Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் "கோழி திருடன்''
#1
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கும். சில நாடுகளுக்கு இயற்கை சீற்றங்களால், சில நாடுகளுக்கு தீவிர வாதத்தால் இருக்கலாம். ஆனாலும் தற்போது இயற்கை சீற்றத்தை விட பெரும் பான்மையான நாடுகளில் தீவிரவாதத்தால்தான் அதிகப்பிரச்சினை.

சமூகத்தைக் கெடுக்கும் குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு நாட்டிலும் புதுப்புது சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. என்னதான் சட்டங்கள் வகுத்தாலும் சில குற்றவாளிகள் போலீசுக்கும் ராணுவத் துக்கும் தண்ணி காட்டிவிட்டு வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொள்வார்கள். இப்படி வெளி நாடுகளில் ஒளிந்து கொண்டிருக்கும் குற்றவாளிகளை பிடிக்க சர்வதேச குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கப் படும்.

உலகில் உள்ள குற்றவாளிகள் அடங்கிய இந்தப் பட்டியலில் 7 கோழிகளை திருடிய திருடன் ஒருவரும் உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ருமேனியா நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கிழக்கு ருமேனியாவில் இசி நகரில் வசித்த ஒருவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள கோழிப்பண்ணையில் 7 கோழிகளை திருடி உள்ளார். திருடியது இவர்தான் என்று கண்டு பிடிக்கப்பட்டு இவர் மீது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே போலீசில் இருந்து தப்பிக்க விரும்பியவர் பக்கத்து நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். எனவே இவரது பெயர் சர்வதேச குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டது.

வெளி நாட்டுக்கு தப்பி ஓடியவர் நான்கு ஆண்டுகால இடை வெளிக்கு பின்னர் அண்மையில்தான் தனது நாட்டுக்கு திரும்பினார். அப்போது நாட்டின் எல்லையில் இவரை சோதனையிட்ட எல்லைப் பாதுகாப்பு படையினர் இவர் சர்வதேச குற்றவாளி என்று முடிவு செய்தனர்.

இதன்பின் இவரிடம் விசாரணை செய்ததில் கோழி திருடியவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் 7 கோழிகளை திருடியதற்காக மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றால் கோழி திருட்டுக்கு இந்த தண்டனை ரொம்ப ஓவர் என்று, ஆனால் "இதைப் போன்ற தவறுகளுக்கு தண்டனை குறைவாகக் கொடுக்கப்பட்டால் பெரிய தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். தண்டனை சற்று கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும் என்கின்றனர்'' அந்த நாட்டு போலீஸ்காரர்கள்.

Thanks:Thanthi..............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் "கோழி திருடன்'' - by SUNDHAL - 09-27-2005, 01:23 PM
[No subject] - by vasisutha - 09-27-2005, 06:47 PM
[No subject] - by RaMa - 09-27-2005, 09:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)