09-30-2005, 06:14 AM
Aruvi Wrote:[quote=selvanNL]
செல்வன் உங்களின் ஆதங்கம் புரிகிறது. இறந்தவர் உங்களிற்கு உறவானவராகவும் உள்ளார்
ஆனால் முதலில் நாம் சிலதைப் புரிந்துகொள்ளவேண்டும். எடுத்ததற்கெல்லாம் நாம் குற்றச்சாட்டை அடுக்கமுடியாது.
உண்மையில் நானும் இடைக்காட்டுக்கு சேர்மதியானவன் தான். அதனால் உண்மைகளை திரித்து கூறப்போவதில்லை. செல்வன் சொல்வது என்னவென்றால் புலி உறுப்பினரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்றாரே தவிர புலிகள் அமைப்பை குறை கூறவில்லை. ஏனென்றால் பல புலிப் போராளிகளை போராட்டத்திற்கென களம் இறக்கி விட்டதில் இடைக்காடு ஒன்றும் சளைத்ததல்ல. *********னின் மனைவியான வைத்தியகலாநிதி கூட இடைக்காடு தான் ஈன்றது. இதை விட பல போராளிகளும், மாவீரர்களும் நாட்டிற்காக களம் இறங்கி நிற்கின்றார்கள்.
யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளாராகிய இளம்பரிதியின் வேண்டுகோளுக்கமையவே அமைதியாக ஊர் இருக்கின்றது. அதை விட குருநகர் பிரச்சனையில் தேசத்துரோகிகளின் பங்களிப்பை உணர்ந்து எம் பிரச்சனையில் அது குறித்துமிகவும் அவதானமாக இருக்கின்றோம்.

