09-28-2005, 07:07 AM
படத்தின் வெற்றி தோல்வியில் ஹீரோயின்களுக்கும் பங்கு உண்டு
<img src='http://www.cinemaexpress.com/images/15thrisha1.jpg' border='0' alt='user posted image'>
ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஐந்தாவது தளத்தில் "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தின் ஷூட்டிங்! அதில் "ஜெயம்' ரவியுடன் நடித்துக் கொண்டிருந்தார் த்ரிஷா.
* அவரிடம், ""அதென்ன இந்தப் படத்துக்கு இப்படியொரு டைட்டில்?'' என்றோம்.
""ஆமா, புதுசா, க்யூட்டா இருக்கட்டும்னு இப்படியொரு டைட்டில் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். இந்த டைட்டில் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தப் படத்துக்காக வெளில எங்கேயும் இடம் தேடாம இங்கேயே பிரம்மாண்ட செட் போட்டிருக்காங்க...'' என்றார் த்ரிஷா உற்சாகமாய்.
* ""நீங்கள் தெலுங்கில் நடிச்ச "வர்ஷம்' சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு. அதையே தமிழில் "மழை'ன்னு எடுக்கிறாங்க. அதில ஏன் நீங்க நடிக்கலை?''
""வர்ஷம் சூப்பரா ஓடுச்சு. அதில நான் நல்ல நடிகைன்னு பெயரும் வாங்கினேன். அதனால தெலுங்கில நிறைய ஆஃபர்ஸ் கிடைச்சது. அதேக் கேரக்டர்ல தமிழிலும் நடிக்கக் கேட்டபோது, ஒப்புக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனால் டேட்ஸ் பிராப்ளமா இருந்ததால ஒத்துக்க முடியல.
அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் மழையில் நனையற மாதிரி நிறைய சீன் வரும். ஏற்கனவே "வர்ஷம்' படத்துக்காக மழையில் நனை நனைன்னு நனைஞ்சதுல உடம்புக்கு முடியாம போச்சு. இந்த காரணங்களால அதில் நடிக்க ஒத்துக்கலை''.
* ""ஜெயம் ரவியோடு "மழை' படத்தில் நனையாம இப்போ "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தில் ஜோடி சேர்றீங்க. இந்த அனுபவம் எப்படி இருக்கு?''
""இப்பத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சிருக்கு. ரவி ரொம்ப நல்லா பண்றாரு. இந்தப் படம் பிரபுதேவா ஸôர் டைரக்ஷன்ல "நூ ஒஸ்தானண்டே ஒதன்டானா?' (நீ வந்தா வேணான்னா சொல்றேன்?) என்ற தெலுங்குப் படத்தோட ரீ-மேக். அதில் சித்தார்த் கூட நடிச்சிருந்தேன். படம் சூப்பர் ஹிட்டா ஓடிச்சு. அதிலயும் நல்ல பேர் வாங்கினேன்.
தெலுங்குல நான் பண்ணிட்டதால, தமிழ்ல பண்றதுக்கு ஈசியா இருக்கு. நல்ல ஸ்கிரீன் பிளே. பிரபுதேவா வித்தியாசமா ஸ்கிரீன் பிளே அமைச்சு பேர் வாங்கினார். அதை இப்போ எம். ராஜா ஸôர் ஜாக்கிரதையா பண்றாரு. "ஜெயம்' ரவி நல்ல அனுபவம் உள்ள நடிகர், வெரி நைஸ் பெர்சன்''.
* ""தமிழை விட தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?''
""நான் இப்ப தெலுங்கில எம்.எஸ். ராஜு ஸôர் தயாரிக்க, மறுபடியும் பிரபுதேவா ஸôர் டைரக்ஷன்ல "பவுர்ணமி' என்ற படத்தில் நடிக்கிறேன். இதுல பிரபாஸ் ஹீரோ. இது ஒரு பீரியட் ஃபிலிம் மாதிரி. எனக்கு சூப்பர் கேரக்டர். இந்த ஒரு படம்தான் தெலுங்கில பண்றேன்.
தமிழில் பாத்தீங்கன்னா சூர்யாவுடன் "ஆறு', விஜய்யுடன் "ஆதி' பண்றேன். "ஜெயம்' ரவிகூட இந்தப் படம். அங்க போனா, "தமிழ்லதான் நீங்க அதிகம் கான்சன்ட்ரேட் பண்றீங்க'ன்னு சொல்றாங்க. இங்க என்னன்னா இப்படிக் கேட்கறீங்க. இரண்டு மொழியிலயும் பேலன்ஸ் பண்ணிதான் வொர்க் பண்றேன்''.
* ""தமிழ்ல பண்ற படங்களோட கேரக்டர் பற்றிச் சொல்லுங்களேன்?''
""படத்தோட கதையையும், கேரக்டரைப் பத்தியும் சொன்னா சுவாரஸ்யம் இருக்காது. இருந்தாலும் சொல்றேன். "ஆறு' படத்தில் ஹரி ஸôர் டைரக்ஷன்ல நடிக்கிறேன். "சாமி' படத்துல அவர் இயக்கத்துல நடிச்சிருந்தேன். அந்த கேரக்டர் பேசப்பட்டது.
இதுல மாடர்ன் கேர்ளா நடிக்கிறேன். விஜய் ஸôர்கூட நடிக்கும் "ஆதி' படம் சூப்பர் ஸ்டோரி. ஏற்கனவே நாங்கள் நடிச்ச "கில்லி' மாதிரி எங்களை சென்டர் பண்ணியுள்ள ஸ்கிரீன் பிளே.
"சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தில் க்யூட்டான சேலஞ்சிங்கான ரோல். தமிழ் ரசிகர்கள் என்னை இப்படியொரு கேரக்டரில் பாத்திருக்க மாட்டாங்க. புதுமையான கேரக்டர்.
* ""தமிழ்ல உங்க இடத்தை வேற யாராவது பிடிப்பாங்கன்னு எப்பவாச்சும் தோனுமா?''
""தமிழ்ல சரியான வாய்ப்புக்கள், கேரக்டர்கள் அமையாததனால தான் தெலுங்குக்குப் போனேன். அங்க நல்ல வாய்ப்புகள் கிடைச்சது. ஆனால் இப்ப தமிழ்லயும் நல்ல கேரக்டர்கள் கிடைக்குது. அதனால தமிழ், தெலுங்கு இரண்டுலயும் நடிக்கிறேன்.
இரண்டு மொழியிலும் உள்ள ரசிகர்கள் என்னை மறக்க முடியாத அளவுக்கு கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். அதனால் என் இடம் எங்கிட்டயேதான் இருக்கும்''.
* ""ஒரு படத்தோட வெற்றி தோல்வியில் ஹீரோயினுக்கும் பங்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா?''
""கண்டிப்பா இருக்கு. பொதுவா படத்தை மார்க்கெட் பண்ணுவது ஹீரோவை வைத்துத்தான் என்றாலும், ஹீரோயின் யாருன்னு ஆடியன்ஸýம், டிஸ்டிரிபியூட்டர்ஸýம் கேட்கத்தான செய்யறாங்க. அதனால ஹீரோயின்களுக்கும் வெற்றி தோல்வியில் பங்கு உண்டு''.
* ""உங்களோட வெற்றிக்கு உங்க அம்மா உமா கிருஷ்ணனை தவிர வேறு யார் யார் காரணம்னு நினைக்கிறீங்க?''
""லக்கும் ரொம்ப முக்கியம்! ரெண்டாவது டேலண்ட். இதையெல்லாம்விட ஆடியன்ஸýம் நம்மை விரும்பனும். அதுதான் ரொம்ப முக்கியம். ஆடியன்ஸýக்குப் பிடிச்சுப் போச்சுன்னா வெற்றி நிச்சயம்''.
* ""இன்றைய இளைய தலைமுறை நடிகைகளில் பலர் ஃப்ரெண்ட்ஸô இருக்கிறதில்லையே! இதுக்கு என்ன காரணம்?''
""எனக்கு தெலுங்கு ஃபீல்டுல நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. தமிழ்ல கம்மிதான். தெலுங்குல போட்டி இருந்தாலும் நட்புடன் பழகுகிறார்கள். ஒவ்வொருத்தரும் ஜாலியா பேசிக்குவாங்க. நடித்த பாத்திரங்களைப் பத்தி விவாதித்து விமர்சனம் பண்ணுவாங்க. இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.
* ""ரஜினியின் "சிவாஜி' படத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா?''
""ரஜினி ஸôர் படத்தில் நடிக்க யாருக்குத்தான் ஆசையில்லை? வாய்ப்பு கிடைக்கணுமே? எப்போதும் நான் முழுமையாக கால்ஷீட்ஸ் கொடுக்கிறதில்லை. நல்ல படங்கள் வந்தால் அதில் நடிப்பதற்காக பத்து அல்லது பதினைந்து நாட்களைத் தனியாக ஒதுக்கி வைப்பேன். ரஜினி, கமல் ஸôர் படங்கள் வந்தால் அதில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.''
* ""நீங்களும், விஜய்யும் பொருத்தமான ஜோடி என்று பேசப்படுகிறதே?''
""நல்ல விஷயம்தானே! கேட்க சந்தோஷமாக இருக்கு. நான் விஜய்யுடன் நடித்த "கில்லி', "திருப்பாச்சி' படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கு. இப்போது "ஆதி' படத்தில் அவரோட நடிச்சிட்டிருக்கேன்.
அந்தக் காலத்திலிருந்தே இதுபோல ராசியான ஜோடி என்பது இருக்கத்தான் செய்யுது'' எனச் சொல்லிவிட்டு சிரித்த த்ரிஷாவை கோ-டைரக்டர் பாலமுரளி "ஷாட்' ரெடி என்று அழைக்க, நமக்கு "பை பை' சொல்லி விடைபெற்றார்.
Cinema Exp

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>