லா இருக்குயா! கமான், மேல சொல்லுய்யா!

ஷங்கர் : தூரத்துல சேரி மக்கள் அலறுற சவுண்ட் அப்படியே உங்க காதை வந்தடைந்ததை விஞ்ஞானப்பூர்வமா காட்டுறோம். நெக்ஸ்ட் உங்க கண்களைக் காட்டுறோம். அதுல தூரத்துல எரியுற தீ ஜ்வாலைத் தெரியுது. இந்தக் காட்சி ரொம்ப இயல்பா வரணும். úஸô, உங்க கண்களில் இருந்து புகை வர்ற மாதிரி ரியலிஸ்டிக்கா காட்டுறோம்!

வடிவேலு: அடி ஆத்தி! காதுக்குள்ளே சவுண்டு இன்கம்மிங்! கண்ணுல இருந்து புகை அவுட்கோயிங்! ரொம்பப் பிரமாதமால்ல இருக்குது! ஆங்...அப்புறம்...

ஷங்கர் : அந்த ஜ்வாலைக் கண்களோட ரஜினி சார் வானத்தை முழு வேகத்தோட பார்க்குறாரு. தன்னோட உதடுகளைக் குவிச்சு வானத்தை நோக்கி காத்தை ஊதுறாரு! வாயில இருந்து "வாயு' புயலா வானத்தை நோக்கிக் கௌம்பி, அங்கங்கே சிதறிக் கிடக்குற மேகங்களையெல்லாம், எலெக்ஷன் டைம்ல சில்லறைக் கட்சிகளெல்லாம் ஒண்ணாச் சேருமே, அந்தமாதிரி ஒண்ணாச் சேக்குது! இப்ப தன்னோட கண்களில் இருந்து ஒரு அரைக்கிலோ "கருணைப் பார்வையை' ரஜினி சார் மேகங்களைப் பார்த்து வீசறாரு! உஜாலாவுக்கு மாறியிருந்த வெள்ளை மேகங்க எல்லாம், டக்குன்னு மழை மேகங்களா கெட்-அப்பை மாத்திக்கிடுது! ரஜினி சார், இப்ப ஒரு சொடக்குப் போடுறாரு, "டம் டமார்'னு ஒரு இடி இடிக்குது! அடுத்த சொடக்கு போடுறாரு. பல கலர்ல மின்னல் வெட்டுது!

வடிவேலு : பல கலர்லயா...ஆத்தாடி!

ஷங்கர் : மூணாவதா ஒரு சொடக்குப் போட்ட உடனே, மழை மானாவாரியா பெய்ய ஆரம்பிக்குது. சேரியில சின்னச் சின்ன சேதாரங்களோட தீ அணைஞ்சிடுது! இதுல ஸ்பெஷலா அந்த மழையோட முதல் சொட்டு அப்படி இறங்கி வந்து ரஜினி சார் நெத்தியில விழுந்து, மெதுவா மெதுவா புருவம் வழியா மூக்குல இறங்கி, உதடுகளைச் சென்றடையுது. உதட்டுல சாரோட சாகசச் சிரிப்பு! அப்படியே முகத்தை முழுசாக் காட்டுறோம்! இங்க ஓப்பனிங் சாங்கை உசுப்பேத்தி விடுறோம்!

நாராயணா : சூப்பரு! பின்னலா இருக்கு! இதுவரைக்கும் வந்த ஓப்பனிங் ஸீன்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு 7அப் குடிச்சு ஏப்பம் விட்டிடுச்சி இந்த ஸீன்!

ரஜினி : வாவ் ஷங்கர்ஜி! வெரி இன்ட்ரஸ்டிங்! வைரமுத்துஜி உங்க திருவாசகத்தை லான்ச் பண்ணுங்க!

வைரமுத்து : அருமையான காட்சி! திறமையான கற்பனை! முழுமையாக வார்த்தைகளை வைத்து விளையாட இங்கே மெல்போர்ன் கிரவுண்ட் அளவிற்கு இடமிருக்கிறது. என்னிடம் தமிழ் தந்த நிறை குடமிருக்கிறது! அள்ளித்தெளிக்கிறேன், நீங்களும் நனையுங்கள்!

வடிவேலு: தொந்தரவுக்கு மன்னிச்சுகோங்க கவிஞர் அய்யா ஷங்கர் சார் முக்கிய மானதை விட்டுட்டீங்களே!

ஷங்கர்:என்னது?

வடிவேலு : ஊருக்கு நல்லது பண்ணுற மழை, ரஜினி சார் காய வைக்கிற வத்தல் வடாமை நனைச்சி, நாசமாக்கி, நாறடிச்சுப்புடும்ல!

ஷங்கர் : இதை நான் யோசிக்காம இருப்பனா! அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கேன். மொட்டை மாடியில இருக்குற ரஜினி சார், கீழே தெருவுல குடையோட நடந்து போய்க்கிட்டிருக்கிற கதாநாயகியை, கொடிக்கயிறை வீசியே, அபாரமா"அலேக்கா' தூக்கி வத்தல், வடாமுக்கு குடை பிடிக்க வைச்சிடுதாருலே!

வடிவேலு : ஆஹ்ஹா...அது! நீங்க இப்ப ஓப்பனிங் சாங்கை ஓட விடுங்க சார்!

வைரமுத்து :

ஓம் ஓம் சிவாஜி!
ஓம் ஓம் சிவாஜி!
உன் கண்கள் ரெண்டும் எரிமலை!
இதயம் முழுவதும் பனிமலை!
நீ சொடுக்குப் போட்டால் வரும் மழை!
சொன்னபடி கேட்கும் கடல் அலை!

வடிவேலு : ஆஹா...கௌம்பிட்டாருல்ல...

ஷங்கர் : ஓ.கே. சார். ஆனா இன்னும் கொஞ்சம் நிறைய மாடர்னா, டிஜிட்டல் வார்த்தைகளெல்லாம் போட்டுத் தாக்குனா சூப்பரா இருக்கும்!

ரஜினி : ஆங்...டிரை பண்ணிப் பார்க்கலாமே!

வைரமுத்து :

லப்டப் சிவாஜி!
லாப் டாப் சிவாஜி!
செல்லுலாய்டு உலகின் தெய்வம் நீ!
டிஜிட்டல் தேசத்தின் தேவன் நீ!
பைபர் ஆப்டிகல் பிதாமகன் நீ
சைபர் உலகின் சாணக்கியன் நீ!
லப்டப் சிவாஜி!
லப் டாப் சிவாஜி!

நாராயணா : நெஞ்சை நக்குது கவிஞரே!

ரஜினி : பிராட் -பேண்ட் நெட் கனெக்ஷன் வேகத்துல வார்த்தைகளை கொட்டிட்டீங்க! சூப்பர்!

ஷங்கர் : ரஜினி சார் டிஜிட்டல் மழையில நனையுற மாதிரி க்ராபிக்ஸ் பண்ணி பின்னிடலாம். வத்தல் வடாம்லாம் கை, கால் முளைச்சு பிரேக் டான்ஸ் ஆடறாப்ல அசத்திடலாம்!

வடிவேலு : அய்யோ....அய்யோ...நெனச்சாலே புல்லா அரிக்குது! பாட்டைப் பாத்துட்டு அவனவன் சொக்கி சொர்க்கத்துக்கு போன எஃபெக்ட்டோட அலையப்போறான்.

ரஜினி : ஓக்கே ஷங்கர்ஜி, இந்த ஸீனைப் பத்தி நான் கொஞ்சம் நிறையவே யோசிக்கணும். அப்பத்தான் பர்ஃபெக்டா வரும்! வர்ட்டா!

(ரஜினி கிளம்ப டிஸ்கஷன் நிறைவு பெறுகிறது
ThanksBig Grininamani............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
சிவாஜி ஓப்பனிங் ஸீன்! - by SUNDHAL - 10-02-2005, 02:46 PM
[No subject] - by SUNDHAL - 10-02-2005, 02:54 PM
[No subject] - by RaMa - 10-03-2005, 02:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)