Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே!
#1
நமது ஈழத்து கவிஞர் புதுவை இரத்தினதுரயின் பூவரசம் வேலியும் புலினிக் குஞ்சுகளும் கவிதை தொகுப்பில் இருந்து.......


நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்;
கண்களிலே
பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர்.
எங்களுடன்
பேசிக்களித்தீர்; போய்விட்டீர்.
தாயகத்தில்
வீசிவரும் காற்றில்
விரித்த சிறகெடுத்து
தூரப் பரந்துவிட்ட துணிவுப் பறவைகளே!
ஈரவிழியிங்கு எமக்கின்னும் காயவில்லை.
ஊரறியோம்
உங்கள் உறவறியோம்
தந்தையிட்ட பேரறியோம்
ஆனாலும் புகழறிந்து நிற்கின்றோம்.
நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு மாலையிட்டு
நஞ்சணிந்தோம்.
நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்.
தம்பியென்ரும்;
அண்ணன் தங்கையென்ரும்
எங்களுக்கோர் வம்சவழி தோன்ற வாழ்ந்தோமே;
ஒன்றாகி
வந்தபகை வீழ்த்த
வரிசையிட்டு போனோமே.
செங்குருதி பாய்ந்து திசை சிவந்து
எதிரிகளின்
தங்கங்கள் யாவும் தணலிற் கருக்கியபின்
வென்ற களிப்பில் வீடு வந்தோம்.
அன்றிருந்து
உம்மை எவ்விடத்தும் காணலையே.
கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய்
சொல்லுகிறார்
உங்கள் தேகம் தூங்காதே.
மொட்டவிழும் முகம் தெரியும்
கல்லறைக்குக்
கிட்டவர உங்கள் கண் தெரியும்
வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து
எம்மை உயிர்ப்பிக்கும்.
இனிக் கூற்றெனெவே வரும்பகையைக் குடிப்போம்
வென்றிடுவோம்.
Reply


Messages In This Thread
தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே! - by Jenany - 09-28-2005, 10:19 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)