10-02-2005, 05:32 AM
ராமாயணத்தை நான் முழுமையாகப்படிக்கவில்லை. ஆனால் கம்பர் கூறுவது பொல வான்மீகரால் எழுதப்பட்ட ராமாணயத்தை தமிழில் மொழி பெயர்க்கவில்லை. கம்பர் ஒரு ராம பக்தர் அதனால் வான்மீகரால் எழுதப்பட்ட ராமர் தொடர்பான கருத்துக்களை மறைத்துள்ளார். ஞாபகத்தில் இருக்கும் ஒரு சம்பவம்... ராமனை காட்டுக்கு செல்லுமாறு அவனது சிற்றன்னை தந்தை சொன்னார் என்று சொன்ன போது அவன் கம்பராமாயணத்தில்... ஏன் தந்தை சொன்னார் என்று சொன்னீர்கள் நீங்கள் சொன்னதாக சொல்லிருக்கலாமே என்று நல்ல மாதிரியாகவும் வான்மீகரால் எழுதப்பட்ட ராமாணயத்தில் உன் வஞ்சனையை இன்று நேற்றல்ல நெடுநாயாக அறிவேன் ..என்று சுடு சொற்களால் திட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால் ராமாயணம் என்பது ஒரு கற்பனை கதையே தவிர வரலாற்று ஆவணமாக இருக்க சந்தர்ப்பமே இல்லை எனலாம். அதே நேரம் எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் ராமாணயத்தை தமிழீழத்தில் ஒரு பாடமாக கற்ப்பிப்பதை நிறுத்த வேண்டும்...அதில் இராவணேஸ்வரன் பற்றி (மட்டுறுத்தினர் இராவணன் அல்ல) பல பொய்கள் இருக்கின்றது. ஒரு பக்கத்தில் கடவுள் பக்தனாகவும் மறுபக்கத்தில் அரக்கனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். அதை விட ஒரு வானரம் (குரங்கு) இலாங்கா புரியையே தீக்கிரையாக்கியதாய் வேறு இருக்கிறது..யாதார்த்ததை பார்த்தால் பண்டைய சரித்திரங்கள் குப்பைக்குள் இருக்க வேண்டியவை...இலக்கிய இலக்கணங்களை மரபு முறைகளுக்காகவே அவற்றை சீர்து}க்க வேண்டியுள்ளது....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

