11-13-2003, 09:03 AM
aathipan Wrote:<img src='http://members.tripod.com/~angelsblueheaven/angels/angelskissing.gif' border='0' alt='user posted image'>
காதல் ஒரு உன்னத உணர்வு..
அந்த உணர்வு
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
ஏன் ஒவ்வொரு ஜீவராசிகளிலும்
ஆண்டவன் விதைத்துவிட்டிருக்கிறான்...
காதல் இல்லை சாதல்
என்று பாரதியே
உனக்;கும் எனக்கும்
அறிவுரை சொல்லி
சென்றிருக்கிறான்....
காதல் தானாக வரவேண்டும்
வராத காதலை
வரவைக்கவேண்டாம்
அது வேதனைகளைத்தான்
வாங்கிவரும்..
காதல் உனது வாழ்விற்கு
ஒரு உந்து சக்தி..
ஒரு பிடிப்பு...
அது நிச்சயம்
உன்னை வெற்றிக்;கு எடுத்துச்செல்லும்...
ஆனால்
காதல் வந்தது என்று
கண்மூடி
கனவில் வாழ்ந்துவிடாதே...
மயக்கத்தில் உறங்கிவிடாதே...
உன்வாழ்வில் வெற்றிக்கு வேண்டிய
அத்தனையையும் நீ தொடர்ந்து செய்..
காதல் உன் கூடவந்தால்
நீ முள்ளில் நடந்தாலும்
வலிகளே இருக்காது...
இன்றைய வாழ்வு
வேகமான வாழ்வுதான்...
இல்லை என்று சொல்லவில்லை.
இதயங்கள் தானே
இன்னும்
உனனை
இயங்கவைக்கின்றன...
காதல் என்று வந்துவிட்டால்
உறுதியாக நில்
பாதியிலே காணாமல் போய்விடாதே..
வெற்றி என்றும் உனக்குத்தான்..
காதல் என்றும் தோற்றது இல்லை..
மனிதன்தான்
அடிக்கடி
தோற்றுப்போகிறான்....
காதல்
என்றபோர்வையில்
யாரையும்
வற்புறுத்த நினைக்காதே...
பின்னால் சென்றுவருவது காதலல்ல..
அந்த உறுவுக்கு வேறு பெயர்...
அந்த வார்த்தையை நானே
தணிககை செய்கின்றேன்
காதல் தோற்றுவிட்டுது
என்றால் உன்;வாழ்வே
இருண்டுவிட்டாதாய்
எண்ணிவிடாதே....
நீ பேகும் பாதை
எப்போதும்
தெளிவாகத்தான்
இருக்கிறது...
நீ நீயாக்கத்தான்
எப்போதும் இருக்கிறாய்...
காதல் ஒரு உணர்வுதான்...
அதற்காக உன்னை
நீ அழித்துக்கொள்ளாதே..
வாழ்வைத்தொடர்
உறவுக்கள் நிறைய உனக்காக
காத்திருக்கிறது...
அங்கே உனக்காக ஒருத்தி
இருக்கத்தான் போகிறாள்....
காதல் செய் காதல் செய்...
காதல் என்று
கண்டதும் செப்பாமல்-இங்கு
சற்றுத் தெளிந்தே
தெளித்திருக்கின்றீர்
பாராட்டுக்கள்....!
நாம் காதலை வெறுக்கவில்லை
காதல் கண்ணியமாக
அதன் தன்மை இழக்காது
என்றும்
எம் தனித்துவம் காத்து
எம்மையும் வாழ்வைத்து
அதுவுமாய் வாழவேண்டும்!
அதுதான் காதலுக்கு
நாமளிக்கும் வசந்த மாளிகை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

