Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Ajith விஜய் கூத்து
#1
இந்த நிமிசம் கோடம்பாக்கத்தோட ஹாட்டஸ்ட் டாக் என்னன்னு... அதான் உங்களுக்குத் தெரியுமே! பர்ஸ்ட் க்ளாஸ் சண்டைக் கோழிகளா இருந்த அஜித்-விஜய், திடீர்னு "பாசமலர்'களாகி, ரொம்பக் "க்ளோஸ்'ஆ நின்னு "க்ளோஸ்-அப்' புன்னகையோட போட்டாக்கு போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க! இது யாரு பண்ணுன சதின்னு தெரியாம அவனவன் மண்டையப் பிச்சிக்குனு திரியறான். அதனால சமுதாய நலன்(!) கருதி நம்ம சராசரி ரசிகர் கோயிஞ்சாமி, உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு உலகத்துக்குத் தெரிவிக்கலாம்கிற சேவை மனப்பான்மையோட(!) முதல்ல அஜித்தைச் சந்திக்கப் போறாரு! அடங்கொப்புரானே, அங்கே அஜித்தும், விஜய்யும் ஒரே தட்டில் "மம்மு சோறு' சாப்பிட்டுக் கொண்டிருக்க, சிறிது தலைசுற்றலோடு கோயிஞ்சாமி பேச ஆரம்பித்தார்.

கோயிஞ்சாமி: ஈஸ்வரா... வானும் மண்ணும் ப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா.. நேத்து முறைச்சது இன்னிக்கு "முஸ்தபா' பாடுது உன்னால் ஈஸ்வரா...

விஜய்: அது ஈஸ்வரன் வேலை இல்ல.."பேரரசு'வோட வேலை!

கோயிஞ்சாமி:யாரு , விஜயகாந்தைச் சொல்லுறீங்களா! அவருதான் நடிகர் சங்கத்துல உக்காந்து உங்க ரெண்டு பேருக்கும் பெவிகால் போட்டு உட்டாரா?

அஜித்:இல்ல, இது விஜய் பிரதர் நடிச்ச சூப்பர் ஹிட் "திருப்பாச்சி'யோட டைரக்டர் பேரரசு.

கோயிஞ்சாமி: ஆகா...இருக்கட்டும் இருக்கட்டும். ஆமா "சிவகாசி' தமிழ்நாட்டுல இருக்கு! "திருப்பதி' ஆந்திராவுல இருக்கு! எப்படி கனெக்ஷனாச்சு?

அஜித்: பிரதர் விஜய் மன்சுல "அன்பு' இருக்கு. என் மன்சுல "பாசம்' இருக்கு. அதான்.

கோயிஞ்சாமி:ஏம்ப்பு, அப்ப இவ்ளோ நாள் அந்த "அன்பு' என்ன அமெரிக்காவிலயா இருந்துச்சு. "பாசம்' என்ன பாயசம் சாப்பிடப் போயிருந்துச்சா!

விஜய்:இல்லீங்கண்ணா, ஏன் இப்ப தேவையே இல்லாம டென்ஷன் ஆகுறீங்க?

கோயிஞ்சாமி:எப்பா , இவ்ளோ நாள் படத்துக்கு படம், ஸீனுக்கு ஸீன், அவரை நீயும், உன்னை அவரும், மாத்தி மாத்தி வசனத்தால துவைச்சு தொங்கவிட்டுக்கிட்டு இருந்தீங்களே, அது ஏன்?

விஜய்<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->ஆச்சரியத்தோடு) அப்படியா!

அஜித்<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->விஜய் தோளில் கை போட்டுக் கொண்டே) நெசமாவா?!

கோயிஞ்சாமி: அடப்பாவிகளா! (தன்னைத் தானே கிள்ளிப் பார்த்து "ஆ'வென அலறி) புஷ்-சதாம், இந்தியா-பாகிஸ்தான், திமுக-அதிமுக மாதிரி நேத்து வரை நல்லா இருந்த பசங்க மூளையைக் குழப்பி வுட்டாங்களே!

விஜய்:பிரதர் அஜித் இருக்காரே, அவரு ரேஞ்சுக்கு என்னால நடிக்க முடியுமா! நானே அவரைப் பாத்துத்தான் நடிக்கவே கத்துக்கிட்டேன். நான் அவரைப் போயி தப்பாப் பேசினதா புரளி கௌப்பாதீங்க, ப்ளீஸ்ண்ணா!

கோயிஞ்சாமி: வ்வாவ்வாவ்வா..(வாயில் அடித்துக்கொண்டே) அப்ப "என்ன மட்டுமில்ல, என் இமேஜைக் கூட எவனாலயும் ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு குஷியா வசனம் பேசனீங்களே, அதை என்னன்னு சொல்லுறது.

விஜய்:அது டைரக்டரோட வசனம். கண்டதையும் லிங்க் பண்ணி எங்க பாசத்தைப் பஞ்சராக்கணும்னு நெனைக்காதீங்க, அது நடக்காது. இனிமே நான் நடிக்கப் போற படத்துக்கெல்லாம் அஜித் பிரதர்தான் கதையே கேக்கப் போறாரு. (அஜித்தின் கன்னத்தை தன் கைகளால் செல்லமாகக் கிள்ளி முத்தமிடுகிறார்.)

கோயிஞ்சாமி<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->அஜித்தைப் பார்த்து) "உனக்கென்ன, உனக்கென்ன'ன்னு தியேட்டர்ல உக்காந்து படம் பாக்கறவன் கண்ணைக் குத்துற மாதிரி விரலை நீட்டி நீட்டி பாடுனதோட அர்த்தம்...

அஜித்:அப்படியொரு பாட்டைப் படத்துல வைக்கச் சொல்லி பிரில்லியண்ட் ஐடியா கொடுத்ததே பிரதர் விஜய்தான். அதுக்காக என்னோட ரேஸ் காரையே அவருக்கு கிஃப்ட் பண்ணுனேன். இங்க பாருங்க. சும்மா அதை இதை சொல்லி எங்க மன்சை கலைக்க திட்டம் போடாதீங்க. நீங்க கௌம்பலாம்.

(விஜய்-அஜித் இருவரும் தள்ளிச் சென்று ஓவர் பாசத்தோடு பேச ஆரம்பிக்க கோயிஞ்சாமி தள்ளி நின்று கவனிக்கிறார்.)

விஜய்<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->அஜித்திடம் ) "ஜனா' மாதிரி ஒரு சூப்பர் படம் ஓடலையேன்னு நான் ரொம்ப ஃபீல் பண்ணுனேன் பிரதர். நாலு நாள் சாப்பிடவே இல்லை தெரியுமா!

அஜித்: "சச்சின்' படம் சக்கைப்போடு போடணும்னு நான் ரெண்டு மாசம் சனிக்கிழமை விரதம் இர்ந்தேன் தெரியுமா!

கோயிஞ்சாமி<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மனதுக்குள்) ஓ...அதான் தொப்பை குறைஞ்சுதா!

விஜய்: பிரதர் நீங்க நடிக்கப் போற "திருப்பதி' படம் ஓஹோன்னு ஓடுனா நான் கீழ் திருப்பதி டூ மேல் திருப்பதிக்கு குடும்பத்தோட கால்நடையாவே வர்றதா பெருமாளுக்கு வேண்டியிருக்கேன்.

கோயிஞ்சாமி: (மனதுக்குள்) அட தேவுடா!

அஜித்:ரொம்ப தாங்க்ஸ் பிரதர்! நான் கூட என்னோட ஏரியாவுல "சிவகாசி' விஜய் ரசிகர் மன்றம்னு ஒண்ணைத் தொடங்கப் போறேன். வர்ற தீவாளிக்கு உங்களுக்கு கட்-அவுட், போஸ்டர்னு அடிச்சு, உங்க ரசிகர்களோட ரசிகர்களா சேர்ந்து படத்தை தியேட்டர்ல விசிலடிச்சு பார்க்கலாம்னு இருக்கேன். பால் குடம் கூட எடுக்கச் சொல்லி ஷாலினி சொல்லிச்சு!

கோயிஞ்சாமி<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மன துக்குள்) அடங்கொப்புரானே!

விஜய்:எப்படி பிரதர், என்னைவிட சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க. என்னதான் முயற்சி பண்ணனாலும் உங்க லெவலுக்கு என்னால டான்ஸ் பண்ணவே முடியல!

அஜித்:அப்படிப் போடு! இந்தத் "தன்னடக்கம்'தான் உங்க கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விசயம். கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்.

விஜய்:ஹைய்யோ... "தல' இருக்கறப்போ, "வால்' நான் ஆடக்கூடாது. கோலிவுட்ல எந்தவித சப்போர்ட்டும் இல்லாம சுயம்புவா வளர்ந்த ஆள் நீங்கதான் பிரதர். நீங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.

அஜித்:இல்ல பிரதர். நீங்க நடிச்சாலே அந்தப் படம் அத்துக்கிட்டு நூறு, நூத்தம்பதுன்னு ஓடுது. அதனால அடுத்த எம்.ஜி.ஆர், ரஜினி எல்லாம் நீங்கதான். (இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேச வார்த்தைகளை இன்றி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நிற்கிறார்கள்.)

கோயிஞ்சாமி<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மன துக்குள்) விட்டா அடுத்தாப்ல எஸ்.ஏ.சந்திரசேகர், அஜித்தை வைச்சு படம் எடுப்பாரு போல! சரி, இதுக்கு மேல இங்க நின்னா நமக்குத்தான் பைத்தியம் பிடிச்சிரும். நாம கௌம்புவோம்.

(அங்கிருந்து கோயிஞ்சாமி நகர, தூரத்தில் இருவர் சென்று கொண்டிருக்கின்றனர்)

கோயிஞ்சாமி: அட செல்வராகவன், கஸ்தூரி ராஜா மாதிரி தெரியுது. போய்ப் பேசுவோமா! (சிறிது யோசித்துவிட்டு) வேண்டாம்பா, அப்புறம் அவங்க திடீர்னு "சிம்புவை வைச்சு படமெடுக்கப் போறோம், அதான் கதை டிஸ்கஷனுக்குப் போய்க்கிட்டிருக்கோம்'னு சொன்னாலும் சொல்வாங்க. நம்மால தாங்க முடியாது சாமியோவ்!

(இடத்தைக் காலி பண்ணுகிறார்)
ThanksBig Grininamani
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
Ajith விஜய் கூத்து - by SUNDHAL - 09-26-2005, 06:37 AM
[No subject] - by SUNDHAL - 09-26-2005, 06:39 AM
[No subject] - by Thala - 09-26-2005, 08:10 AM
[No subject] - by sooriyamuhi - 09-26-2005, 08:25 AM
[No subject] - by Birundan - 09-26-2005, 08:30 AM
[No subject] - by Senthamarai - 09-26-2005, 08:49 AM
[No subject] - by கீதா - 09-26-2005, 09:50 AM
[No subject] - by Rasikai - 09-26-2005, 12:46 PM
[No subject] - by KULAKADDAN - 09-26-2005, 02:03 PM
[No subject] - by ப்ரியசகி - 09-26-2005, 02:43 PM
[No subject] - by அனிதா - 09-26-2005, 04:08 PM
[No subject] - by RaMa - 09-26-2005, 04:12 PM
[No subject] - by தூயா - 10-10-2005, 01:48 PM
[No subject] - by தூயவன் - 10-10-2005, 01:56 PM
[No subject] - by தூயவன் - 10-10-2005, 01:57 PM
[No subject] - by வியாசன் - 10-10-2005, 02:15 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:22 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 06:10 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 06:15 PM
[No subject] - by Mathan - 10-10-2005, 06:17 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 06:27 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 06:31 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 07:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)