Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்கொலைகளை தடுக்க வழி என்ன?
#29
தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனிதமனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான்.

உலகில் வருடந்தோறும் நடக்கும் இயற்கை žற்றங்களை விட... நடைபெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட... பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினைவிட இன்று உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையான நோயால் இறப்பவர்களை விட தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதே உண்மை என்கிறார் தமிழ்நாடு மாநில மனநலசங்கத்தின் முன்னாள் செயலாளர் எஸ்.எம். பதூர்மொய்தீன்.

உலகம் முழுவதும் வருடத்திற்கு குறைந்தது பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற புள்ளி விவரம் நம்மை திகைக்க வைக்கிறது. எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை இன்னும் கூடிக்கொண்டே போகும் நிலைதான் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு ஒரு லட்சத்துபத்தாயிரம் பேர்களுக்கு அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் உலகில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பத்து சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள் என்பது அதிர்ச்சியாகதான் உள்ளது.

இன்று நாம் மருத்துவ உலகில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறோம். உடல் சம்மந்தப்பட்ட மற்றும் மனம் சம்மந்தப்பட்ட ஆய்வுகளில் வெற்றி பெற்றுள்ளோம்.

அந்த வகையில் மனநோயாக கருதப்படும் தற்கொலைஇ அல்லது தற்கொலைபடை என்று கூறிக்கொள்பவராகட்டும்இ இவர்களுக்கு எல்லாம் உளவியல் ரீதியிலான சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. தற்கொலை எண்ணம் மனதில் உதிப்பது என்பதே ஒரு மனநோய் என்பதும் இதற்கு மனநல மருத்துவர்களை கட்டாயம் அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நிறைய பேர்களுக்கு தெரிவதில்லை.

இன்றைய நம் வாழ்க்கை முறையில் பல்வேறு பிரச்சினைகள்இ சிக்கல்கள்இ குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. நாகரீகம் வளர வளர நமக்குள் பல்வேறு விதமான சிக்கல்களும் உருவாகி வருகின்றன. அத்தகைய சிக்கல்களைத் தீர்க்க வழி தெரியாத பட்சத்தில்இ அதற்கு ஒரே தீர்வு தற்கொலை செய்து கொள்வதுதான் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.

நாம் யார்இ எதற்காக பிறந்திருக்கிறோம்இ இந்த பூமியில் பிறந்து என்ன செய்திருக்கிறோம்இ பிறருக்கு என்ன பயன் என்ற கேள்விகளை நமக்குள்ளே கேட்டிருக்கிறோமா.

அதனை மேம்போக்காக உணர்ந்தவர்கள் அல்லது பிறர் மூலமாக உணர்ந்து கொண்டவர்களே வாழவேண்டும் எப்படியும் வாழவேண்டும்இ வாழ்க்கையில் சாவதற்குள் எதையாவது சாதித்து விட்டுச்சாகவேண்டும் என்ற மனபக்குவத்திற்கு வருகின்றனர். பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது. கடமை இல்லையென்று எந்த மனிதனும் மறுத்துவிட முடியாது. கடமைகள் வேறுபடலாம்.

மனிதனுக்கு பிரச்சினைகள் என்றும் ஒழியப்போவதில்லை. அது சாகும் வரையில் வெவ்வெறு வடிவங்களில் இருந்து கொண்டேதான் இருக்கும். நம்மைச்சுற்றி வலம் வந்து கொண்டேதான் இருக்கும். அந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவனே மனிதனாகிறான்.

பிரச்சினைகளை கண்டு பயப்படுகிறவன் கோழையாகிறான். அந்த கோழைத்தன எண்ணமே அவனை தற்கொலை எண்ணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

சிலர் தற்கொலை செய்து கொள்வதனை வீரதீரச் செயலாக நினைக்கின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு மிகுந்த துணிவுவேண்டும் என்பார்கள். இதெல்லாம் அபத்தம்.

அப்படி துணிவு மிகுந்தவர்களாய் இருந்தால் பிரச்சினைகளை எதிர்த்து வாழ்ந்துகாட்ட வேண்டுமே தவிரஇ கோழைத்தனமாக தற்கொலை செய்து கொள்ளுதல் கூடாது.

தற்கொலையோ அல்லது தற்கொலைபடையோ என்பது மகா கோழைத்தனம் என்பதனை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன்.

தகவல் - http://www.koodal.com/health/health_search...sp?id=257&cat=1
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 07-11-2005, 08:12 PM
[No subject] - by sathiri - 07-11-2005, 08:22 PM
[No subject] - by tamilini - 07-11-2005, 08:23 PM
[No subject] - by shanmuhi - 07-11-2005, 08:25 PM
[No subject] - by Eswar - 07-11-2005, 08:49 PM
[No subject] - by Vasampu - 07-11-2005, 09:54 PM
[No subject] - by Jude - 07-12-2005, 04:14 AM
[No subject] - by kuruvikal - 07-12-2005, 08:38 AM
[No subject] - by ஈழத்துளி - 07-12-2005, 01:22 PM
[No subject] - by MUGATHTHAR - 07-12-2005, 04:55 PM
[No subject] - by வெண்ணிலா - 07-13-2005, 03:06 AM
[No subject] - by வியாசன் - 07-13-2005, 09:22 AM
[No subject] - by stalin - 07-13-2005, 11:28 AM
[No subject] - by Malalai - 07-13-2005, 01:37 PM
[No subject] - by Mathan - 07-13-2005, 01:48 PM
[No subject] - by Malalai - 07-14-2005, 11:38 PM
[No subject] - by Eswar - 07-15-2005, 05:16 AM
[No subject] - by வெண்ணிலா - 07-19-2005, 03:02 AM
[No subject] - by tamilini - 07-19-2005, 08:47 AM
[No subject] - by kuruvikal - 07-19-2005, 08:58 AM
[No subject] - by SUNDHAL - 07-19-2005, 09:10 AM
[No subject] - by Niththila - 07-19-2005, 02:10 PM
[No subject] - by வெண்ணிலா - 07-19-2005, 03:08 PM
[No subject] - by inthirajith - 07-27-2005, 11:05 PM
[No subject] - by inthirajith - 08-04-2005, 10:17 PM
[No subject] - by shanmuhi - 09-26-2005, 08:31 AM
[No subject] - by shanmuhi - 09-26-2005, 08:34 AM
[No subject] - by inthirajith - 09-26-2005, 01:02 PM
[No subject] - by inthirajith - 09-26-2005, 01:47 PM
[No subject] - by ANUMANTHAN - 09-27-2005, 07:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)