Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரும் புலிகள் - பாகம் 1
#1
கரும் புலி காவியம் - பாகம் 1
ஆசிரியர் : நாவண்ணன்
வெளியீடூ : அறிவு அமுது பதிப்பகம்
யாழ் சாலை
கிளிநொச்சி
முதற் பதிப்பு : மார்ச் 2003-11-11

அழகிய முகப்போவியத்துடன கவிஞர் நாவண்ணன் அவர்கள் எழுதிய கவிதை நூல். எம் இனத்தின் பன்னிரு நெருப்பு மனிதர்களின் சாதனைகளுடன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் இலகு தமிழில், அழகு தமிழில் பதியப்பட்டுள்ளது. மண்ணை மறவறை நேசிப்பவர் மட்டுமல்லாது அனைத்து ஈழத்தமிழரும் படிக்க வேண்டியதொரு அருமையான காவியம்.

"ஊர் கொடுத்தார் புலவருக்க
உவந்தளித்தார் மிடி தீர
தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்
தெரு வெல்லாம் பவனி வர
கார் நிறத்து கரி கொடுத்தார்
காற்று விசைப் பரி கொடுத்தார்"

என்று கவியும் புலவருக்கு நாம் செய்யும் கைமாறாக இக் கவிதை நூலை வாங்கி உற்சாகப் படுத்தி இதன் தொடர்ச்சியாக அவர் மூலம் மற்றும் அத்தனை நெருப்பு மனிதர்களின் வரலாறுகளை சாதனைகளையும் காவியமாக வெளிக் கொணர தூண்டு கோலாயிருப்போம்.
"காவியமாய் புதுப் புறம் பாடி" எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்கு சமர்ப்பிக்க வேண்டும்"

கவிஞரின் இந்த இலட்சியத்தை தொடர்வதற்கு அனைவரும் இக் கவிதை நூலை வாங்கி அவருக்கு உற்சாகமூட்டி உதவிடுவோம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Messages In This Thread
கரும் புலிகள் - பாகம் 1 - by P.S.Seelan - 11-11-2003, 12:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)