Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்குதமிழ் - 2005 (யாழ்ப்பாணம்)
#2
பொங்குதமிழ் - 2005

"எங்கள் நிலம் எமக்கு வேண்டும்
எங்கள் நிலமே எமக்கு வேண்டும்"

என்ற முழக்கத்துடன் 2001ல் ஆரம்பமான பொங்குதமிழ், இன்று "எங்கள் சுயநிர்ணய உரிமையை சர்வதேசமே அங்கீகரி" என்ற கோரிக்கையுடன் எழுந்து நிற்பதைப் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களின் தாயக-தேசிய-தன்னாட்சிக் கோட்பாடுகளின் பரிணாம வளர்ச்சியை உணர முடிகின்றது.

அணி திரண்டுள்ள தமிழ் மக்களின் மனக் கதவுகள் திறக்கப்பட்டு, அவர்கள்தம் அடிமனக் கிடக்கைகள் திரண்டு வெளிவருவதை பொங்குதமிழ் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிங்களப் பேரிளவாதத்தை நம்பி ஏமாந்தது போதும்; இனியும் நம்ப முடியாது என்னும் முடிவுக்கு நாம் தமிழர் வந்துவிட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்தும் மனிதச் சுவராகவும், மாபெரும் குரலாகவும் பொங்குதமிழ் பரிமாணம் பெற்றுள்ளதை இனியும் சர்வதேசம் உணராமல் இருக்க முடியாது.

பூகோள வரைபடத்தில் ஒரு புதுப்புள்ளி - அது, இந்து மகாசமுத்திரத்தின் கீழ்மடியில், பாரத தேசத்தின் தென்;முனையில், தமிழ்நாட்டின் கோடிக்கரையில், இன்றோ நாளையோ மறுநாளோ என்று பிரசவத்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பதை, பொங்குதமிழ் ஒலியெழுப்பி உலகுக்குக் காட்டி நிற்கின்றது. அகிலத்தில் பிறக்கப்போகும் ஒரு புதிய நாட்டின் வருகை அங்கே வெள்ளிக்கோடாகத் தெரிகின்றது.

அந்தப் பிரசவத்தின் தாதிகளாகவும் தாரகைகளாகவும் உரமுடன் செயற்படும் உங்களுடன், உரிமை கலந்த இரத்த பாசங்களாக நாம் உணர்வுடன் தொடர்ந்து செயற்படுவோம் என எங்கள் தோள்களை உயர்த்தி நெஞ்சுகளை நிமிர்த்தி உறுதியுடன் கூறுகின்றோம்!

திரு எஸ். திருச்செல்வம்
செயலாளர்
ஈழத்தமிழர் தகவல் நிலையம் - கனடா
பிரதம ஆசிரியர், 'தமிழர் தகவல்' - கனடா
email: tamilsinfo@sympatico.ca
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 09-29-2005, 07:47 PM
ryetsa - by yarlmohan - 09-29-2005, 07:49 PM
[No subject] - by yarlmohan - 09-29-2005, 07:52 PM
[No subject] - by yarlmohan - 09-30-2005, 05:37 AM
[No subject] - by iruvizhi - 09-30-2005, 12:57 PM
[No subject] - by iruvizhi - 09-30-2005, 01:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)