Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய ஒன்றியம் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா?
#3
உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத்தடை எமது விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் சறுக்கல்.

இச்செய்தி ஆய்வில் ஆய்வாளர் குறிப்பிடுவது போன்று எமது இயக்கம் வெளிவிவகார விடயங்களை கவனிப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவரும் நன்கு படித்தவர்களை நியமித்து அவர்களை ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களுக்கும் அந்த அந்த காலகட்டத்தில் ஈழத்தில் நடைபெறும் சம்பவங்களை அவர்களுக்கு விளக்கி தமிழர்களின் நிலைப்பாட்டையும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டையும் விளக்க வேண்டும்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு எம்மவர்கள் எமது நாட்டுச் செய்திகளை அதாவது எமது அவலங்களை உடனுக்குடன் வெளிக்கொணர செய்ய வேண்டும். தமிழ்நெட் இதற்கு காத்திரமான பங்களிப்பு செய்கிறது. எனினும் இதனை அந்த அந்த நாட்டில் உள்ளவர்கள் சற்று பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தை முறியடிக்கலாம்.

தமிழன் படித்தவன் தான். தான் படித்த படிப்பை எங்கே தனது இனத்திற்கு உதவுகிறான். சிங்களவர்களில் படித்தவர்கள் குறைவு. ஆனால் படித்தவர்கள் எல்லாம் தன் இனம்இ தன் மொழி என்ற உணர்வில் செயற்படுகிறார்கள்.

மீண்டும் கூறுகிறேன். நாம் காத்திரமான ஊடக வலைப்பின்னல் பேணாதவிடத்தும்இ எமது இயக்கம் பலமிக்க வெளிவிகாரக்குழுவை அமைக்காத வரை நாம் வெளிநாடுகளில் மோசமான எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
S.Nirmalan
Reply


Messages In This Thread
[No subject] - by adithadi - 09-30-2005, 10:42 AM
[No subject] - by nirmalan - 09-30-2005, 11:10 AM
[No subject] - by msuresh - 09-30-2005, 12:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)