11-11-2003, 12:13 PM
aathipan Wrote:அன்பின்;;; அஜீவன்
உங்கள் மனம் நொந்திருந்தால் மன்னியுங்கள்.......
நானோ அங்கிகரிக்கப்படாத கவி
நான் எழுதுபவை எல்லாம் வெறும் கிறுக்கல்கள்தான்..
அவற்றைப்படித்துவிட்டு
நிறையப்பேர் முகம் சுளிப்பது எனக்கு நன்றாக்தெரிகிறது.....
இருந்தும் முயற்சிக்கிறேன்.....
எனது மக்களாவது ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான்
யாழின் பக்கங்களில் கிறுக்கி வைத்தேன்.....
என் காதல்க்கிறுக்கல்களுக்கு கொஞ்சம் எதிர்ப்புத்தான்....
காதலை எடுத்துக்கொண்டது..
காதல் எல்லோரும் வாழ்வில் செய்திருப்பார்கள்....
சலிக்காமல் படிப்பார்கள் என்றுதான்...
அவர்கள் மனதில் பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவந்து முடிந்தால் இரசிக்க வைத்து
என் கிறுக்கல்களுக்கு கவிதைகள் என்ற
அங்கிகாரம் பெற முயற்சித்தேன்.
இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லைத்தான்....
நீங்களும் ஏதேதோ அதன்கீழ் விளையாட்டாக எழுதிவிட்டீhகள்......
அதனால் என் கிறுக்கல்களில் உள்ள பாத்திரங்கள்கேலிக்குரியதாகபோய்விட்டது......
நான் ஏற்படுத்த நினைத்த பாதிப்பு படிப்போர் மனதில் ஏற்படாமல் போய்விட்டது...
ஒரு கலைஞனின் படைப்பை
ஒரு கலைஞன் கேலிசெய்வது
சகஜம் தான்..
ஆனால் உங்கள் நிலை உயர்ந்தது... அல்லவா...
குண்டூசி செய்கின்ற கொல்லனை
கார்கள் செய்கின்ற தொழிலதிபர்
தனக்கு நிகராக எடுத்துக்கொண்டு கேலி செய்வதோ?
விமர்சிப்பதோ நியாயமா?
நீங்கள் என் நிலையில் இருந்து சிந்திருந்தால் நிச்சயமாக எழுதி இருக்க வாய்பில்லை...
வேறு வேலைகளுக்கிடையே
நன்பன் என்ற முறையில் என் கவிதைக்கு ஏதாவது எழுதிவைக்க நினைத்திருப்பீhகள்...
அது வினையாக முடிந்தது....
இருந்தாலும் நம் நட்பு ஒடியவில்லை...
நுனிக்கருமபில் இருந்து உண்பது போல தானே நல்ல நட்பு..
இப்போது இனி;க்காவிட்டாலும் என்றோ இனிக்கும்.. என் எதிர்பார்க்கிறேன்...
இந்நிலையில் நீங்கள் செய்வதாக இருந்த உதவியை நான் ஏற்றுக்கொண்டால்
நான் சுயநலவாதியோ என எனக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடும்....
அதனால் உங்கள்;; உதவியை தற்காலிகமாக நிராகரிக்கிறேன்....
வெறும் நட்பு போதும்.......
கருத்தை மாற்றியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இது போல இனி நடக்காது பார்த்துக்கொள்கிறேன். எனக்கு இது முதலில் தெரியாது.
நான் என் கவிதைகளில் ஒன்றிரண்டைக்கூட மாற்றியுள்ளேன். முதலில் இமேஜாக இருந்தன அவை. என் கவிதை ஊற்று கொஞ்சம் வற்றிவிட்டது. விரைவில்; சந்திப்போம்.
அன்பின் ஆதீபன்,
நட்பு,குடும்பம்.......................இப்படியான பாசங்கள் வேறு,
நீதி,தர்மம்,விமர்சனங்கள் என்பது வேறு.
நீங்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இதுவே எனது நிலை.
[b]<span style='font-size:22pt;line-height:100%'>சொல்லும் கருத்து
நியாயமாக இருந்தால் ஒரு பரதேசியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்.
அநீதியாக இருந்தால் ஆண்டவன் ஆனாலும் எதிர்த்து நில்.
உன்னை ஒருவன் மதித்து அழைத்தால் அவன் வாழ்வது மர நிழலானாலும் போய் அவன் தரும் பழைய கஞ்சியானாலும் ருசி பார்த்து உண்டு,அந்த மனிதனுக்கு மதிப்பளி.</span>
என்று 1971ல் நீதிக்காக போராடி இலங்கை அரசால் நட்ட நடு விதியில் வைத்து துகிலுரிக்கப்பட்டு என் கல்லுாரி வாசலிலேயே உயிரோடு டயர்களால் எரிக்கப்பட்டு கொல்லப்பட்ட என் ஆசான், கலாநிதி.திசாநாயக்க என்ற ஒரு மாமனிதர் என்னுள் விதைத்த கருத்து விதை ஒரு காலும் மாறாது.
என் குடும்பம் ஆனாலும் என் கருத்தில் மாற்றமில்லை.
இது என்னை நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
நேர்மையில்லாத கலைஞனும், அரசியல்வாதியும் ,சமூகசேவகனும்..............ஒன்றும் மேதைகளல்ல வெறும் பிணம்தான்.
aathipan Wrote:அன்பின்;;; அஜீவன்கிறுக்கல்கள்தான் பெரும் சாதனைகளை செய்திருக்கிறது.
உங்கள் மனம் நொந்திருந்தால் மன்னியுங்கள்.......
நானோ அங்கிகரிக்கப்படாத கவி
நான் எழுதுபவை எல்லாம் வெறும் கிறுக்கல்கள்தான்..
அவற்றைப்படித்துவிட்டு
நிறையப்பேர் முகம் சுளிப்பது எனக்கு நன்றாக்தெரிகிறது.....
இருந்தும் முயற்சிக்கிறேன்.....
எனது மக்களாவது ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான்
யாழின் பக்கங்களில் கிறுக்கி வைத்தேன்.....
என் காதல்க்கிறுக்கல்களுக்கு கொஞ்சம் எதிர்ப்புத்தான்....
காதலை எடுத்துக்கொண்டது..
காதல் எல்லோரும் வாழ்வில் செய்திருப்பார்கள்....
சலிக்காமல் படிப்பார்கள் என்றுதான்...
அவர்கள் மனதில் பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவந்து முடிந்தால் இரசிக்க வைத்து
என் கிறுக்கல்களுக்கு கவிதைகள் என்ற
அங்கிகாரம் பெற முயற்சித்தேன்.
உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன் திறமை நிறையவே இருக்கிறது.
1.நீங்களே உங்களை அங்கிகரிக்கப்படாத கவி என்ற தாழ்வு மனப்பான்மையோடு கருதிக் கொள்கிறீர்கள்.
2.யாழில் ஏற்றுக் கொள்வார்கள் என்று எழுதியதாகவும் கூறுகிறீர்கள்.
3.யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை....
யார் நனைநதார்கள் யார் நனைய வில்லை என்று எனக்கு கவலையும் இல்லை......
ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்......
நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....
என்றும் எழுதுகிறீர்கள்.
இதிலிருந்து நான் காண்பது ஒன்றை மட்டுமே.
உங்கள் கருத்துகள் மாறுவதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதும் எதிர்மறை (negative) ஆக உங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செய்கிறீர்கள் என்பதையுமே. இது உங்களுக்கு மட்டுமல்ல எவருக்கும் வெற்றி தராது.
உதாரணமாக புலம் பெயர் நாடுகளில் வாழும் பெரும்பாலானவர்களில் வெற்றிக் கொடி கட்டிப் பறப்பவர்கள்.இலங்கையிலோ ஏனைய நாடுகளிலோ இருந்து வந்த படித்தவர்களல்ல. சர்வ சாதாரணமான படிப்பறிவு குன்றிய,அவரவர் நாடுகளில் தமது சமூகத்தாலேயே ஒதுக்கித் தள்ளப்பட்டவர்கள்.
இவர்களிடமிருந்தது கல்வியோ,வேறு தகதிகளோ அல்ல.
சாதிக்க வேண்டுமென்ற நம்பிக்கையும்,விடா முயற்சியும்.
தங்களால் முடியாததை தங்கள் குழந்தைகளுக்காவது பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற துடிப்பும்தான்.இப்படிப் பட்டவர்களால்தான் தமிழ் புலம் பெயர் நாடுகளில் வாழ்கிறது.
இதுவும் சாதனைதான்.
நீங்கள் நுழையும் போதே, உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்ற மனதோடுதான் வருகிறீர்கள்.
ஒருவனது மன எண்ணங்கள்தான் அவனை முன்னெடுத்துச் செல்கின்றது.இதெற்கெல்லாம் சிக்மன்ப்ரொட்டையா அழைத்து உபதேசம் செய்ய முடியும்.
உங்கள் படைப்பை நான் கேலி செய்யவில்லை.அதை ஏன் நீங்கள் எதிர்த்து எழுதாமல், உங்கள் கருத்தை அழித்து துாய வேசம் போட முனைந்தீர்கள்.
ஒருவனது படைப்புக்கு எதிர்கருத்து சொல்ல இன்னுமொருவனுக்கு உரிமையில்லை என்றால். உங்கள் படைப்பை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்,எங்களிடம் கொட்டாதீர்கள்.எங்களுக்கு வேறு வேலையிருக்கிறது.
அதுமட்டுமல்ல நீங்கள் எந்தவொரு சினிமாவானாலும் சரி,அரசியலானாலும் சரி.........................உங்கள் LIGHTSON மூலமானாலும் சரி,உங்கள் விருப்புகளை, கருத்துகளை முன் வைக்காதீர்கள்.அதை படிக்க எமக்கு ஒன்றும் தலைவிதியில்லை.
aathipan Wrote:இருந்தாலும் நம் நட்பு ஒடியவில்லை...
நுனிக்கருமபில் இருந்து உண்பது போல தானே நல்ல நட்பு..
இப்போது இனி;க்காவிட்டாலும் என்றோ இனிக்கும்.. என் எதிர்பார்க்கிறேன்...
இந்நிலையில் நீங்கள் செய்வதாக இருந்த உதவியை நான் ஏற்றுக்கொண்டால்
நான் சுயநலவாதியோ என எனக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடும்....
அதனால் உங்கள்;; உதவியை தற்காலிகமாக நிராகரிக்கிறேன்....
வெறும் நட்பு போதும்.......
கருத்தை மாற்றியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இது போல இனி நடக்காது பார்த்துக்கொள்கிறேன். எனக்கு இது முதலில் தெரியாது.
நான் என் கவிதைகளில் ஒன்றிரண்டைக்கூட மாற்றியுள்ளேன். முதலில் இமேஜாக இருந்தன அவை. என் கவிதை ஊற்று கொஞ்சம் வற்றிவிட்டது. விரைவில்; சந்திப்போம்.
தன் தவறை தவறென்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத எவரும் எனக்கு நண்பனாகவே முடியாது.
நான் பொய் முகம் காட்டும் நண்பர்களை விட எதிரிகளை நேசிப்பவன்.
எனவே என் எழுத்துக்களால் உங்களை , நீங்களே மறுபரிசீலனை செய்து கொள்ள முடிந்தால் நீங்கள் எழுத்துலகில் நிலைப்பீர்கள்.................
நீங்கள் விரும்பினால் மட்டும், உங்களை சென்னையில் சந்திப்பேன்.
<span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் ஆக்கங்கள் இனி என் கண்களுக்கு தெரியாது.</span>
என்றென்றும் அன்புடன்,
அஜீவன்
_______________________________________________________________________________________________________________________________________
[size=10]தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளாத,ஏனைய விமர்சனங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு மனிதனும் அறிவாளியல்ல.
அஜீவன்

