Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாஸ்' எடுக்க மறுத்த மீனவர்
#1
"பாஸ்' எடுக்க மறுத்து குடும்ப சகிதம் கடலில் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர
தனுஷன்

படையினரின் பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஸ் எடுக்காமல் குடும்ப சகிதம் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பியிருக்கிறார் வடமராட்சி மீனவர் ஒருவர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

பிரஸ்தாப மீனவர் மாலை வேளை மீன் பிடிக்க கடலிற்கு செல்ல முற்படுகையில் படையினர் இவரிடம் பாஸ் அனுமதி கோரியதாகவும், ஆனால் படையினரின் பாஸ் அனுமதியை பெற மறுத்த இவர் தான் குடும்பத்துடன் படகில் கோயிலிற்கு செல்லப் போவதாக கூறி மனைவி மூன்று பிள்ளைகள் ஆகியோரையும் படகில் ஏற்றி கடலில் சென்றிருக்கிறார். இவருடைய பிள்ளைகளில் <span style='font-size:25pt;line-height:100%'>1லீ வயது கைக் குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</span>
படகில் சென்ற மீனவர் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததை அடுத்து படையினரால் கடற் படையினருக்கு அறிவிக்கப்பட்டது. கடற்படையினர் கடலில் தேடியும் பலன் எதுவும் கிட்டவில்லை. இந்த நிலையில் மீண்டும் காலை வேளை பிரஸ்தாப மீனவர் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான மீன்களுடன் கரையை வந்தடைந்தார்.

இச்சம்பவம் வடமராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, வடமராட்சி பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாஸ் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு ஒன்று 524 ஆவது படையணித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் படை அதிகாரிகள், கடற்படையின் உயர் அதிகாரிகள், கடற் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், சமாசப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இம்மாநாட்டை படைத் தலைமையகத்திற்கு வெளியில் நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறு கடற்றொழிலாளர் சங்கங்கள் கடற் தொழிலாளர் சமாசத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.


http://www.virakesari.lk/VIRA/20051002/loc...cal_news.htm#l1
Reply


Messages In This Thread
பாஸ்' எடுக்க மறுத்த மீனவர் - by வினித் - 10-01-2005, 07:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)