11-13-2003, 07:59 PM
<img src='http://www.catholicireland.net/gettingmarried/img/inlondon.jpg' border='0' alt='user posted image'>மன்னிக்கவும் இது கவிதையல்ல
எனக்குத்தெரிந்த ஒரு ஜோடி இலண்டனில் வசிக்கிறார்கள். அவர்கள் காதலித்துத்திருமணம் செய்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவர்கள் காதல் வாழ்வு மிக மிக இயற்கையாக அமைந்தது. இருவரும் வெவ்வேறு கல்லூரி. ஒரு தமிழ் விழாவின் போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. அப்போதே அவர்கள் பகுதிநேர வேலை செய்துகொண்டிருந்தவர்கள். இரண்டு பேரும் பலமைல் தூர இடைவெளியில் வசித்துவந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்ப்பது மிக கடினம். மாதத்தில இரண்டுமுறைதான் பார்க்கும் வாய்ப்பு. பரிட்சை என்றால் அதுவும் கிடையாது. இன்று படித்து முடித்து திருமணம் செய்து நல்ல நிலையில் உள்ளார்கள்.
எதற்காக இந்த உதாரணம் என்றால் நேரம் இன்மை என்பது காதலுக்குத்தடை கிடையாது. அதுமட்டுமன்றி வேலையின்றி வெட்டியாக சுற்றுபர்கள் மற்றும் சமூகத்தின் மேல் அக்கறையற்றவர்கள் தான் காதல் செய்கிறார்கள் என்ற உங்கள் கருத்து சரியானதல்ல.
காதல் என்பது பெண்களின் பின்னால் செல்வதையோ அல்லது பார்க்கும் பெண்ணுக்கெல்லாம் கடிதம் கொடுப்பதோ அல்ல. இந்தச்செயலுக்குப்பெயர் காதல் அல்ல. இவர்கள் செய்வது பெண்ணை வற்புறுத்தியோ ஆசை வார்த்தைகள் கூறியோ காதல் என நடித்தோ திருமணத்திற்கு ஒரு பெண்ணை தயார்செய்வது அல்லது தம் இச்சைகளுக்கு பெண்ணைப்பலிக்கடா ஆக்குவது.
காதல் இயற்கையானது. அங்கே வற்புறுத்தல் கிடையாது. உண்மையான காதல் எனில் ஒருவர் காதலை நிராகரித்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்டுகிறது. காதல்தான் மனிதனை மிருகத்திடம் இருந்து இனம்பிரித்தது. அது தான் நாகரிகம் கற்றுக்கொடுத்தது.
ஆதலினால் காதல் செய்வீர்.