Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்
#8
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களில் பெரியவர்களாகிய நமக்கே அறிவைச் சுடுகிற மாதிரி ஆழ்ந்த கருத்துக்களை அவர் தந்தாலும் அவர் தன்னைவிட சிறியவர்களுக்கு அறிவு புகட்டியது மாதிரியே அடக்கமாக பாடி இருக்கிறார்.

<i>'சின்னப் பயலே சின்னப்பயலே</i>' என்று சிறுவயது பையனை அழைத்துப் பாடுவது போலவும் <i>'தூங்காதே தம்பி தூங்காதே</i>' என்று தம்பிக்கு கூறுவது போலவும் <i>'திருடாதே பாப்பா திருடாதே' </i>என்று குழந்தைகளுக்கு சொல்வது போலவுமே அவர் பெரும்பாலும் அறிவுப் போதனையான பாடல்களை பாடி இருக்கிறார். அவர் சின்னப் பயலே என்று சிறு குழந்தையை அழைத்துப் பாடுவதுபோல தோன்றினாலும் அவர் பாடும் கருத்துக்கள் பெரியவர்களே மன வளர்ச்சியில் சின்னவர்களாய் வாழ்வதைப் பார்த்து பாடுவது போலவே அவர் கருத்துக்கள் அமைந்தன.

<b>தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா - நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!</b>


இவ்வாறு பாடுகிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனியுடமை கொடுமைகள் தீர தொண்டுசெய் என சின்னப் பயலிடம்தான் கூறுவாரா? சின்னப் பயலாகிய சிறு குழந்தைக்கு அது புரியுமா? ஆக அறிவில் சிறுவரான பெரியவர்களுக்கே இதை கூறுகிறார்..


-தொடரும்-
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 09-27-2005, 06:09 PM
[No subject] - by tamilini - 09-27-2005, 06:36 PM
[No subject] - by கீதா - 09-27-2005, 06:48 PM
[No subject] - by RaMa - 09-27-2005, 08:50 PM
[No subject] - by stalin - 09-27-2005, 09:13 PM
[No subject] - by vasisutha - 09-28-2005, 04:23 PM
[No subject] - by vasisutha - 09-28-2005, 04:43 PM
[No subject] - by stalin - 09-28-2005, 05:27 PM
[No subject] - by stalin - 09-28-2005, 05:35 PM
[No subject] - by Mathan - 09-28-2005, 08:38 PM
[No subject] - by Muthukumaran - 09-29-2005, 07:13 AM
[No subject] - by stalin - 10-08-2005, 04:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)