Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மண்டைதீவில் பொங்கு தமிழ் பரப்புரைக்காச் சென்றோர் படையினரால்
#1
<b>மண்டைதீவில் பொங்கு தமிழ் பரப்புரைக்காச் சென்றோர் படையினரால் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு </b>
http://www.sankathi.net/images/stories/sep...ed_2_return.jpg
http://www.sankathi.net/images/stories/sep...d_2_return1.jpg
http://www.sankathi.net/images/stories/sep...d_2_return2.jpg
http://www.sankathi.net/images/stories/sep...d_2_return3.jpg

இன்று காலை மண்டைதீவிற்கு பொங்கு தமிழ் பரப்புரைகளிற்குச் சென்ற குழுவினர் மண்டைதீவுச் சந்தியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காலையில் சென்ற உயர் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களே இவ்வாறு துப்பாக்கி முனையில் மிரட்டபப்பட்டு திருப்பி அனுப்பப்ட்டுளளனர்.

உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறி இவர்களை உள்ளே செல்ல அனமதிக்க முடியாதென கடற்படையினா தடுத்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தைவிட்டு தாம் நகரப் போவதில்லையெனக் கூறி இவ் அளைஞர்கள் தமது ஊர்திகளை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு அந்த இடத்திலேயே இருந்து தமது உரிமைக்காக வாதாடினார்கள்

கடற்படையினர் தமது துப்பாக்கிகளை சுடுநிலமைக்கு கொண்டு வந்து சென்றவர்களை விரட்டிய போதிலும் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்து தடை முகாமின் முன்னால் இருந்து கொண்டார்கள்.



யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.கNஐந்திரன், மு.சிவநேசன் ஆகியோர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து கடற்படையினருடன் கலந்துரையாடிய போதிலும் உள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இராணுவத்தினர் மற்றும் சம்பந்தபபட்டவர்களுடனும் கலந்துரையாடினார்கள்.
Reply


Messages In This Thread
மண்டைதீவில் பொங்கு தமிழ் பரப்புரைக்காச் சென்றோர் படையினரால் - by mayooran - 09-27-2005, 11:25 AM
[No subject] - by Danklas - 09-27-2005, 11:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)