09-26-2005, 08:44 AM
RaMa Wrote:இன்னொரு நல்ல நகைச்சுவை. வாசித்து விட்டு கைதட்டுங்கள்...
ஒரு பெற்றோல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர் நாட்டுக்கு புதிது. ஆகவே ஆங்கில மொழி கொஞ்சம் அப்படியும் இப்படித்தான். அப்போது வெள்ளைக்கார மனிதர் வந்து 20 டொலருக்கு காஸ் அடித்து விட்டு 20 டொலரை கொடுத்தான். இவரும் வாங்கி விட்டு தனது அடுத்த அலுவலை கவனிக்க தொடங்கினார். அந்த மனிதன் அசையமால் இருப்பதை பார்த்து விட்டு என்ன என்று சைகையால் கேட்டார். அவன் சொன்னாhன் 50 டொலர் தந்தேன் மிகுதியை தா என்று.
உடனே இவர் இல்லை என்று வாதாட மனேஐர் அவ்விடம் வந்து விசயத்தை கேட்டறிந்தார்.
மனேஐர் இவன் சொல்வது உண்மையா? 50 டொலரா இவர் தந்தர் என்று கேட்டான்.
அதற்கு இவர் நோ நோ கி இஸ் ரவுண்டிங் ரவுண்டிங் என்றான்.மனேஐருக்கு ஒன்றுமே புரியவில்லை.
உடனே ஆங்கிலம் தெரிந்த ஒரு தமிழ் இளைஞனை கூப்பிட்டு அவனை விசாரிக்கச் சொன்னார். அவனும் என்ன நடந்தது என்று கேட்க இல்லை மாச்சான் இவன் சுத்துக்கின்றான் என்று சொல்ல இந்த மனேஐருக்கு விளங்குது இல்லை என்றானாம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::


