11-12-2003, 03:04 PM
Ilango Wrote:Sujatha in Vigadan Wrote:கீழ்க்காணும் சொற்கள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தவை?மருவி வந்தவை என்று சொல்வதே சரியானது. ஏனெனில் நீங்கள் எழுதியது மாதிரியான சொற்பிரயோகங்கள், நீங்கள் குறிப்பிடும் மொழியிலேயே சில வேளை காணமுடியாது.
கத்தரி, அவியல், குண்டான், தொப்பி, பில்லி, மங்குஸ்தான், பீங்கான், ஏலம், ஓரை, கடுதாசி, கக்கூசு, வோட்டு.
கீழ்க்காணும் சொற்கள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தவை?
என்பதற்கு சுஜாதா ஆனந்தவிகடனில் இப்படி எழுதியுள்ளார்.
கத்தரி, (தெலுங்கு)
அவியல், (மலையாளம்)
குண்டான்,(மராட்டி)
தொப்பி,(உருது)
பில்லி, (சிங்களம்)
மங்குஸ்தான்,(மலாய்)
பீங்கான், (சீனம்)
ஏலம், (அரபு)
ஓரை, (கிரீக்)
கடுதாசி, (போர்த்துகீசு)
கக்கூசு, (டச்சு)
வோட்டு (ஆங்கிலம்)
(இளங்கோ சொல்வது போல மருவி வந்ததாக எழுதாமல் விடப்பட்டிருக்கலாம்.)
இது பற்றிய மாறுபட்ட தேடல்கள் இருக்கிறதா , இல்லையா என்பது கிடைத்தால், தெரிந்து கொள்வது பலருக்கு பயனுள்ளதாகும்.
தெரிந்தால் எழுதுங்கள்.............

