Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தங்கரின் வரவு ப்ளஸ் ஒன்று இல்லை.., ப்ளஸ் 100...!
#1
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி




ஆரம்ப அரைமணி நேரம் அப்பாடா(சாமி)! அதன்பின் கதைக்குள் நம்மை மெல்ல இழுத்துக் கொள்கிறார் தங்கர்பச்சான். குடும்ப கதைகளை சொல்கிற இயக்குனர்கள் குறைந்துவிட்டார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் தங்கரின் வரவு ப்ளஸ் ஒன்று இல்லை.., ப்ளஸ் 100...!

உருட்டிய கொழுக்கட்டை மாதிரி இருக்கிற ஒருவர் ஹீரோவாக களமிரங்க தைரியம் வேண்டும். (பார்க்கிற நமக்கும்) என்ன மாயமோ, அதிலேயும் வெற்றி கண்டிருக்கிறார் தங்கர்.

தமிழ் வாத்தியாரான தங்கர்பச்சானுக்கு இரண்டு எல்லைகள். ஒன்று பொறுக்கியாக ஊர் சுற்றுவது. திருந்துவார் என்று ஐயப்பன் கோவிலுக்கு அனுப்பினால், திரும்பி வந்து முழு சாமியாராகிவிடுவது. மனைவி குழந்தைகள் பட்டினியால் திண்டாட, மனிதர் திருவண்ணாமலைக்கு சிவதரிசனம் செய்ய கிளம்பிவிடுகிறார். சன்யாசம் என்ன தருகிறது என்பது க்ளைமாக்ஸ்.

எக்குதப்பாக நடந்து கொள்வதையும், பிறகு மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதையும் சினிமாவிலும் செய்திருக்கிறார் தங்கர். அச்சு அசலாக பொருந்தியிருக்கிறது. அதிலும், ÔÔஉள்ளே வாÕÕ என்று ஒரு வார்த்தை சொல்ல மறுக்கும் மனைவியை கெஞ்சுவதும், அப்பா மாமனார் என்று முக்கிய உறவுகளாவது தன்னை குடும்பத்தோடு சேர்த்து வைக்காதா என்று கதறுவதுமாக மனசுக்குள் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் தங்கர். சன்யாச வாழ்க்கையில் குடும்பத்தையும், குடும்ப வாழ்க்கையில் சன்னியாசத்தையும் நினைத்து அவர் தடுமாறுவது இயல்பான சித்தரிப்பு.

தங்கரின் மனைவியாக நவ்யா. மாடர்ன் உடையில் டூயட் பாட வேண்டிய வயசு. ஆனால் இந்த உயிரோட்டமுள்ள வேடத்திற்காக தன்னையே அற்பணித்திருக்கிறார். அற்புதமான நடிப்பு. குழந்தைகளின் உண்டியலை கூட விட்டு வைக்காமல் அபேஸ் பண்ணும் தங்கரை நினைத்து குமுறி, வீட்டில் உள்ள சாமி படங்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து சாமியாடுகிறாரே.. பின்-டிராப் சைலண்ட்டில் திகைத்து போகிறது தியேட்டர்.

பாராட்டபட வேண்டிய இன்னொருவர் பிரமிட் நடராஜன். பிள்ளையை பெத்தா கண்ணீரு... மருமகளுக்கும் சேர்த்து வடிக்கிற அற்புத கேரக்டர்.

காமெடி என்ற பெயரில் இவர்கள் அடிக்கிற கூத்தில்தான் மிளகாய் பொடியை தேய்த்து குளித்த எரிச்சல். ஆனாலும் மும்பையிலிருந்து திரும்பிய கஞ்சா கருப்பு, தாய் மண்ணுக்காக அத்தனையையும் இழந்து தவிப்பது குபீர்!

இளையராஜாவின் இசையில் பின்னணி இசை சேர்ப்பு நிலாச்சோறு.

இந்த அப்பாசாமி மலையாள தழுவல்தான். ஆனாலும் தைரியமாக தமிழுக்கு படைத்த தங்கரை பங்கமில்லாமல் பாராட்டலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
தங்கரின் வரவு ப்ளஸ் ஒன்று இல்லை.., ப்ளஸ் 100...! - by SUNDHAL - 09-28-2005, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)