Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழக போன் எண்ணை கண்டுபிடிக்க
#1
போன் டைரி தொலைந்துவிட்டால் பெரிய தலைவலிதான். குறிப்பாக மொபைல் போன் வைத்திருப்பவர்கள் தற்போது மொபைல் போனிலேயே எண்களை வைத்திருப்பதால் மொபைல் கையில் இல்லாத நேரத்தில் போன் எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்


போன் எண்களை தற்போது பி.எஸ்.என்.எல்., தனது இன்டர்நெட் முகவரியிலேயே வைத்துள்ளது : http://tamilnadu.dotindia.com/

இந்த தளத்தில் உள்ளூர் தவிர வெவ்வேறு மாவட்டங்களில் கூட உள்ள போன் எண்களை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஒரே விஷயம் போன் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தினுடையதாக இருக்க வேண்டும்.

டெலிபோன் என்கொயரி எனும் பகுதிக்கு சென்று நீங்கள் பெயர் கொடுத்து எண்ணையோ முகவரியோ பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு கல்லுõரியின் பெயரை இங்கு தேடும் போது அந்த கல்லுõரியின் பெயரில் பதிவாகி உள்ள டெலிபோன் எண்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. மேலும் முகவரி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

பி.எஸ்.என்.எல்., வழங்கும் சேவைகள், கட்டணங்கள் ஆகியனவும் இத்தளத்தில் கிடைக்கின்றன.

பி.எஸ்.என்.எல்., முகவரி இந்தியா முழுவதும் தேட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய. முகவரி: http://bsnl.co.in/

இந்த தளத்தில் மாநிலங்கள் வாரியாக நீங்கள் டைரக்டரியை தேர்வு செய்து போன் எண்ணை கண்டறிந்து கொள்ள முடியும் என்பது சிறப்பு அம்சம். எஸ்.டி.டி., மற்றும் ஐ.எஸ்.டி., கோட் எண்களை நீங்கள் இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
தமிழக போன் எண்ணை கண்டு - by சாமி - 11-11-2003, 09:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)